ஆனந்தி... திவாகர்னு எப்படி கண்டுபிடிச்சீங்க?.. கஷ்டமப்பா...!
சென்னை: ஜீ தமிழ் டிவியின் ஜீன்ஸ் நிகழ்ச்சியில் இந்த வாரம் அசத்தும் இரட்டையர்கள் கலந்துகொண்டனர்.
டான்சர் ஆனந்தியும் இன்னொருவரும் நிகழ்ச்சியில் கலந்துக்கொள்ள இரட்டையர்களில் திவாகர் யார்னு கரெக்ட்டா கண்டு பிடிச்சுட்டாங்க. நடிகை பிரியா ராமன் இந்த நிகழ்ச்சியை நடத்தி வருகிறார்.
ஜீ தமிழ் டிவியின் வித்தியாசமான நிகழ்ச்சிகளில் ஒன்றுதான் இந்த ஜீன்ஸ். சும்மா சொல்லக் கூடாதுங்க.. உண்மையிலேயே செம வித்தியாசமா இருக்கு. கலகலப்பாகவும் இருக்கு.

ஜீன்ஸ் நடிகை ரோஜா
கடந்த சில வருடங்களாகவே ஜீ தமிழ் டிவியில் ஞாயிறு தோறும் ஜீன்ஸ் நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகிறது. இதை ஆரம்பத்தில் நடிகை ரோஜா தொகுத்து வழங்கி வந்தார். இவருக்கு பிறகு வேறு சில நடிகைகள் தொகுத்து வழங்கினர். இப்போது நடிகை பிரியா ராமன் தொகுத்து வழங்கி வருகிறார். ஜீ டிவியின் முக்கியமான அதேசமயம், கலகலப்பான தொகுப்பாளர்களில் இவரும் தனி முத்திரை பதித்தவர் ஆவார்.

குடும்பம் கலப்படம்
நிகழ்ச்சியில் எப்போதும் குடும்பமாக கலந்துக்கொள்வார்கள், இந்த குடும்பத்தில் தொடர்பில்லாத ஒரு நபர் கலக்கப்படுவார். அந்த குடும்பத்தின் ஜீன் இல்லாத அந்த நபரை வந்திருப்பவர்கள் அதாவது போட்டியில் கலந்துக்கொள்பவர்கள் கண்டுபிடிக்க வேண்டும். இதுதான் இந்த விளையாட்டின் முக்கிய அம்சம். ஒவ்வொரு போட்டியும் செம கலகலப்பாக போய்க் கொண்டுள்ளது.

இந்தமுறை இரட்டையர்கள்
இந்தமுறை இந்த நிகழ்ச்சியில் இரட்டையர்கள் கலந்து கொண்டனர். இதில் தினேஷ், திவாகர் என்கிற இரட்டையர்களை நிற்க வைத்து இருவரையும் பேசவைத்தனர். இருவரும் +2 முடித்து விட்டு கூரியர் சர்வீஸில் வேலை பார்ப்பதாக கூறினார்கள். இருவரும் ஒரே கலர்ல சட்டை, பேண்ட், ஒரே ஹேர் ஸ்டைல் என்று யார் தினேஷ், யார் திவாகர் என்று அடையாளம் தெரியாதவாறு இருந்தனர்.

ஒருவருக்கு பதில்
கூரியர் ஆஃபீசில் 8 மணிக்குள் இருந்தால் பேட்டா கிடைக்குமாம். ஒருவர் வர லேட்டானால் இன்னொருத்தர் அவருக்கு பதில் கை எழுத்து போட்டுவிடுவார்களாம். ஆனந்தி உள்ளிட்ட இருவரின் கண்களையும் கட்டிவிட்டு, திவாகரை பிரித்து அவரை டக் இன் பண்ண செய்து, காதில் கம்மல் மாட்டி, கூலிங் கிளாசும் போட்டுவிட்டு, அவரை மட்டும் நிற்க வைத்து தினேஷா திவாகரா என்று கேட்க..

காதுல கம்மலா
இரு பெண்களும் குழம்பித்தான் போனார்கள். காதுல கம்மலா என்று கேட்க.. புள்ளீங்கோ என்று சொன்னார் இரட்டையர்களின் ஒருவர்.சிறிது நேர குழப்பத்துக்கு பின்னர் ஆனந்தி அடிச்சு சொன்னார் திவாகர் என்று. உண்மையும் அதுதான்...! இப்படி ஜீன்ஸ் நிகழ்ச்சி சுவாரஸ்யமாக இருக்கிறது. வரும் ஞாயிறு ஜீ தமிழ் டிவி பாருங்கள்... ஞாயித்துக்கிழமையை நல்லா ஜாலியா பொழுது போக்க ஒர்த்தான புரோகிராம்தான் இந்த ஜீன்ஸ்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications