சினிமாவுல நடிச்சிருந்தா சீரியல்ல நடிக்கும்போது கொம்பு முளைச்சிருமா?

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஒரு லட்சுமி நடிகை இவுக... நல்ல நடிகைதான்...அநியாயமா வாய்ப்பை கெடுத்துகிட்டாக அம்மணி. ஆனா, அவுகளுக்கு இது இன்னும் புரியல.

கூட நடிக்கறவக சீரியலில் இணைபிரியாத தோழிகள்னு டைரக்டர் காமிச்சு இருக்காக. கதை சொல்லும்போதே இருவருக்கும் நிறைய காம்பினேஷன் காட்சிகள் இருக்கும்னு டைரக்டர் அவுகளே சொன்னாகளாம்.

அப்போ எல்லாம் இந்த அம்மணிக்கு புரியலையோ.. இல்லை வாய்ப்பு கிடச்சா போதும்னு இருந்தாகளோ நடிக்க ஒத்துக்கிட்டாக.. அதுக்கப்புறம்தான் அம்மணி டைரக்டரை டார்ச்சர் பண்ண ஆரம்பிச்சு இருக்காக.

Gossip on film actress in TV serial

நான் எத்தனை சினிமாவுல நடிச்சுட்டு வந்திருக்கேன்... எப்போ பார்த்தாலும் அவ கூட காம்பினேஷன் சீன்ஸ்... அவ வெள்ளாவி வச்சு வெளுத்த மாதிரி இருக்கா. காம்பினேஷன் சீன்ல நான் டல்லா தெரியறேன்னு கோவம் வேற இவுகளுக்கு.

டைரக்டர் என்ன பண்ணுவார்... அம்மணிக்காவ கதையை மாத்த முடியுமா? இல்ல கதைக்கு செட்டாகி, பல தாய்மார்களை கவர்ந்த வெயிலுக்கு காட்டாம வளர்த்த பொண்ணைத்தான் மாத்த முடியுமா.

டைரக்டர் அந்த காதில் வாங்கி இந்த காதுல விட அம்மணி சீரியலை விட்டு கழண்டுக்கிட்டாங்க. ரொம்பவே கஷ்டப்பட்டு, வேற ஒரு நடிகை அவுகளும் சினிமா நடிகைதான். அவுகளை ஃபிக்ஸ் பண்ணிட்டாக சீரியல் டீம்.

கொஞ்ச நாள் அவுக இடத்துல இவுகளை வச்சு சீரியல் பார்க்க கஷ்டமாத்தான் இருந்துச்சு இப்போ அவுகளுக்கு இவுக இளமையா அழகா இருக்காகன்னு சனங்க பேசிக்கறாங்க. இது இயக்குநரின் விடா முயற்சிக்கு கிடைச்ச வெற்றின்னு சொல்லலாமே...

ஆனா, பாவம் இப்போ வீட்டுல சும்மா இருக்காவ அந்த நடிகை.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+