"நான் வெயிட்டிங் நண்பா.." விஜய்யின் அரசியல் தோல்வியை எதிர்பார்த்து அஜித் கிண்டலா? ஆரம்பிச்சிட்டாங்க!

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழக திரையுலகின் இரு துருவங்களான அஜித் மற்றும் விஜய் ஆகியோரின் ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் எப்போதும் ஒருவிதமான கலகலப்பான மோதலை உருவாக்கி வருவது வழக்கம். தற்போது, நடிகர் விஜய் தமிழக வெற்றிக்கழகம் என்ற அரசியல் கட்சியைத் தொடங்கி முழுநேர அரசியலில் ஈடுபடப்போவதாக அறிவித்திருப்பதும், ஜனநாயகன்தான் அவரது கடைசி திரைப்படம் என்றும் கூறியிருப்பதும் இந்த மோதலுக்கு புதிய பரிமாணத்தை அளித்துள்ளது.

இந்நிலையில், அஜித் ரசிகர்கள் சிலர் சமூக வலைத்தளங்களில் ஒரு புதிய கருத்தை முன்வைத்து வருகின்றனர். இன்று வெளியான அஜித் நடித்த "குட் பேட் அக்லி" திரைப்படத்தின் இடைவேளை காட்சியில் அஜித், "ஐயம் வெயிட்டிங் நண்பா" என்று கூறுவது போல ஒரு காட்சி இருப்பதாக அவர்கள் கூறுகின்றனர். இது, துப்பாக்கியில் தொடங்கி, நடிகர் விஜய்யின் பல படங்களில் இடம்பெற்ற பிரபலமான "இன்டர்வெல் டைம்" பஞ்ச் டயலாக்கின் கிண்டல் டோன் என்றும் அவர்கள் வாதிடுகின்றனர்.

Ajith Kumar Vijay Movie

அஜித் ரசிகர்கள் மேலும் கூறுகையில், "விஜய் இப்போது அரசியலுக்கு வந்துவிட்டார். அடுத்த வருடம் சட்டமன்றத் தேர்தல் நடக்கவுள்ளது. ஒருவேளை அந்த தேர்தலில் அவர் கட்சி எதிர்பார்த்த வெற்றியைப் பெறாவிட்டால், அவர் மீண்டும் சினிமாவுக்குத்தான் திரும்பி வர வேண்டும். இதைத்தான் அஜித் இப்போது கிண்டலாக 'நான் வெயிட்டிங் நண்பா' என்று சொல்லி விஜய்யை கூப்பிடுகிறார்" என்று நகைச்சுவையாக பதிவிட்டு வருகின்றனர்.

அஜித் ரசிகர்கள்

இந்த தகவல் சமூக வலைத்தளங்களில் அஜித் ரசிகர்கள் மத்தியில் வேகமாக பரவி வருகிறது. பலரும் இந்த கருத்தை நகைச்சுவையாக பகிர்ந்து வருகின்றனர். "தல வேற லெவல்", "அஜித் எப்பவுமே கிங் தான்", "விஜய் வந்தாலும் வெயிட்டிங் தான்" விஜய் எப்படியும் இங்கதானே திரும்பி வரனும், போன்ற கருத்துக்களை அவர்கள் பதிவிட்டு விஜய்யை கிண்டல் செய்து வருகின்றனர்.

விஜய் ரசிகர்கள்

இருப்பினும், விஜய் ரசிகர்கள் இந்த கருத்துக்கு பதிலடி கொடுத்து வருகின்றனர். "அஜித் வேண்டுமென்றே விஜய்யை சீண்டுகிறார்", "விஜய் கண்டிப்பாக அரசியலில் வெற்றி பெறுவார்", "அடுத்த தேர்தலில் யார் ஜெயிக்கப் போறாங்கன்னு பார்ப்போம்" என்று அவர்கள் பதிலளித்து வருகின்றனர்.

மொத்தத்தில், அஜித் மற்றும் விஜய் ரசிகர்களின் இந்த ஜாலியான மோதல் சமூக வலைத்தளங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விஜய்யின் அரசியல் பயணம் எப்படி இருக்கும் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். ஒருவேளை அஜித் ரசிகர்கள் சொல்வது போல விஜய் மீண்டும் சினிமாவுக்கு வந்தால், அப்போது இந்த "நான் வெயிட்டிங் நண்பா" டயலாக் இன்னும் சுவாரஸ்யமாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை. திருமலை திரைப்படத்தில் யாருடா இங்க தல என விஜய் கேட்டதாக இருக்கட்டும், அப்பா தயவால் நான் உயரவில்லை என அஜித் பதிலுக்கு பாட்டு வைத்ததாக இருக்கட்டும், தகதகவென கொந்தளித்த ரசிக மோதல், சமீப காலங்களாகத்தான் குறைந்திருந்தது. இப்போது யதார்த்தமாக வைத்த டயலாக் படு மோசமாக வெடித்துள்ளது. இதை இரு ரசிகர்களும் பக்குவமாக கடந்து செல்வார்கள் என எதிர்பார்க்கலாம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+