Golam OTT: ஆபீஸ் மர்மங்கள்.. திடுக் திருப்பங்கள்! கோளம் மலையாளம் திரில்லர் படம் ஓடிடி-யில் வந்தாச்சு
சென்னை: மலையாள சினிமாவின் புதிய த்ரில்லர் 'கோளம்' தற்போது அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியாகி, ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது.ஒரு அலுவலகத்தில் நடக்கும் மர்மமான கொலை வழக்கை மையமாகக் கொண்ட இந்தப் படம், பார்வையாளர்களை ஆரம்பம் முதல் இறுதி வரை ஈர்க்கிறது.
கொச்சியில் உள்ள ஒரு ஐடி கம்பெனியின் எம்.டி. மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவத்தை மையமாகக் கொண்ட இந்தத் திரைப்படம், அலுவலக வாழ்க்கையின் இருண்ட பக்கங்களை வெளிக்கொணர்கிறது. இயக்குநர் சம்ஜத், அலுவலகத்தில் பணிபுரியும் ஒவ்வொருவரின் வாழ்க்கையையும், அவர்களது மனதில் உள்ள ரகசியங்களையும் நுட்பமாக சித்தரித்துள்ளார்.

படத்தின் கதாபாத்திரங்கள், குறிப்பாக ரஞ்சித் சஜீவ் மற்றும் அலென்சியர் லே லோபஸ் ஆகியோரின் நடிப்பு பார்வையாளர்களை கவர்ந்துள்ளது. விஜய்யின் ஒளிப்பதிவும், அபி சால்வின் தாமஸின் இசையும் படத்திற்கு கூடுதல் பலம் சேர்த்துள்ளன.
படத்தில் குறிப்பிட வேண்டிய அம்சங்கள் சில உள்ளன- இந்த திரைப்படம், அலுவலகத்தில் நடைபெறும் சாதாரண சம்பவங்களையும், மனித உறவுகளையும் நுட்பமாக சித்தரித்துள்ளது. ஒவ்வொரு மனிதனுக்கு உள்ளேயும் சொல்லப்படாத பக்கங்கள் உண்டு என்பதை ஆணித்தரமாக சொல்லிச் செல்கிறது. கொலை விசாரணை காட்சிகள், பார்வையாளர்களை சீட் நுனியில் அமர வைக்கும் வகையில் அமைந்துள்ளது. சந்தேகங்கள், திருப்பங்கள், விசாரணை என படம் முழுவதும் பரபரப்பான நிகழ்வுகள் நிறைந்துள்ளன.
அலுவலக வாழ்க்கையை வித்தியாசமான கோணத்தில் பார்க்க விரும்புபவர்கள், திரில்லர் படங்களை விரும்புபவர்கள், மலையாள சினிமாவின் தரமான படைப்புகளை ரசிப்பவர்கள் தாராளமாக இப்படத்தை பார்க்கலாம். நீங்கள் படத்தை பார்த்திருந்தால் உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்கள். அல்லது ஸ்டார் ரேட்டிங்கை கமெண்ட்டில் பதிவு செய்யுங்கள்.
-
முதல்வர் விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் இயக்கிய சிக்மா படம் எப்போது ரிலீஸ்? ஜெயிப்பாரா இந்த ஜூனியர்? -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ












Click it and Unblock the Notifications