kalyana veedu serial: மறுபடியும் கோபிக்கு ரெண்டு பேரா? ஸ்வேதா புருஷனுக்கு என்னாச்சு?
சென்னை: சன் டிவியின் கல்யாண வீடு சீரியல் கதையில் கோபிக்காக வேண்டி ஸ்வேதா, சூர்யா என்று இரு பெண்கள் போட்டிப் போட்டுக் கொண்டு இருக்க, ஒரு கட்டத்தில் ஸ்வேதா புருஷனோட சேர்ந்துட்டான்னு நிம்மதியா இருந்தாங்க. இப்போ ஸ்வேதா புருஷனுக்கு சுவேதாவையும் கோபியையும் தொடர்பு படுத்தி சந்தேகம் வந்துருக்கு.
இந்த நிலையில், இன்றைய ப்ரோமோவில் வீட்டினுள் கியாஸ் சிலிண்டர் வெடிப்பது போவும், ஸ்வேதா உள் பக்கம் பார்த்து அலறுவது போலவும் சீன் போகுது.அப்போ ஸ்வேதா புருஷன் செத்துட்டாரா. மீண்டும் கோபிக்கு ரெண்டு பேர் போட்டியா?
என்ன அபத்தமா பேசறீங்க... புருஷன் கூட மீண்டும் சேர்ந்து வாழ ஆரம்பிச்சுட்ட ஸ்வேதாவுக்கு மறுபடியும் கோபி மாப்பிள்ளைன்னு பேசறீங்கன்னு நீங்க கேட்பீங்க. ஆனால், கதை அப்படித்தான் போய்கிட்டு இருக்கு தெரியுமா?

கோபி கிடைப்பானா பயம்
ஸ்வேதா இனி தனது வாழ்வில் கோபிக்கு இடமில்லை என்று புருஷன் பாகிஸ்தான் ஜெயிலில் இருந்து வந்தவுடனே அவனுடன் வாழ சென்றுவிட்டாள். ஆனால், கோபியுடன் ஸ்வேதாவுக்கு கல்யாணம் செய்து வைக்கலாம் என்று கோபி வீட்டிலும், ஸ்வேதாவின் அண்ணனும் செய்து வைத்திருந்த முடிவு, ஸ்வேதா புருஷனுக்கு தெரிய வர, அவன் சந்தேகம் கொண்டு ஸ்வேதாவிடம் கோபமாக இருக்கிறான். இது சூரியாவின் அப்பாவுக்கும் சூரியாவுக்கும் தெரிய வர அவர் சொல்றராம்.

வாழக்கை தரும் ஆபத்பாந்தவன்
ஒரு பிரச்சனையும் இல்லைன்னு கோபி உன்னை கல்யாணம் செய்துக்க சம்மதிச்சான். இப்போ மறுப்படியும் ஸ்வேதாவுக்கு பிரச்சனை எனும்போது மீண்டும் கோபி ஸ்வேதாவுக்கு வாழ்க்கைத் தரேன்னு போகாம இருக்கணும். அதுக்கு கோபி உத்திரவாதம் தருவாரான்னு கேளுன்னு சொல்றார் சூர்யாவின் அப்பா. இதுக்கு பட்டுன்னு கோபி அதாவது வாழ்க்கை இல்லாதவர்களுக்கு வாழ்க்கை தரும் அந்த ஆபத்பாந்தவன் கோபி என்ன பதில் சொல்லி இருக்கணும்?

என்னைக்கு புருஷனோட
ஸ்வேதா என்னைக்கு புருஷனோட சேர்ந்து வாழ ஆரம்பிச்சு போயிட்டாளோ, அப்பவே எனக்கும் ஸ்வேதாவுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. அவங்களுக்குள்ள எதாவது பிரச்சனைன்னா கூட அவங்களே தீர்த்து வச்சுக்குவாங்க இதுல இனி என்னை சம்பந்தப்படுத்தி பேசாதீங்கன்னு சொல்லி இருக்க வேண்டாம்...?இங்கே இவர் என்ன சொல்லறாரு தெரியுமா? இல்லை சார் இனிமே நான் சூரியாவைத்தான் கல்யாணம் செய்துக்குவேன். ஸ்வேதா வாழக்கையில் ஏதாவது பிரச்சனைன்னா அதைத் தீர்த்து வைக்க மட்டும்தான் சார் போவேன்னு சொல்றார் கோபி.

பயம் இல்லாமல்
அப்படீன்னா இனி பயம் இல்லாமல் இருக்கலாம் என்று சூர்யாவின் அப்பாவும், சூரியாவும் சொல்றாங்க. அப்படி தேடினாலும் கிடைக்காத அரும்பொன் மாப்பிள்ளையாம் கோபி. கதையையும் எவ்ளோ கேவலமா அமைச்சு இருக்காங்க பாருங்க.ஸ்வேதா தனியா இருந்தபோதும் கோபி தனக்கு ஸ்வேதாவுக்கான்னு சூர்யாவுக்கு பயம். ஸ்வேதா புருஷனோட சேர்ந்து வாழ ஆரம்பிச்ச பிறகும், மறுபடியும் கோபி ஸ்வேதாகிட்ட போயிருவானோன்னு கேவலமான பயத்திலேயே இந்த கதையை வச்சு இருக்காய்ங்க.

நிர்வாகம் தலையீடு
அதுக்கு ஏற்ற மாதிரி இன்றைய ப்ரோமோவில், ஸ்வேதா புருஷன் கியாஸ் சிலிண்டர் வெடிச்சு உள்ளே மாட்டிக்கிட்ட மாதிரி காண்பிக்கறாங்க. நிஜமா இந்த கதையில் மீண்டும் கோபி ஸ்வேதாவுக்கு சூர்யாவுக்கான்னு கொண்டு போனீங்க,..பல பெண்களுக்கு நீங்கள் பதில் சொல்ல வேண்டியது இருக்கும். இல்லை சன் டிவி நிர்வாகம் தலையிட்டு எதாவது செய்யணும்.
-
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
மூட்டை மூட்டையாக போய் தங்கத்தை அடகு வைக்கும் மக்கள்.. வெளியான ஷாக் தகவல்.. இப்படி ஒரு காரணமா? -
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
தமிழ் புத்தாண்டு ராசி பலன்: அஷ்டமசனியில் அதிர்ஷ்டத்தை அள்ளும் சிம்ம ராசி.. காதலில் வெற்றி கன்ஃபார்ம் -
சென்னையில் ரூ.36 கோடி கோடிக்கு வீடு வாங்கிய நகை கடைக்காரர்.. அதுவும் இந்த ஏரியாவில்..!! -
33 கேள்விகளுடன் ஒவ்வொரு வீட்டிற்கும்.. நேரடியாகவே வரும் அதிகாரிகள்.. நாம் என்ன செய்ய வேண்டும்? -
திமுக சிங்கிள் மெஜாரிட்டி! அதிமுகவிற்கு எதிர்க்கட்சி அந்தஸ்தே கிடைக்காது? சர்வேவில் கவனிச்சீங்களா -
எதிர்நீச்சல் சீரியல் ராணா யார் தெரியுமா? இத்தனை படங்களில் நடித்திருக்கிறாரா? இனி தான் சம்பவமே இருக்கு -
சென்னை சென்ட்ரல் -கோவை வந்தே பாரத்... தங்க முட்டை போடும் வாத்து.. ஒப்புக்கொண்ட ரயில்வே? -
ஏப்ரல் 1ம் தேதியான இன்று சம்பளம், கடன் எதுவுமே சாத்தியமில்லை... மக்கள் அறிய வேண்டிய உண்மை -
வருமான வரி படிவம் வெளியீடு.. மாத சம்பளம் வாங்குவோர், சிறு வணிகர்கள்.. அறிய வேண்டியவை












Click it and Unblock the Notifications