காளிங்ஸ்... மீனா சிரிச்சாங்களே அது கூட உங்களை பார்த்துதான்.. கவுதம் கார்த்திக் கல கல!
சென்னை : சன் டிவியின் 26 வது பிறந்த நாளில் சிறப்பு விருந்தினர்களாக நடிகர் கவுதம் கார்த்திக், இயக்குநர் முத்தையா வந்திருந்தனர்.
நிகழ்ச்சிக்கு நடிகை மீனா, மயில்சாமி நடுவர்கள். மீனா திடீரென மெருகு கூடி அழகாக இருக்கிறார். வழக்கம்போல ஆதவன் மற்ற காமெடியன்ஸ் செய்யும் காமெடிகளை பார்த்து ரசித்து சிரித்தார் மீனா.

கவுதம் கார்த்திக்கு அப்பா போலவே குரல், நடிப்பு எல்லாமே இயல்பாக வருது. கார்த்திக் தான் வெத்தலை போட்டு ஷோக்குல குப்புன்னு குத்துன மூக்குலன்னு ஒரு பாடல் பாடி இருக்கார்.
அதே போல கவுதம் கார்த்திக் கூட நல்லா பாடுகிறார் என்றாலும், இன்னமும் எந்த படத்திலும் பாட யாரும் அவருக்கு வாய்ப்பு கொடுக்கவில்லை என்பதுதான் உண்மை.
கார்த்திக் நடிப்பு ஒரு யுனிக்... உடன் நடிக்கும் நடிகைகளில் ஆரம்பித்து, கல்லூரி மாணவியர்கள், மாணவர்கள் என்று நிறைய பேர் அவரது ஃபேன். நடிகை குஷ்பூ, நிரோஷா போல நிறைய நடிகைகள் வெளிப்படையாகவே கார்த்திக் ரசிகைன்னு பெருமையா சொல்லி இருக்காங்க.

கார்த்திக் மாதிரி நடிக்க ஆட்கள் தேடினாலும் கிடைக்க மாட்டார்கள். அது அவர் வாரிசு கவுதம் கார்த்திக்குக்கு அமைந்திருக்கிறது.கார்த்திக் போல அழகாகவும் இருக்கார் கவுதம்.
இதை இயக்குனர்கள் யாரும் கவனித்தார்களான்னு தெரியலை. கார்த்திக் குறும்பாக நடிப்பது போல, கதை எழுதி வைத்திருப்பவர்கள், கவுதம் கார்த்திக்கை அணுகலாம்.
சன் டிவி புகழ் ஆதவன், கவுண்டமணி போலவும், கவுதம் கார்த்திக் போலவும் மேட்டுக்குடி படத்தில் வரும் 'இந்து ஐ லவ் யூ" க்கு நடித்து காண்பித்தார்கள். மிக அழகாக கார்த்திக் போலவே இந்து ஐ லவ் யுன்னு திரும்பி கையில் இருந்த பூவை கொடுக்க, ஓடிவந்த மீனா அதை வாங்கிக்கொண்டு, தேங்கஸ் மாமா என்றார்.

காலிங்ஸ் இப்போ நீங்கதானே நான்.. உங்ககிட்ட இருந்துதான் இந்து பூ வாங்கிட்டு போவுது.ஒரு சிரிப்பு சிரிச்சுதே.. அது கூட உங்களை பார்த்துதான்னு நடிக்க, அவரின் நடிப்பு இயல்பாக மிக நன்றாக இருந்தது.
கவுதம் நல்லா பாடுவாருன்னு சொன்னபோது, மீனா எனக்காக ஒரு பாட்டு பாடுங்கன்னு சொன்னார்.மேம் நான் சொல்லியே ஆகணும்.. நீங்க ரொம்ப அழகா இருக்கீங்க.. வந்ததுலேர்ந்தே சொல்லணும்னு நினைச்சேன். சொல்லிட்டேன்னு.. இதற்கு மேல் வேறென்ன வேணும்னு பாடலை பாடினார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications