Good Bad Ugly கதையில் மசாலா தூக்கல்! ஆதிக் சுதாரிக்கணும்! ஏன் தெரியுமா?
2015-ஆம் ஆண்டு, இயக்குநர் ஆதிக் தனது இயக்குநர் வாழ்க்கையை "திரிஷா இல்லனா நயன்தாரா" என்ற நகைச்சுவை திரைப்படத்தின் மூலம் தொடங்கினார். படம் வணிகரீதியாக வெற்றிபெற்றது, இது அவருக்குத் துவக்கத்தில் நல்ல நம்பிக்கையைக் கொடுத்தது.
இரண்டாம் படம் "அன்பானவன் அசராதவன் அடங்காதவன்" (2017) வசூலில் தோல்வியடைந்தது. இதன்பின் வந்த "பஹிரா" (2023) எதிர்பார்ப்பை நிறைவேற்றவில்லை.

ஆனால் அதே வருடம் வெளியான "மார்க் ஆண்டனி" திரைப்படம் மிகப்பெரிய வெற்றியடைந்தது. இந்த வெற்றியே ஆதிக் இயக்குநர் வாழ்க்கையில் முக்கியமான திருப்புமுனையாக அமைந்தது.
இந்த வெற்றிக்கு அடுத்ததாக அவர் இயக்கிய "குட் பேட் அக்லி", தற்போது அஜித் ரசிகர்களிடையே பெரிதும் பேசப்பட்டு வருகிறது. ஆனால் இந்தப் படம் கலவையான விமர்சனங்களை சந்தித்து வருகிறது. சிலர் இது ஒரு வலுவான கதைக்களமில்லாத படம் என்றும், சில ரெபரன்ஸ்கள் வைத்து உருவாக்கப்பட்டுள்ளது என்றும் விமர்சிக்கின்றனர்.
மார்க் ஆண்டனியில் வென்ற பாணி - எல்லா நேரத்துக்கும் பொருந்துமா?
இயக்குநர் ஆதிக் என்றாலே மசாலா தூவல்கள் அதிகம் இருக்கும். ஆனால் அந்த மசாலா சில நேரங்களில் அளவுக்கு மீறிச் சென்று, கதையின் உயிரையே அழுத்திப் போடுவதும் உண்டு. குறிப்பாக பழைய திரைப்படங்களின் பாடல்களையும் காட்சிகளையும் எடுத்து, புதுப்புது பாணியில் சேர்த்துக் கொடுப்பதில் ஆதிக் கில்லாடி.
"மார்க் ஆண்டனி"யில் அந்த பாணி அழகாக வேலை செய்தது - அது ஒரு கமர்ஷியல் ஹிட். ஆனால் அதே பாணி, "குட் பேட் அக்லி"யில் கூடுதலாகவே மாறியுள்ளது. இத்தகைய கதைக்களம் ஆதிக்கிற்கு இனி வரும் காலங்களில் கை கொடுக்காமல் போகலாம். இதுபோக வெகுஜன மக்களை இத்தகைய படங்கள் சுலபமாக கவர்ந்து விடாது என்பதை ஆதிக் மட்டும் இல்லை அனைத்து இயக்குனர்களும் உணர வேண்டும். அதனால் அனைத்து இயக்குநர்களும் புதிய பாணிகளை, புதுமுக சிந்தனைகளை தேடத் தொடங்க வேண்டிய தருணம் இது.
வந்தவுடன் ஹிட் ஆகும் மசாலா படம் - ஆனால் அது எவ்வளவு நாள்?
பெரிய நடிகர்களை வைத்து படம் இயக்குவது பெருமை மட்டும் இல்லை, பெரிய பொறுப்பும். சினிமா என்பது ஒரு வியாபார தளம் மட்டுமல்ல. அது ஒரு கருத்தியல் கூறும் களமாகவும் இருக்கிறது. அந்த கருத்தியல் சமூக அக்கறையுடன் இருக்கிறதா? மக்கள் மனதில் ஏதாவது தாக்கத்தை ஏற்படுத்துகிறதா?
மசாலா, காமெடி, ரீயூஸ் பாடல்கள்-இவை எல்லாம் சில தருணங்களுக்கு வேலை செய்யலாம். ஆனால் இது எல்லா நடிகர்களுக்கும் வேலை செய்யாது. ஒரே மாதிரியான பார்முலாவை மீண்டும் மீண்டும் பயன்படுத்தி வெற்றியை எதிர்பார்ப்பது, சினிமாவின் சாத்தியங்களை குறைத்து விடும்.
நல்ல கதை ஓட்டம் கொண்ட ஸ்கிரிப்ட் என்பது யாருடைய நடிப்பையும் உயர்த்தும். அது நடிகனின் 'ஸ்டார் வேல்யூ'யை தாண்டி, ஒரு மனிதனாக உருவாக்கும். இதைத்தான் நாம் கட்டாயம் உணர வேண்டும்.
- குரு கிருஷ்ணன்
-
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்? -
பெரிய சதியை முறியடிச்சிட்டோம்.. திமுகவை வீழ்த்திய 2 மாஸ்டர்மைண்டுகள்.. இரவோடு இரவாக பறந்த போன் -
"பயத்தில் பேன்ட்டிலேயே சிறுநீர் போயிட்டேன்.." IPLஐ கைப்பற்ற தாவூத் போட்ட திட்டம்! லலித் மோடி பகீர்












Click it and Unblock the Notifications