மொட்டை மாடியில் காயத்ரி.. கலக்கும் சரவணன் மீனாட்சி முத்தழகு!
சென்னை: மறுபடியும் ஒரு மொட்டை மாடி போட்டோ வலம் வந்திட்டிருக்கு. இதில் கலக்கியிருப்பது சரவணன் மீனாட்சி முத்தழகு.
இந்த லாக்டோன் டைம்ல எல்லாரும் வீட்டிலிருந்து நேரம் போகாம தவித்துக் கொண்டிருக்கும் இந்த சூழ்நிலையில் சின்னத்திரை நடிகர் நடிகைகளும் போட்டோ போட்டு விளையாட்டிட்டிருக்காங்க. வேற எப்படி பொழுது போக்குவது.
கூடவே தங்களுடைய ஏமாற்றம், துக்கம் துயரம் என பகிர்ந்து கொண்டு வாராங்க. அப்படி இருக்கும்போது இப்ப இருக்குற ஒரு ஆறுதல் சில தளர்வுகள் ஏற்படுத்தி சில வேலைகளுக்கு மட்டும் அனுமதி கிடைத்திருக்கிறது. அந்த வகையில் சின்னத்திரை படப்பிடிப்பு ஆரம்பிச்சிருக்கு.

ஆரம்பிச்சாச்சு
பாதுகாப்புடன் கூடிய படப்பிடிப்பு ஏற்படுத்தலாம் என்று அனுமதி அளித்துள்ளது அரசு. அதன்படி சில சீரியல்கள் சூட்டிங் ஆரம்பிச்சாச்சு. இருந்தாலும் சூட்டிங் இல்லாத நடிகைகள் தங்களது வீட்டிலேயே போட்டோ ஷூட் நடத்தி இணையதளங்களில் ரசிகர்களை கவர்ந்து கொண்டு வராங்க. இந்த வழியை தான் காயத்ரி யுவராஜும் கையாண்டு வருகிறார்.

முத்தழகு காயத்ரி
இவர் தென்றல் சீரியல் மூலமாக சின்னத்திரைக்கு வந்தாலும் சரவணன் மீனாட்சியில் முத்தழகு கேரக்டரில் நடித்த பிறகுதான் இவருக்கு ரசிகர்கள் வட்டாரம் அதிகமாயிருச்சு. இந்த சீரியலில் நெகட்டிவ் ரோலில் நடித்து கலக்கி இருப்பா.ர் இதில் சரவணனை காதலித்து அவர் மீனாட்சியை திருமணம் செய்ததும் மீனாட்சியை பழிவாங்குவதற்காக சரவணன் அண்ணனை திருமணம் செய்து அவர் எடுக்கும் ஒவ்வொரு முடிவும் ரசிகர்களுக்கு முதலில் பிடிக்கவில்லை என்றாலும் பிறகு அவரை ரசிக்க தொடங்கி விட்டார்கள்.

செம டான்ஸர்
சீரியலில் மட்டுமல்ல நடனத்திலும் கலக்கியிருக்கிறார். திரு மற்றும் திருமதி கில்லாடிஸ் ஜோடி நம்பர் 1 போன்ற நடன நிகழ்ச்சிகளிலும் கலந்து இருக்கிறார். இது ரசிகர்களுக்கு கொண்டாட்டமாக இருந்தது. இதன் பிறகு ரசிகர்கள் அதிகமானார்கள் என்று தான் சொல்ல வேண்டும். அதற்குப் பிறகும் நிறைய சீரியல்களில் நடிக்க வாய்ப்பு வந்திருக்கிறது.

ரசிக்கும் ரசிகர்கள்
பிரியசகி, மெல்லதிறந்ததுகதவு, களத்து வீடு, மோகினி மற்றும் அரண்மனைக்கிளி சீரியலிலும் நடித்து வருகிறார். அரண்மனைக்கிளி சீரியலிலும் வில்லி கேரக்டரில் நடித்து வந்தாலும் ரசிகர்கள் இவரை ரசிக்கத் தொடங்கி விட்டார்கள். இவருடைய பக்கத்து வீட்டுப் பெண் போல இருக்கும் முக அழகும் சிரிப்பும் தான் ரசிகர்களுக்கு பிடித்திருக்கிறதாம். இவர் சென்னை பொண்ணுங்க அதனால ரொம்பவே அழகா தமிழ் பேசுகிறார்.

பேசினாலே அழகுதான்
இவர் பேசும் அழகு கூட ரசிகர்கள் இருக்கின்றார்கள். இப்ப சூட்டிங் இல்லாமல் வீட்டில் இருக்கிறதுனால மொட்டை மாடியில டெய்லி போட்டோ ஷூட் நடத்தி அதை இணையதளத்தில் பதிவிட்டிருக்கிறார். வைரலாக பரவி கொண்டு வருகிறது ரசிகர்களுக்கு இது விருந்தாக தான் இருக்கிறதாம். ரசிகர்கள் புதிய எபிசோடுகளுக்காக் காத்திருப்தைப் போல இவரும் கூட காத்திருக்கிறாரா் ஆர்வமாக.












Click it and Unblock the Notifications