Goundamani: சாந்தி இறப்பால் கலங்கிய கவுண்டமணி! "அம்மா அம்மா" என அழைப்பாரே! பணிப்பெண் உருக்கம்
சென்னை: நடிகர் கவுண்டமணியின் மனைவி சாந்தி, எங்களை எல்லாம் வீட்டு பணியாளர்களாகவே நடத்தமாட்டார் என்றும் தங்கள் குடும்பத்தில் ஒருவராகவே நடத்துவார் என்றும் அவரது வீட்டு பணிப்பெண் உருக்கமாக தெரிவித்துள்ளார்.
மேலும் கவுண்டமணியும், தன் மனைவியை இதுவரை சாந்தி என அழைத்து பார்த்ததில்லை என்றும் அம்மா அம்மா என்றுதான் அழைப்பார் என அந்த பெண் தெரிவித்தார்.

தமிழ் சினிமாவில் கவுண்டமணி காமெடியில் கலக்கியதை யாராலும் மறக்க முடியாது. அவர் ஒரு டிரென்ட் செட்டராகவே இருந்தார். ஒரு காலத்தில் எப்படி சில்க் ஸ்மிதாவின் கவர்ச்சி நடனத்திற்காக மக்கள் படம் பார்க்க வந்தார்களோ, அதே போல் கவுண்டமணியின் காமெடியை பார்ப்பதற்காகவே படம் பார்க்க வந்தனர். இதனால் படங்களும் ஓடின.
சத்யராஜ்
இவர் சத்யராஜ், கார்த்திக், ஜெயராமன், சுந்தர் சி உள்ளிட்டோருடன் சேர்ந்தால் கலக்கல் காமெடிதான். தற்போது அவர் ஒத்த ஓட்டு முத்தையா படத்தில் நடித்து அது ரிலீஸானது. ஆனால் அந்த படம் எதிர்பார்த்த வெற்றியை பெற்றுத் தரவில்லை.
கவுண்டமணி
கவுண்டமணி வயோதிகம் காரணமாக பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதில்லை. யாராவது மறைந்துவிட்டால் அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்த அழைத்து வரப்பட்டார். இந்த நிலையில் கவுண்டமணியின் மனைவி சாந்தி நேற்று காலமானார்.
உடல்நலக் குறைவு
இவர் கடந்த சில காலமாகவே உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டிருந்தார். அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் சாந்தி சிகிச்சை பலனின்றி காலமானார். இவரது உடலுக்கு செந்தில், சத்யராஜ், நிழல்கள் ரவி உள்ளிட்டோர் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர்.
கலங்கிய கவுண்டமணி
எல்லாரையும் சிரிக்க வைத்த கவுண்டமணி, நேற்று மிகவும் கலங்கி போயிருந்தார். கவுண்டமணியும் சாந்தியும் ஒற்றுமையாக இருப்பார்களாம். இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனராம்.
சாந்தியை திருமணம் செய்த கவுண்டர்
சாந்தியை திருமணம் செய்தவுடன்தான் கவுண்டமணிக்கு திரைத்துறை சூடுபிடித்ததாம். இதனால் மனைவி மீது மிகவும் பிரியம். இவர் ஷூட்டிங் சென்றுவிட்டால் வீட்டை நிர்வகிப்பது, குழந்தைகளை ஆளாக்குவது என பெரிய பங்கு சாந்திக்கு உண்டு.
மனைவியிடம் காசு வாங்கிய மணி
எங்கு சென்றாலும் தன் மனைவி கையால் காசு வாங்கிக் கொண்டுதான் கவுண்டமணி வெளியே செல்வாராம். இப்படிப்பட்ட சூழலில் சாந்தியின் மறைவு அவரை புரட்டி போட்டுவிட்டது.
30 ஆண்டு பணி
இதுகுறித்து கலாட்டா சேனலுக்கு கவுண்டமணி வீட்டுப் பணிப்பெண் கூறுகையில் நான் கவுண்டமணி சார் வீட்டில் 30 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறேன். அவர் வீட்டில் துணி துவைக்கும் வேலை செய்து வருகிறேன்.
தாய் வீடு
எங்களை எல்லாம் பணியாளர்கள் போல் நடத்தாமல் அவர்கள் வீட்டில் ஒருவராகவே நடத்துவார். அவர் வீட்டிற்கு சென்றாலே தாய் வீட்டுக்குச் சென்றது போல் இருக்கும். எனக்கு 5 மகள்கள், அவர்களுக்கெல்லாம் திருமணம் செய்து வைத்தேன்.
சாமான்கள்
அவர்களை வீட்டுக்கு வரச் சொல்வார்கள். அழைத்து வருவேன். ஐயா- அம்மா காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்குவார்கள். அப்போது புதுமணத் தம்பதிக்குத் தேவையான அனைத்தையும் அவர்கள் தருவார்கள்.
படுக்கை அறை வரை செல்வேன்
எனது பேத்தியை கூட திருமணம் முடிந்ததும் அழைத்து வரச் சொன்னார்கள். அப்போதும் இதேதான். நான் அவர்கள் வீட்டு படுக்கை அறை வரை செல்வேன். எங்களை எல்லாம் அப்படித்தான் நடத்தினார்கள்.
அம்மா அம்மா
கவுண்டமணி ஐயா, சாந்தி என அந்தம்மாவை ஒரு முறை கூட அழைக்கவே மாட்டார். "அம்மா அம்மா" என்றுதான் அழைப்பார். இப்போது அந்த அம்மா மறைவிலிருந்து அவர் மீண்டு வரவேண்டும் என உருக்கமாக பேசினார்.
-
விஜய்க்கு எதிராக பெரம்பூர், திருச்சியில் கிழக்கில்.. களமிறங்கும் திமுக, அதிமுக வேட்பாளர்கள் யார்? -
Bose Venkat: சீட் தராததால் கட்சி மாறுகிறேனா? நான் திமிர்பிடித்த திமுககாரன்! போஸ் வெங்கட் பொளேர்! -
அரசியலன்னா இதுதான்.. எப்போ என்ன நடக்கும்னே தெரியாது.. ஸ்டாலின் டிக் அடித்த பெயர்.. பலர் ஷாக் -
இதுவரை திமுக ஜெயிக்காத.. கோவை தெற்கு தொகுதியைத் கேட்டு வாங்கிய செந்தில் பாலாஜி.. என்ன காரணம்? -
916 KDM நகை வாங்குவோர் கவனத்திற்கு.. ஒரு சவரன் தங்கம் எடுக்கும்போதே நஷ்டமா? பலர் செய்யும் பெரிய தவறு -
அழகே அழகு அப்டேட்: திமிரா பேசிய சுரேஷுக்கு சரியான பதிலடி கொடுத்த அழகுமதி.. ஒன்று சேர்ந்த குடும்பம் -
ஜெயலலிதா ஸ்டைலை பின்பற்றும் விஜய்! ‘டபுள் தொகுதி’ ஃபார்முலாவை கையில் எடுத்தது ஏன்? இதுவரை யார் யார்? -
திமுக தேர்தல் அறிக்கை LIVE: மகளிர் உரிமை தொகை, புதுமைப்பெண், தமிழ்ப்புதல்வன் தொகை உயர்வு! -
மத்தி, சென்னையை கிளீன் ஸ்வீப் செய்யும் திமுக! தெற்கு, வடக்கில் ட்விஸ்ட்! அப்போ அரியணை? வெளியான சர்வே -
சிக்சர் அடித்த ஸ்டாலின்.. இந்தியாவிலேயே முதன்முறை! பெண்களுக்காக ஸ்டாலின் கொண்டு வரும் மெகா திட்டம்! -
விஜய்க்கு சத்தமின்றி எடப்பாடி வைத்த செக்.. சம்பவம் பண்ணிட்டாரே.. ஸ்டாலினும் விடலையே.. கேம் ஓவர்? -
பெரம்பூர், திருச்சி கிழக்கு தொகுதிகளில் சி. ஜோசப் விஜய்.. 2 தொகுதிகளில் போட்டியிடும் தவெக தலைவர்!












Click it and Unblock the Notifications