செல்ல மகள் பிறந்த நாளை எளிமையாக கொண்டாடிய ஜோடிகள்!
சென்னை: இப்ப இருக்கிற சூழ்நிலையில புரிந்து அதற்கு தகுந்தாற்போல மக்கள் செயல்பட ஆரம்பித்து விட்டார்கள்.
அப்படிதான் திரையுலகில் முன்னணி கதாநாயகனாக நடித்துக் கொண்டிருக்கும் கணேஷ் வெங்கட் மற்றும் நிஷா கணேஷ் தங்களுடைய செல்ல மகளுடைய பிறந்த நாளை எளிமையாக அழகாக கொண்டாடி இருக்கிறார்கள்.
தமிழ் சினிமாக்களில் ஒன்றாக நடித்தவர்கள் திருமணம் செய்து கொள்வது ஒன்றும் புதிதல்ல அந்த வகையில் முன்னணி ஹீரோவாக இருந்த கணேஷ் வெங்கட்ராமனும் தொகுப்பாளர் மற்றும் துணை கதாநாயகிகளாக இருந்த நிஷாவின் கிருஷ்ணனும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர் .

ஆடம்பர திருமணம்
இவர்களின் திருமணம் வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது. அந்த அளவுக்கு இது பேசப்பட்டது. ரொம்பவே பேசப்பட்ட அந்த திருமணத்திற்கு அரசியல் பிரமுகர்களும் , திரைப்படத் துறையினரும், பிரபலங்களும் வந்து வாழ்த்தி இருந்தனர். இவர்களின் காதலுக்கு அடையாளமாக கடந்த வருடம் ஒரு பெண் குழந்தை பிறந்தது .அந்த குழந்தைக்கு சமீரா என்று பெயர் வைத்திருக்கிறார்கள்.

குழந்தையுடன் கொஞ்சல்
இந்த குழந்தையுடன் இவர்கள் கொஞ்சி விளையாடும் போட்டோஸ்கள் சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது. ஏற்கனவே நிஷா அவருடைய கணவர் கணேஷ் பிறந்தநாளுக்கு தான் 6 மாத கர்ப்பமாக இருக்கும் போது ஒரு பாடலைப் பாடி பரிசளித்திருக்கிறார். அந்தப்பாடல் "நிலவு எழுந்து வந்த நேரம் நினைவு கசிந்து விழுந்ததோ" என்னும் காதல் வரிகளை கொண்டு அவர்களின் காதலை உணர்த்தியுள்ளது.

குட்டிப் பாப்பா
தற்போது இவர்களின் காதலுக்கு அடையாளமாக அந்தக் குட்டிப் பாப்பாவை கொஞ்சி விளையாடி வருகின்றனர் .அவர்களின் மகளை கடவுளின் வரமாக பார்க்கின்றனர் .அந்த குட்டி பாப்பாவுக்கு சமீபத்தில் பிறந்தநாள் எளிமையா கொண்டாடி இருக்காங்க. அதைப்பற்றி கணேஷ் சந்தோசமாக தன்னுடைய இணையதளத்தில் பதிவிட்டிருக்கிறார் என் மனைவியின் பிறந்த நாள் ஜூன் 28 என் மகளின் பிறந்தநாள் ஜூன் 29.

சந்தோஷ வாரம்
இதுவே எங்களுக்கு மிகவும் சந்தோஷமான வாரமாக தான் அமைந்திருக்கிறது என்று கூறியிருக்கிறார். அந்தக் குட்டிப் பாப்பாவின் பிறந்தநாள் போட்டோஸ்கள் சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது ரசிகர்கள் அந்த பாப்பாவிற்கு ஆசீர்வாதங்களை அனுப்பி இருக்கிறார்கள் அந்த குட்டி பாப்பா செம க்யூட்டா இருக்கு.












Click it and Unblock the Notifications