Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சேலை கட்டும் பெண்ணுக்கொரு வாசமுண்டு.. அப்படியே மெழுகுச் சிலை மாதிரி!

Subscribe to Oneindia Tamil

சென்னை: சீரியல்களில் வில்லியாக கலக்கிக் கொண்டு இருந்தாலும் இணையதளங்களில் படு பவ்வியமாக இருக்கிறார் சரவணன் மீனாட்சி முத்தழகு.

சீரியல்களில் வில்லியாக அதுவும் சரவணன் மீனாட்சி சீரியலில் வில்லி முத்தழகுவாக கலக்கி இருந்த காயத்ரி யுவராஜ் இணையதளங்களில் சேலைகளில் படு பவ்வியமாக போட்டோ ஷூட் நடத்தி இணையதளங்களில் பதிவிட்டிருக்கிறார். இது வைரலாக பரவிக் கொண்டு வருகிறது.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் தொடர்கள் எல்லாமே ஓரளவிற்கு மக்களிடம் நல்ல வரவேற்பு பெற்று இருக்கின்றது. அதுலயும் சரவணன் மீனாட்சி சீரியல் சொல்லவே வேண்டாம். அதன் வெற்றியை தொடர்ந்து தான் மூன்று பாகங்களாக ஓடிக்கொண்டிருந்தது.

 கலாய் வில்லி

கலாய் வில்லி

இந்த சீரியலில் வில்லி காயத்ரி யுவராஜ் கதாபாத்திரத்தை நெட்டிசன்கள் பார்த்து கலாய்ச்சு தள்ளியிருக்கிறார்கள். இந்த சீரியலில் முத்தழகு கேரக்டரில் இவர் அந்த அளவிற்கு ரசிகர்களின் மனதில் பதிந்திருக்கிறார். இந்த சீரியலில் அவர் செய்யாத அட்டூழியங்கள் இல்லை. இவரை வெறுத்தவர்கள் பலர். ஆனால் அது அவருக்கு ப்ளஸ் ஆக அமைந்தது.

 நிலாவிலும் வில்லத்தனம்

நிலாவிலும் வில்லத்தனம்

இந்த சீரியலுக்குப் பிறகு தொடர்ந்து அவர் தென்றல் நிலா போன்ற தொடர்களில் நடித்தார் அதுமட்டுமல்லாமல் டான்ஸ் ரியாலிட்டி ஷோவில் பங்கு பெற்றார். ஊரடங்கு உத்தரவின் காரணமாக பிரபலங்கள் பலர் வீட்டிலேயே முடங்கி வருகின்றனர். இதனால் என்ன செய்வது என்று தெரியாமல் திணறி வருகின்றனர் .இந்த நிலையில் சிலர் உடற்பயிற்சி செய்வது தோட்டங்களை சுத்தம் செய்வது புதியதாக ஏதாவது கற்றுக்கொள்வது என்று ஏதாவது ஒன்றை செய்து அதை அப்படியே புகைப்படங்களாக எடுத்து இணையதளத்தில் போட்டு வருகிறார்கள்.

 ரசிகர்கள் கொண்டாட்டம்

ரசிகர்கள் கொண்டாட்டம்

இது ரசிகர்களுக்கு கொண்டாட்டமாக இருக்கிறது .இவர்களை பார்க்காமல் இருந்த ரசிகர்கள் இணையதளங்கள் மூலம் இவர்களை பார்த்து வந்தனர். ஆனால் இப்போது ஷூட்டிங் ஆரம்பித்த நிலையில் சிலர் மட்டும் நடிக்க ஆரம்பித்து இருக்கிறார்கள். அதில் அதில் நம்ம காயத்ரியும் உண்டு. இவர் இப்போ சித்தி 2 சீரியல் மற்றும் விஜய் டிவியில் நாம் இருவர் நமக்கு இருவர் சீரியல்2 லும் மறு என்ட்ரி கொடுத்திருக்கிறார்.

