கோபி காணாம போயிட்ட கதை கேட்க ... நான் என்ன வருங்கால லூசா?

Subscribe to Oneindia Tamil

சென்னை: சன் டிவியின் கல்யாண வீடு சீரியல் ஒரு தனி ரகம். மிடில் கிளாஸ் கதையை எடுத்துக்கிட்டு, திருமுருகன் பரபரப்பா கதையை குடுக்கற விதமே சூப்பர்.

சும்மா ஒரு குழந்தையை காணோம்னு பல மாச எபிசோடை இழுத்தடிக்கற கதை எல்லாம் நம்ம டைரக்டர் சாருகிட்ட பலிக்காது. சும்மா கவுன்டர் குடுக்கற மாதிரிதான் சீன்ஸ் இருக்கும்.

கல்யாண வீடு அந்த வகையில் கலாட்டா, ஓவர் சென்டிமென்ட், கேலி, கிண்டல், நகைச்சுவைன்னு எல்லாமே இருக்கு.பழி வாங்கறதும் இருக்கு.

காணோம்

காணோம்

பிச்சை என்னையா யூனிஃபார்ம் இல்லாம வந்திருக்கேன்னு கோபியின் வருங்கால மாப்பிளையைப் பார்த்து போலீஸ் கேட்கறார். இல்லை சார் என் மச்சான் கோபியை காணோம்னு சொல்றான் பிச்சை.

எப்புடி

எப்புடி

சரி கோபி எங்கிருந்து எப்படி காணாம போனார்னு போலீஸ் கேட்கறார். கோபி வருங்கால மாமனாருக்கு ஹார்ட் அட்டாக் வந்துருச்சு சார்.அதனால அவர் ஆஸ்பத்திரியில இருந்தார். திடீர்னு பார்த்தா கோபி வருங்கால மச்சானுக்கு பாண்டிச்சேரியில் ஹார்ட் அட்டாக்னு சொல்றார் பிச்சையின் மாமா.

வரும்காலம்னு சாகடிக்கற

வரும்காலம்னு சாகடிக்கற

அதான் வருங்கால மாமனாருக்கு ஹார்ட் அட்டாக்னு சொன்னியே.. அப்புறம் பாண்டிச்சேரியில் எப்படிய்யா வருங்கால மச்சானுக்கு ஹார்ட் அட்டாக் வந்துச்சுன்னு போலீஸ் கேட்கறார். இந்த ஊரில் இருக்கற மாமனார் யாருன்னு போலீஸ் தலை சுத்தலோட கேட்கறார்.

எப்படி மாமனார்

எப்படி மாமனார்

ரோஜான்னு ஒரு பொண்ணை அரெஸ்ட் பண்ணினீங்கள்ல சார்..அப்போ கோபி மாமனாருக்கு ஹார்ட் அட்டாக் வந்துருச்சுன்னு சொல்ல, சரி இதனால எப்படி கோபிக்கு மாசிலாமணி வரும்கால மாமனார் ஆவார்னு போலீஸ் கேட்கறார்.

காதல்

காதல்

சார் அவருக்கு சூரியான்னு மூத்த பொண்ணு ஒண்ணு இருக்கு சார். அந்த பொண்ணைத்தான் கோபிக்கு கல்யாணம் பண்ணி குடுக்க மாசிலாமணி நினைச்சிருந்தார்னு சொல்ல அட.. அந்த பொண்ணாயா.. அதுவே கோபி மேல ஸ்டேஷன்ல கம்பளைண்ட் குடுத்து இருக்கு. மோதலில் ஆரம்பிச்சு காதலா.. சரி மேல சொல்லுன்னு இன்ஸ்பெக்டர் சொல்றார்.

கோபி மச்சான்

கோபி மச்சான்

இந்த சமயத்துலதான் சார் கோபியின் மச்சானுக்கு ஹார்ட் அட்டாக் வந்துருச்சுன்னு பாண்டிச்சேரி போனார்னு பிச்சையின் மாமா சொல்றார். மாசிலாமணிக்கு பையன் இல்லையே சார்னு போலீஸ் சொல்ல...ஐயோ சார் இங்க கதையே வேற.. பாண்டிச்சேரில ஸ்வேதான்னு ஒரு பொண்ணுக்கு கல்யாணம் பண்ணிக்கறதா கோபி சத்தியம் செய்து குடுத்திருக்கான்.

லூசா?

லூசா?

அப்படீன்னா ஸ்வேதாவோட அண்ணன் கோபிக்கு வரும்கால மச்சான்தானேன்னு பிச்சை மாமா சொல்ல, இன்ஸ்பெக்டர் தலை சுத்துதுயா.. இப்படி கதையை அள்ளி விடறியே அதை கேட்க நான் என்ன வரும்கால லூசான்னு கேட்கறார். இந்த சீன் பரவால்ல சிரிக்கலாம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+