200 கோடிக்கு உயர்ந்த அஜித் குமார்.. குட் பேட் அக்லி ரூ.287 கோடி வசூல்? அப்ப ஏகே 64 தயாரிப்பது இவரா
சென்னை: குட் பேட் அக்லி படத்தை ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கிய நிலையில், அஜித்தை வைத்து மற்றொரு படத்தை எடுக்க தயாராகியிருக்கிறார்.. ஏகே 64ன் படத்தை வேல்ஸ் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் ஐசரி கணேஷ் தயாரிப்பதாக கூறப்பட்டது. ஆனால், அவர் விலகிவிட்ட நிலையில், வேறு யார் அஜித் படத்தை தயாரிக்க போகிறார்கள்? என்ற ஆர்வம் எழுந்துள்ளது.. ஒருவேளை அஜித்தே இந்த படத்தை தயாரிக்க போகிறாரா? என்ற எதிர்பார்ப்பும் நிலவுகிறது.. இந்நிலையில் மூத்த பத்திரிகையாளர் செய்யாறு பாலு, ஏகே 64 குறித்து கருத்து கூறியிருக்கிறார்.
cheyyaru balu என்ற யூடியூப் சேனலுக்கு பேட்டி தந்துள்ள செய்யாறு பாலு, "குட் பேட் அக்லி வெற்றிப்படமா? வசூல் ரீதியாக லாபம் தந்த படமா? என்ற இரு வகையான கருத்துக்கள் நிலவி வருகின்றன..

தயாரிப்பு நிறுவனத்துக்கு நஷ்டம்?
"அந்த படம் பெரிய லாபம் தரவில்லை, எங்களுக்கு நஷ்டம்தான்" என சில தியேட்டர் தரப்பில் சொல்கிறார்கள்.. ஒருசிலரோ, எங்களுக்கு லாபம்தான், தயாரிப்பு நிறுவனத்துக்குதான் நஷ்டம் என்கிறார்கள்..அப்படியானால் தயாரிப்பு நிறுவனம் ஏன் அமைதியாக இருக்கிறது? என்று தெரியவில்லை.. நஷ்ட படம் என்று சொல்லிவிட்டால், அஜித் போன்ற ஹீரோக்களின் பகையை சம்பாதிக்க வேண்டிவரும் என நினைக்கின்றனவா? என்றும் தெரியவில்லை.
அப்படியானால் உண்மையில் குட் பேட் அக்லி எவ்வளவுதான் வசூலானது என்று பார்த்தால், 287 கோடி வசூலித்திருக்கிறது.. இதில் தயாரிப்பு நிறுவனத்துக்கு நஷ்டம் எப்படி ஏற்பட்டதென்றால், விடாமுயற்சியில் நடித்து கொண்டிருந்தபோதே, அஜித் கால்ஷீட் வாங்க வேண்டும் என்பதற்காகவே 170 கோடி ரூபாயை மொத்தமாக தந்துவிட்டதாகவும், அந்த 170 கோடி ரூபாயும், வட்டிக்கு வாங்கப்பட்டது என்பதால், வட்டி குட்டி போட்டு பெருகி, நஷ்டத்தை தந்துவிட்டது என்கிறார்கள்.
குட் பேட் அக்லி டாப்
அதுமட்டுமல்லாமல், இந்த வருடம் ஜூலை வரை வெளியான படங்களில் வெறும் 5 படங்கள்தான் லாபத்தை தந்துள்ளதாகவும் அதில் குட் பேட் அக்லி டாப்பில் உள்ளதாம்.. தியேட்டர்களில் பார்த்தவர்களைவிடவும் ஓடிடியில் படத்தை தான் அதிகம் பேர் கொண்டாடியிருக்கிறார்கள்.
தற்போது AK 64 படத்துக்கான எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. அஜித் சம்பளத்துடன் சேர்த்து 350 கோடி என்கிறாரகள்.. ஹீரோவுக்கு 200 கோடி சம்பளம், மிச்சமுள்ள பணத்தில் படம் எடுக்கும்போது, அது லாபகரமானதாக திரும்பி வருமா? என்ற சந்தேகம் சிலருக்கு இருந்ததால் சில தயாரிப்பாளர்கள் ஒதுங்க துவங்கினார்களாம்.. அதில்தான் ஐசரி கணேஷ் பெயர் அடிபட்டது. அவர் இப்போது மொத்தமாக 10 படங்களை எடுக்க போவதாக அறிவித்து விட்டார்.
தயாரிப்பாளர் யார்
இப்போது அஜித் படத்தை ரோமியோ பிக்சர்ஸ் தயாரிப்பதாக பெயர் அடிபடுகிறது.. இன்னும் உறுதி செய்யப்படவில்லை.. அஜித்துக்கு தயாரிப்பாளர்கள் செட் ஆகணும்.. அது மிகவும் முக்கியமான விஷயம்.
இன்றைய தமிழ் சினிமா உள்ள சூழலில், ஏகே 64 படத்தை எடுக்க முடியுமா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது.. நவம்பர் முதல் மார்ச் மாதத்துக்குள் இந்த படத்தை அஜித் முடித்தாக வேண்டும். அதற்கு பிறகு அஜித் கார் ரேஸுக்கு செல்வதால், உரிய நேரத்தில் படத்தை தயாரிக்க, யார் வரப்போகிறார்கள் என்று தெரியவில்லை. மற்றொருபக்கம் அஜித் நினைத்தால் சொந்தமாகவே இந்த படத்தை ஆச்சரியப்படுவதற்கில்லை என்கிறார்கள்.
ஆக மொத்தம் ஏகே 64 படத்தின் டைரக்டர் ஆதிக் ரவிச்சந்திரன்.. ஆனால், தயாரிப்பு நிறுவனம் எது? என்பதுதான் பெரும் கேள்விக்குறியாக உள்ளது" என்று கூறியிருக்கிறார்.












Click it and Unblock the Notifications