 நல்லதுதான் நடந்திருக்கு

நல்லதுதான் நடந்திருக்கு

இரண்டு சீரியல்களுமே ஹிட்டான சீரியலாக ஒளிபரப்பாகி கொண்டிருக்கும்போது இவர் அதில் இணைந்து இருப்பது கூடுதல் இவருக்கு ஒரு பிளஸ் பாயிண்ட் ஆக தான் இருக்கிறதாம். யாருக்கெல்லாம் இந்த லாக் டவுன் மாற்றத்தை கொடுத்ததோ இல்லையோ இவரது வாழ்க்கையில் நல்ல மாற்றத்தை இப்போ கொடுத்திருக்கிறது. இரண்டு சீரியலில் பிசியாக நடித்துக் கொண்டிருந்தாலும் இவர் இணையதளங்களிலும் போட்டோக்களை எடுத்து குவித்து வருகிறார்.

 சேலையில் அழகு

சேலையில் அழகு

அதுவும் சேலை கட்டிக்கொண்டு இவர் போட்டிருக்கும் போஸ்கள் ரசிகர்களுக்கு விருந்தாக இருக்கிறதாம். சித்தி 2 வில் இவர் ராதிகாவின் மருமகள் ஆகவும் நாம் இருவர் நமக்கு இருவர் சீரியலில் மாயனின் தங்கச்சி ஆகவும் நடித்திருக்கிறார். இதில் சித்தி 2வில் வில்லியாக அந்த குடும்பத்தையே கதிகலங்க வைக்கும் ராட்சசி ஆகவும், நாம் இருவர் நமக்கு இருவர் 2 வில் அமைதியின் சொரூபமாக மாயனின் மூத்த தங்கச்சி ஆகவும் நடித்திருக்கிறார்.

ஆனால் இந்த சீரியலில் இவர் நல்லவரா கெட்டவரா என்று அறிய முடியாத வகையில் அமைதியாக நடந்துக் கொண்டிருக்கிறார். போகப்போகத்தான் தெரியும் இந்த சீரியலிலும் இவரது கேரக்டர் எப்படி என்று. சரவணன் மீனாட்சி சீரியலில் தொடர்ந்து இவருக்கு வந்ததெல்லாம் வில்லி கேரக்டர் தானாம். சீரியல்களில் வில்லியாக கலக்கி கொண்டிருப்பவர் உண்மையில் படு அமைதியானவராம் .சூட்டிங் டைம்ல ஜாலியாக கலாய்சிட்டு என்ஜாய் பண்ணிட்டு இருப்பாராம்.

 என்னா வில்லத்தனம்

என்னா வில்லத்தனம்

சூட்டிங் ஆரம்பித்ததும் வில்லத்தனத்தால் எல்லாரையும் பாடாய்ப்படுத்தி விடுவாராம். அரண்மனைக்கிளி சீரியலில் வில்லிக்கு டப் கொடுக்கும் போல்டான கேரக்டரில் நடித்திருந்தார். இந்த சீரியல் தற்போது ஒளிபரப்பாகவில்லை இருந்தாலும் இவருடைய ரசிகர்களுக்காக இவர் சன் டிவியிலும் அதே விஜய் டிவியிலும் கலக்கிக் கொண்டிருக்கிறார். இந்த லாக் டவுன் டைம்ல வீட்டில் இருக்கும்போது ரொம்பவே கஷ்டப்பட்டாராம்.

 காத்திருப்பு வீண் போகலை

காத்திருப்பு வீண் போகலை

ஷூட்டிங் எப்ப ஆரம்பிப்பாங்க என்று ஆசை ஆசையாக காத்திருந்தார். ஆனால் அந்த காத்திருப்பிலும் ஒரு நல்ல பலன் கிடைத்திருக்கிறது என்று அவரது ரசிகர்கள் கூறுகிறார்கள். இணையதளங்களில் போட்டி போட்டுக்கொண்டு சிலர் கவர்ச்சி காட்டி வரும் நிலையில் இவர் படு பவ்வியமாக சேலைகளிலும் அதுவும் ஹோம்லியாக வருவது ரசிகர்களுக்கு கண்களுக்கு விருந்தாக இருக்கிறதாம். பல ரசிகர்கள் புடவையில் இவரைப் பார்த்து ரசிச்சு கமெண்டுகளை போட்டிருக்கிறார்கள்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+