அன்று ஸ்கூல் ஃபீஸ் கட்ட முடியாத நடிகைக்கு இன்று ரூ 800 கோடியில் பங்களாவா? யார் அவர்?
மும்பை: சிறிய வயதில் ஸ்கூல் ஃபீஸ் கூட கட்ட முடியாமல் தவித்த ஒரு நடிகைக்கு இன்று ரூ 800 கோடி மதிப்பிலான சொத்துக்கள் உள்ளதென்றால் நம்ப முடியுமா? ஆஹா அந்த நடிகை யாரென்று தெரியுமா? எல்லா கான்களுடன் நடித்தவர்தான்.
எந்த துறையாக இருந்தாலும் கஷ்டப்பட்டுதான் முன்னுக்கு வர முடியும். அந்த வகையில் சினிமாவிலும் பலர் சோறு, தண்ணீர் இல்லாமல் கஷ்டப்பட்டு முன்னுக்குவந்து, பின்னர் ஒரு நிலையை அடைகிறார்கள். அதே வேளையில் நெப்போடிஸம் எனப்படும், சீனியர் நடிகர்களின் குடும்பம் ஆதிக்கம் செலுத்துவதும் இருந்துதான் வருகிறது.

இந்த ஆதிக்க சக்திகளுடன் கஷ்டப்பட்டு முன்னுக்கு வர துடிப்போரும் போராடிதான் சினிமாவில் தங்கள் இலக்கை அடைகிறார்கள். இளையராஜா, வைரமுத்து, பாரதிராஜா உள்ளிட்டோர் எல்லாம் அரை வயிறு, கால் வயிறு என கிடைப்பதை சாப்பிட்டுவிட்டு படிப்படியாக இன்று மேதைகளாகியுள்ளனர்.
அந்த வகையில் பாலிவுட் நடிகையின் குடும்பம் சிறு வயது முதலே கஷ்டப்பட்டுள்ளார். வறுமையும் இவரை வாட்டியது. ஒரு கட்டத்தில் பள்ளிக்கு கட்டணம் கட்ட முடியாமல் கூட இருந்ததாக அந்த நடிகையின் தந்தை ஒரு முறை பேட்டியில் தெரிவித்திருந்தார்.
அந்த நடிகை வேறு யாருமில்லை கரீனா கபூர்தான். 25 ஆண்டுகளாக சினிமாவில் கோலோச்சி வருகிறார். இவர் நடிகர் சைஃப் அலிகானை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு இரு பிள்ளைகள் உள்ளனர். 2000 ஆம் ஆண்டு ரெப்யூஜி எனும் படத்தில் அறிமுகமானார்.
அடுத்தடுத்த வெற்றி படங்களை கொடுத்து பிரபலமானார். அவரது மூத்த சகோதரி கரிஷ்மா கபூர் ஆவார். அண்மையில் கரீனாவின் தந்தை ரந்திரி அளித்த பேட்டியில் இரு மகள்களின் பள்ளிக் கட்டணத்தை கூட கட்ட முடியாமல் நான் கஷ்டப்பட்டிருக்கிறேன் என தெரிவித்திருந்தார்.
அதைத் தொடர்ந்து பேசிய கரீனா கபூர், நாங்கள் பாரம்பரிய திரையுலக குடும்பத்தை சேர்ந்தவர்களாக இருந்தாலும் ஒரு கட்டத்தில் வறுமையில் வாடினோம். அப்போது என் சகோதரி கரிஷ்மா லோக்கல் டிரைன், பேருந்துகளில்தான் கல்லூரிக்கு செல்வார். அப்போது பொருளாதார சிக்கலில் இருந்தோம் என தெரிவித்துள்ளார்.
இவ்வாறு வறுமையில் இருந்த கரீனா கபூரின் பங்களா ரூ 800 கோடி மதிப்புடையது. அவருடைய சொத்து மதிப்பு ரூ 400 கோடி முதல் ரூ 500 கோடி வரை இருக்கும் என கூறப்படுகிறது. மேலும் இவரது கணவர் சைஃப் அலிகானின் சொத்து ரூ 1500 கோடி என தகவல்கள் கிடைத்துள்ளன.












Click it and Unblock the Notifications