மகேந்திரன் தமிழ் சினிமாவின் பொக்கிஷம்... நடிகை கவுதமி உருக்கம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: பிரபல இயக்குனர் மகேந்திரன் நேற்று காலமானார். உதிரி பூக்கள் மகேந்திரன் என்றுதான் செல்லமாக அழைப்பார்கள். அவரே கூட நான் இயக்கிய 12 படங்களில் எனக்கு மிகவும் பிடித்த படம் உதிரிப்பூக்கள்.. பிழைகள் குறைந்த படம் என்று சொல்லியிருக்கிறார்.

இயக்குனர் மகேந்திரனுக்கு மிகவும் பிடித்த பெயர் லட்சுமி. தான் கதை வசனம் எழுதி இயக்கும் படங்களில் முக்கிய கதாபாத்திரத்துக்கு லட்சுமி என்று பெயர் வைப்பாராம். தங்கப் பதக்கம் படத்தில் சவுத்திரியின் மனைவி பெயர் லட்சுமி. உதிரிப் பூக்களில் அஸ்வினியின் பெயர் லட்சுமி.

Gauthami pays tribute to Mahendran

அண்ணன் தங்கை சென்டிமென்டை வைத்து மகேந்திரன் இயக்கிய முள்ளும் மலரும் படத்தில் ரஜினி அண்ணனாகவும், ஷோபா தங்கையாகவும் நடித்திருப்பார்கள். ரஜினியை ஒரு வித்தியாசமான கோணத்தில் இந்த படம் காட்டியதை யாராலும் மறக்க முடியாது.

தேசிய திரைப்பட வளர்ச்சி கழகத்தின் நிதி உதவியில் சாசனம் என்ற படம் மகேந்திரனின் இயக்கத்தில் உருவானது. இந்த படத்தில் நடித்த நடிகை கவுதமி கீழ் கண்டவாறு தமது ட்வீட்டர் வலைத்தளத்தில் மகேந்திரனுக்கு அஞ்சலி செலுத்தி உள்ளார். அதாவது...

மகேந்திரன் சார் தமிழ் சினிமாவின் பொக்கிஷம். அவருடைய ஒவ்வொரு படைப்பும் மக்களின் மனதில் நீங்கா இடம் பெற்றவை. அவருடைய 'சாசனம்" படத்தில் நடித்ததற்கு நான் பெருமை படுகிறேன். அவரின் ஆன்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறேன்.

என்று கவுதமி தமிழில் பதிவிட்டுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+