அடப்பாவி ஸ்விம்மிங்குக்கு துண்டு எடுக்காம போயி மரத்தை வெட்டிட்டானே...!
சென்னை: சன் டிவியின் ஞாயிறு ரியாலிட்டி ஷோ லொள்ளுப்பா. வாய்விட்டு சிரிச்சு மகிழும்படியா மட்டும் இல்லாமல் சிறப்பு நடுவர்களாக அழகிய மீனா, நகைச்சுவை இயக்குனர் பாண்டியராஜன் பேச்சுக்களையும் ரசிக்க முடிகிறது.
குரூப் காமெடி, ஸ்டேண்ட் அப் காமெடி, மிமிக்ரி, டான்ஸுடன் கூடிய காமெடி என்று போட்டியாளர்கள் வெரைட்டியாகத் தருகிறார்கள்.
மீனா ரசித்து சிரிப்பதும், லொள்ளுப்பா கவலையை தள்ளுப்பா என்று என்ட்ரி போது ஷோ பற்றி கூறுவதும் ரசிக்கும்படி இருக்கிறது.

கோபி லோகேஷ்
ஆதித்யா டிவியில் அடடே என்று ஒரு நிகழ்ச்சி. இதில் சரியான சமயத்தில் அடடே என்று கூறி ராஜா சேனாதிபதி...அல்லது வேறு கெட்டப் என்று போட்டு சிரிக்க வைப்பவர்கள் இருவரும். இவர்கள் லொள்ளுப்பாவிலும் ஆதவன், மதுரை முத்து மாதிரி நிரந்தரமாக வாராவாரம் வந்து கலக்குபவர்கள்.

ஸ்கிரிப்ட் ரைட்டர் இயக்குனர்
இந்த வாரம் லோகேஷ் இயக்குனராகவும், கோபி ஸ்கிரிப்ட் ரைட்டராகவும் வந்து நிறைய சிரிக்க வைத்தார்கள். ஒருத்தன் கிராமத்திலிந்து நகரத்துக்கு வர்றான் சார். அவன் ஸ்விம்மிங் பூலில் குளிக்க துண்டு எடுத்துட்டு வரலை இதுதான் சீன... இப்போ துண்டுக்கு என்ன பண்ணலாம்னு கேட்கறார் டைரக்டர்.

வெட்டிட்டான் மரத்தை
இதோ வந்திருச்சு சார்னு ஸ்கிரிப்ட் ரைட்டர் சொல்றார் ...மரத்தை வெட்டிட்டான் சார்னு மரத்தை வெட்டினா என்னடான்னு கேட்டால், துண்டு கிடைக்கும்ல அ தான் மரத்தை வெட்டிட்டான்னு சீன் வைக்கலாம்னு சொல்றான்.

சார் இன்னொரு சீன
ஒருத்தன் வண்டியில வேகமா வந்துகிட்டு இருக்கான்.. ரோட்டு ஓரத்துல பைக்கை படுக்க வச்சுட்டு அவசரமா போறான் சார்... அப்படீன்னு சீன் சொல்றான். ஏண்டா நிக்க வைக்காம படுக்க வச்சுட்டு போகணும்னு டைரக்டர் கேட்க, அது நோ பார்க்கிங் இடம் சார்னு சொல்றான் ரைட்டர்.

அடிக்கலையே காதலை சொன்னால்
இன்னொரு சீன் சார்னு ரைட்டர் சொல்ல... சொல்லுடா என்ன சீன் சீக்கிரம் சொல்லுன்னு டைரக்டர் கேட்கறார். ஒரு பொண்ணும் ஒரு பையனும் காதலிக்கறாங்க. எங்க அப்பா ரொம்ப கோவக்காரர்... அவர்கிட்ட மெதுவா போயி நம்ம காதலை சொல்லிட்டு வான்னு காதலி சொல்லி அனுப்பறா.

காதலியின் அப்பாவிடம்
ஆனா அந்த பொண்ணோட அப்பாவிடம் எந்த ரியாக்ஷனும் இல்லை சார்ன்னு சொல்றான். என்னடா கோவக்கார அப்பாவிடம் எந்த ரியாக்ஷனும் இல்லையான்னு டைரக்டர் கேட்க, இவ மெதுவா சொல்லிட்டு வர சொன்னா.அவன் மெதுவா சொன்னான்..அவங்க அப்பாவுக்கு காது கேட்கலைன்னு சொல்றார் ரைட்டர்.
இது கடியாக இருந்தாலும் டிவியில் பார்க்கும்போது நிஜமாவே வாய்விட்டு சிரிப்பு வருது.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications