Maharasi Serial: என்னது இது.. காயத்ரி இப்படி கெஞ்சுறா.. மாமாவுக்காக!
சென்னை: சன் டிவியின் மகராசி சீரியலில் தமிழ் மாமாவை விட்டுக்கொடு என்று காயத்திரி ராகினியிடம் கெஞ்சுகிறாள். ராகினி தமிழ் தொட்டு தாலி கட்டின மனைவி.
தமிழ் மனைவியிடமே போயி, தமிழை எனக்கு விட்டுக் குடுத்துடுன்னு கெஞ்சுகிறாள் காயத்திரி எந்த அளவுக்கு அவள் மனசில்தமிழ் மாமாவை நினைச்சுகிட்டு கண்மூடித் தனமா வாழ்ந்துகிட்டு இருக்கிறாள் என்று பாருங்கள்.
அதுக்கு ரோகிணி கிண்டலாக எனக்கு தமிழ் மொழி தவிர வேற மொழி தெரியாது காயத்ரி என்று சொல்கிறாள். என்ன விளையாட்டுத் தனமான கதை...விளையாட்டுத் தனமான டயலாக்ஸ்...

தமிழ் மாமா
மகராசி சீரியலில் தமிழ், ராகிணியை காதலிச்சு கல்யாணம் செய்துள்ளான். ரோகிணி அவனை பிடிக்கவில்லை என்று டிவோர்ஸ் வரைக்கும் போகிறாள். இந்த கேப்பில் தமிழின் முறைப் பெண் காயத்ரி தமிழை கல்யாணம் செய்துக்க விருப்பப் படுகிறாள். அவன் மீது ஏற்கனவே ஆசைப்பட்டுக்கொண்டு இருப்பவள் காயத்ரி.

காயத்ரி வான்மதி
தமிழை காயத்ரி ஒரு புறம் காதலிக்க இன்னொரு முறைப்பெண் வான்மதியம் காதலிக்கிறாள். இருவரில் யார் தமிழுக்கு இரண்டாவது மனைவி என்று ஒரு போட்டி கூட நடக்கிறது. அப்போது பார்த்து வான்மதியை கிணற்றுக்குள் தள்ளி விடுகிறாள் காயத்ரி. அவள் தப்பித்து வந்தது பெரிய கதை.

தமிழ் ராகினி
ராகினி தமிழுடன் வாழ்வதாக வந்துவிட, காயத்ரிக்கு ஏமாற்றமாகப் போய்விடுகிறது. தமிழுக்கு வேறு மாப்பிள்ளை பார்க்க ஆரம்பித்து விடுகிறார் சிதம்பரம். மாப்பிள்ளை வீட்டாரும் பெண் பார்க்க வீட்டுக்கு வர... அலங்காரம் செய்துக் கொண்டு இருக்கும் காயத்ரியை அழைத்து வரும்படி ராகினியிடம் எதுக்கு சொல்லணும் என்று தெரியவில்லை. ஆனால், சொல்கிறார்கள்.

உன்னையும் கிணற்றில்
அப்போதுதான் காயத்ரி ராகினியிடம் தமிழை எனக்கு விட்டுக் கொடுத்துடுன்னு கேட்கிறாள். எனக்கு தமிழைத் தவிர வேறு மொழி தெரியாது என்று கிண்டல் அடித்து ராகினி நிற்க.. வான்மதியை கிணற்றில் தள்ளி இருந்ததுக்கு பதிலாக உன்னை தள்ளி விட்டு இருக்கலாம்னு சொல்லிக்கறா.. பிறகு இரு உன்னை கிணற்றில் தள்ளி விடுகிறேன் என்றும் நினைத்துக் கொள்கிறாள். வன்முறை, குரோதம்.. இதெல்லாம் இன்றைய சீரியல்களில் தவிர்க்க முடியாத விஷயங்கள் ஆகிவிட்டனவே!
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications