ஒரே இடத்தில் நடிகரின் 2 மனைவிகள்.. சின்னவீடு சில்மிஷங்கள்.. சரவணன் பக்கா ஜென்டில்மேன்: பிரபலம்
சென்னை: நடிகர் சித்தப்பு சரவணன் மீது சென்னை ஆவடி காவல் நிலையத்தில் அவரின் முதல் மனைவி சூர்யா ஸ்ரீ புகார் அளித்துள்ளார். அதில் சரவணனும், அவரின் இரண்டாவது மனைவி ஸ்ரீதேவியும் தன்னை அடித்து துன்புறுத்தி கொலை மிரட்டல் விடுப்பதாக குறிப்பிட்டுள்ளார். மேலும், அதற்கான வீடியோ ஆதாரத்தையும் சமர்ப்பித்துள்ளார். சரவணன் - சூர்யா ஸ்ரீ ஆகியோரின் விவாகரத்து வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள நிலையில், இந்த பகீர் குற்றச்சாட்டுகள் பரபரப்பை கிளப்பி விட்டுள்ளது. இதுகுறித்து மூத்த பத்திரிகையாளர் சேகுவேரா பேட்டி ஒன்றில் குறிப்பிட்டு பேசியிருக்கிறார்.
Realone Media என்ற யூடியூப் சேனலில், ''சின்னவீடு சில்மிஷங்கள்...வசமாக சிக்கிய சித்தப்பு" என்ற தலைப்பில் மூத்த பத்திரிகையாளர் சேகுவேரா பேட்டி ஒன்று வெளியாகியிருக்கிறது..

அதில் "பெண்கள் புகார் தந்துவிட்டாலே ஆண்கள் மீது பாயக்கூடாது.. பெண் புகார் தந்தாலும்சரி, தவறு செய்தவர்கள் குற்றவாளிகள்தான். அதுக்காக ஒரு பெண் புகார் தந்ததுமே, சம்பந்தப்பட்ட ஆணின் மீது மொத்த குற்றச்சாட்டையும் திருப்புவது சரியாகாது.. எனவே 2 தரப்பிலுமே பிரச்சனை என்னவென்று விசாரிக்க வேண்டும்.
ஜென்டில்மேன் சரவணன்
நீண்டகால சினிமாவில் அனுபவசாலியான ஒரு நண்பர் என்னிடம் இன்று பேசிக் கொண்டிருந்தார்.. அப்போது சரவணன் ரொம்ப நல்ல டைப்.. அருமையான மனிதன் என்று சொன்னார்.. இயல்பாகவே நல்ல மனிதனாக உள்ளார்..
சினிமாவில் பல சறுக்கல்களை சந்தித்துவிட்டு, வெப்சீரிஸ் நடித்து வருகிறார்.. தான் சம்பாதித்ததை வைத்து, சேலத்தில் ஸ்டுடியோ ஒன்று கட்டியிருக்கிறார்.. சினிமாவில் சம்பாதித்ததை, சினிமாவிலேயே முதலீடு செய்திருக்கிறார்.
முதல் மனைவியின் சம்மதம்
மனைவியை காதலித்து திருமணம் செய்துள்ளார்.. அவருக்கு வாரிசு இல்லாததால், முதல் மனைவியின் சம்மதத்தை பெற்றுத்தான் 2வது திருமணம் செய்து கொண்டார்.. இதுல எங்கே சரவணன் குற்றவாளி ஆனார்? என்று தெரியவில்லை..
முதல்மனைவியின் சம்பாதித்தியத்தில்தான் நான் வாழ்ந்தேன் என்று பல நேர்காணல்களில் சரவணனே சொல்லியிருக்கிறார்.. ஆனால், இதை முதல் மனைவி இப்போதுவந்து சொல்லிக்காட்ட தேவையில்லை.. கணவன்தானே சாப்பிட்டார்?
கணவன் - மனைவி இருவருமே மாறி மாறி காப்பாற்றிக் கொள்ள வேண்டும்.. நான்தான் மனைவிக்கு சோறு போட்டேன் என்று கணவன் சொல்வதும், கணவனை நான்தான் காப்பாற்றினேன் என்று மனைவி சொல்வதும், அந்த உறவுக்கே அசிங்கமாகும்.
அசிங்கப்படுத்துறார்
சின்னவீடு என்றாலே எங்கோ யாருக்கும் தெரியாமல் ஒதுக்குப்புறத்தில்
வீட்டை வைத்துவிடுவார்கள்.. ஆனால், சரவணன் ஒரு ஜென்டில்மேன்.. ஒரே இடத்தில்தான் 2 மனைவிகளையும் வாழ வைத்து வருகிறார்.. சரவணன் யார் என்பது இதன்மூலமே அனைவருக்கும் தெரியும்.. வெள்ளந்தியாக இருக்கிறார்.. ஒரு ஆணை அசிங்கப்படுத்தணும்னு முடிவு செய்துட்டால், அதை எப்படியும் செய்துவிடுவார்கள்..
மனைவியை கணவன் அடித்ததற்கும், கணவனை மனைவி அடித்ததற்கும் விவாகரத்து கேட்டால், உலகில் முக்கால் வாசி பேர் டைவர்ஸ் ஆகியிருப்பார்கள்..
இதுதான் இப்ப ஃபேஷன்
விவாகரத்து வழக்கு பூந்தமல்லி நீதிமன்றத்தில் நடந்து வந்தாலும், சரவணன் ஒரு முறை கூட அதற்கு ஆஜராகவில்லை என்று முதல்மனைவிதான் புகார் சொல்கிறார்.. அப்படியானால், விவாகரத்து தர சரவணனுக்கு விருப்பமில்லை என்றுதானே அர்த்தம்.. முதல்மனைவிக்கும் வயதாகிவிட்ட நிலையில், அனைவரும் அட்ஜெஸ்ட் செய்துகொண்டு வாழலாம்..
கணவன் மீது மனைவி புகார் சொல்வதும், மனைவி மீது கணவன் புகார் சொல்வதெல்லாம் இப்போது ஒரு ஃபேஷனாகிவிட்டது.. வயதாகி கொண்டிருக்கும் சூழலில், சண்டை இல்லாமல் ஒற்றுமையாக வாழ்வதுதான் சரியானதாக இருக்கும்" என்று தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications