தங்கமான நடிகை அமலா.. திடீர்னு பறக்கவிட்ட புடவைகள்.. ஷூட்டிங்கில் நடந்த பஞ்சாயத்து.. யாரந்த மெகா ஹீரோ
சென்னை: கொல்கத்தா நகரத்தில் உள்ள ஒரு பெங்காலி குடும்பத்தில் பிறந்தவர் அமலா அக்கினேனி.. சிறந்த பரதநாட்டிய கலைஞர். விலங்கு பாதுகாப்பு துறையினர் என பல துறைகளில் பணியாற்றிவருபவர். தமிழ், மலையாளம், கன்னடம் தெலுங்கு, இந்தி மொழிகளில் நடித்தவர்.. 1990-களில், தமிழ் திரையுலக 'கனவுக்கன்னி'களில் ஒருவராக இருந்தவர், தெலுங்கு நடிகர் நாகார்ஜுனை காதல் திருமணம் செய்து கொண்ட அமலா,திருமணத்துக்குப்பின் நடிக்கவில்லை. இந்நிலையில், நடிகை அமலா பற்றி மூத்த பத்திரிகையாளர் சபிதா ஜோசப் பல்வேறு தகவல்களை தெரிவித்துள்ளார்.
Realone Media என்ற யூடியூப் சேனலுக்கு பேட்டி தந்துள்ள மூத்த பத்திரிகையாளர் சபிதா ஜோசப், "அமலாவை தமிழில் டி.ராஜேந்தர் அறிமுகப்படுத்தினார்.. அமலா நடிக்க வந்ததுமே, தமிழில் அனைத்து முன்னணி நடிகர்களுடனும் இணைந்து நடித்தார்..

மென்மையான குணம்
அந்தவகையில், அந்த மெகா நடிகருடனும் 3 படங்கள் நடித்தார்.. அமலா ஆங்கிலோ-இண்டியன் பெண் என்பதால், பார்ப்பதற்ககே கலர்புல்லாக இருப்பார்.. ஆங்கில உச்சரிப்பு சூப்பராக இருக்கும்.. மேலும் அமலாவின் இயல்பு, அந்த மெகா நடிகருக்கு பிடித்துவிட்டது.. அதனால் தன்னுடனேயே இருந்துவிடும்படி, அமலாவிடம் சொன்னாராம்.
ஆனால், இதில் அமலாவுக்கு உடன்பாடில்லை.. இன்னொரு பெண்ணின் வாழ்க்கையை கெடுப்பதுடன், நடிகருக்கு துணையாக மட்டுமே இருப்பதால் பல்வேறு சிக்கல்கள் வரும் என்பதை உணர்ந்தார்.. எனவே, வேறு யாரையாவது திருமணம் செய்து கொண்டு வாழலாம் என்றும் முடிவு செய்தார்..
உடைந்துபோன மெகா நடிகர்
இந்த நேரத்தில்தான் நாகார்ஜூனாவுடன் தெலுங்கிலும் அமலா நடித்து வந்தார்.. நாகார்ஜூனாவுக்கு ஏற்கனவே திருமணமாகியிருந்தது.. நடிகர் வெங்கடேஷின் அக்காவைதான், நாகார்ஜூனா திருமணம் செய்திருந்தார்.. நாகசைதன்யாவும் பிறந்திருந்தார்..
எனினும் அமலாவுடனான நட்பு நாகார்ஜூனாவுக்கு அதிகரித்தது.. இந்த நேரத்தில், நாகார்ஜூனா முதல்மனைவி விவாகரத்து செய்துவிட்டார்.. பிறகு நாகார்ஜூனா, அமலா இருவரும் திருமணம் செய்து கொண்டனர். ஆனால், இதைக்கேள்விப்பட்டதும் இங்கே தமிழில் அந்த மெகா நடிகர் உடைந்துபோய்விட்டார்..
நாகார்ஜுனாவை திருமணம் செய்ததுமே நடிப்புக்கு முழுக்கு போட்டுவிட்ட அமலா, புளூகிராஸில் விலங்குகள் நல ஆர்வலராக சென்றுவிட்டார்.. பிறகு என்ன காரணமோ தெரியவில்லை, தன்னுடைய தலைமுடியை மொட்டை அடித்து கொண்டார்..
பறக்கவிடப்பட்ட புடவைகள்
தமிழில் ஒரு படத்தில் நடிக்கும்போது, புடவைகளை பறக்க விட்டவாறு பாடல் காட்சிகளை எடுத்தார்கள்.. அதில் 4 புடவைகள் அழகாக இருந்ததால், அதை அமலா கையோடு கொண்டு சென்றுவிட்டாராம்..
இந்த விஷயம் அந்த படத்தின் டைரக்டருக்கு தெரிந்து கொந்தளித்துவிட்டார்.. ஒவ்வொரு புடவையும் 20 ஆயிரம் ஆகிறது, 4 புடவைகள் என்றால் விலை என்னாவது? ஒன்று புடவைகளை திருப்பி தர வேண்டும் அல்லது அந்த பணத்தை தர வேண்டும் என்று கறாராக டைரக்டர் சொன்னாராம்.. மறுநாள் ஷூட்டிங் வந்த அமலா இதை கேள்விப்பட்டு, படத்தில் தன்னுடன் நடித்த நடிகரிடம் சொல்லி வருத்தப்பட்டாராம்..
இதனால் மறுநாளிலிருந்து தொடர்ந்து 3 நாட்கள் ஷூட்டிங் வராமல், வேறு வேலையாக அந்த நடிகர் வெளியே சென்றுவிட்டாராம். இதனால் ஷூட்டிங் நடக்காமல் கிட்டத்தட்ட 3 லட்சம் ரூபாய் டைரக்டருக்கு நஷ்டம் ஏற்பட்டதாம். இப்படியொரு மறைமுக பாடத்தை டைரக்டருக்கு கற்று தந்தார் அப்பட நடிகர்" என்று தெரிவித்துள்ளார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications