வர வர இந்த ரோஜாவில்.. ரொமான்ஸ் உரசல்கள் ஓவர் டோஸா போய்ட்டிருக்கேய்யா!
Recommended Video

சென்னை: சன் டிவியின் ரோஜா சீரியல் நிறைய செலவு செய்து எடுக்கற ஒரு சீரியல்தான். நிறைய காட்சிகள் வெளியில் எடுப்பது, கலர்ஃபுல்லான லொக்கேஷன்களில் ஷூட்டிங் எடுப்பதுன்னு கொஞ்சம் செலவு அதிகம்தான்.
இப்போ ஸ்டார் காஸ்டா நதியா வேற வந்திருக்காங்க. உண்மையில் சொல்ல போனால் நதியா வந்ததுக்கு பிறகு கதை ரொம்ப மெதுவா நகருது. நதியாவுக்கு முக்கியத்துவம் கொடுக்கணும்னு வேணும்னே காட்சிகள் வச்ச மாதிரி இருக்கு.
அதோட நதியாவை நடிகையாவே சீரியலில் பார்க்கறதுல அவ்வளவா கதையோட ஒட்டுதல் இல்லேன்றது சீரியலை ரெகுலரா பார்க்கறவங்க ஃபீலிங்.. நதியா இவ்ளோ அழகா இருக்காங்க.. ரோஜா சீரியல் அவங்களுக்காகவே பார்க்கலாம்னு நதியா ரசிகர்கள் சொல்றாங்க..

ரோஜா மழை
அர்ஜுன்,ரோஜா காதல் எப்படி வந்துச்சு, முதன்முதலில் எங்கே பார்த்தீங்கன்னு நதியா ரோஜாகிட்ட கேட்கறாங்க. ரோஜாவும் மழையில அவர் குடைக்குள் நான் போயிட்டேன் மேடம்.. அப்பவே அவர் என்னை குடைக்குள் பார்த்துகிட்டே இருந்தார்.

மழையில
கொட்டற மழையில நானும் அர்ஜுன் சாரும்னு ரோஜா சொல்ல.. இரு இரு அப்பவே அவர் பேரு உனக்கு எப்படி தெரியும்னு கேட்கறாங்க...மேடம் சொல்றேன் இருங்க மேடம்..நடுநடுவுல பேசினா எனக்கு ஃப்ளோ வராதுன்னு ரோஜா சொல்றா.. சரி சரி சொல்லு..ரெண்டு பள்ளிக்கூட பசங்க குடை இல்லாம வீட்டுக்கும் போகாம ஒதுங்கி நின்னுகிட்டு இருந்தாங்ங்க மேடம்

அர்ஜுன்-ரோஜா
சார் ரெண்டு பசங்களும் வீட்டுக்குப் போகாம மழைக்கு ஒதுங்கி நிக்கறாங்க பாருங்க சார். அவங்ககிட்ட குடை இல்லையாம். எப்போ மழை நிக்கறது,அவங்க எப்போ வீட்டுக்கு போறது, ஹோம் வொர்க் பண்றது, படிக்கறது, சாப்பிடறது, தூங்கறது... அதனால நம்ம குடையை குடுக்கலாம் சார்னு சொன்னேன் மேடம்னு சொல்றா ரோஜா.அப்போ குழந்தைங்க பேரை கேட்டவுடனே ரோஜான்னும், அர்ஜுன்னும் சொன்னாங்க மேடம்.

அர்ஜுன்
என் பேரு ரோஜான்னு நான் சொல்லி சிரிச்சதும், என் பேரு அர்ஜுன்னு அவர் சொன்னார். நான் சும்மா பொய் சொல்லாதீங்க சார்.. எப்படி உங்க பேர் அர்ஜுன்னு நான் நம்பறதுன்னு கேட்டேன். அப்போதான் ஐடி கார்டு காமிச்சார் மேடம்னு சொல்றா
இப்படியே ரோஜா ஓடுவது.. அர்ஜுன் பிடிப்பதுன்னு காதல் காட்சிகள், ரொமான்ஸ் காட்சிகள்னு சீன்ஸ் ஓவர் டோஸா இருக்கு.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications