Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

நெஞ்சிலேயே நடிகரை மிதித்த கவுண்டமணி? தொட்டு நடிக்காதீங்க.. நடிகை போட்ட கண்டிஷனால் மிரண்டு போன யூனிட்

Subscribe to Oneindia Tamil

சென்னை: கோவை சரளா, ஜூனியரான வடிவேலுவுடன் நடிக்க முடியாது என்று சொல்லிவிட்டார்.. நான்தான் சமாதானம் செய்து, வடிவேலு நன்றாக நடிக்கக்கூடியவர் என்று சொல்லி, கோவை சரளாவுடன் நடிக்க வைத்தேன்.. வடிவேலுவுடன் ஜோடியாக நடித்ததால், மற்றவர்கள் வாய்ப்பு தராமல் போனால், நான் உனக்கு வாய்ப்பு தருகிறேன் என்று கியாரண்டி தந்தேன்" என்று பிரபல டைரக்டர் வி சேகர் பேட்டி ஒன்றில் கூறியிருக்கிறார்.. அத்துடன் கவுண்டமணி பற்றியும் பெருமிதமாக சொல்லியிருக்கிறார்.

பாக்யராஜிடம் யார் உதவியாளராக இருந்தாலும் அவர்கள் பெரிய ஆள்தான்.. ஆனாலும் நான் முதன்முதலில் எடுத்துக் கொண்ட நீங்களும் ஹீரோதான் சப்ஜெக்ட் சற்று கடினமானது.. அது அவர்களை பாதிக்கும் என்பதால், எல்லா ஹீரோக்களுமே நடிக்க முன்வரமாட்டார்கள்..

Television Goundamani Kovai sarala

நம்பியார், வீரப்பன், சில்க்கை வைத்து வியாபாரம் செய்ய முடியவில்லை.. அப்போதுதான் , கவுண்டமணி செந்தில் என்னுடன் இணைந்தார்கள்.. அந்த நேரத்தில் கவுண்டமணி செந்திலுக்கு செம டிமாண்டு. இருவருமே பீக்கில் இருந்தனர்.. அவர்களிடம் என்னுடைய கதையை சொன்னதுமே, பிடித்துவிட்டது.. எனக்கு காமெடி சென்ஸ் இருப்பதாக கூறி, சம்பளம் கம்மியாகவே எனக்காக நடித்து தந்தார்கள்.. இவர்கள் 2 பேரை வைத்துதான், அந்த படத்துக்கு வியாபாரமே செய்தேன்.

உதவி செய்த கவுண்டமணி

அடுத்து நான் புடிச்ச மாப்பிள்ளை படத்தில் கவுண்டமணிக்கு நல்ல கேரக்டர் தந்தேன்.. தொடர்ந்து ஏழெட்டு படங்கள் தந்தேன்.. லாரல்-ஹார்ட்டி ஆங்கிலப்படங்களில் வரும் காமெடி காம்பினேஷன் போல, இங்கு கவுண்டமணி-செந்தில் உருவானார்கள்.. என்எஸ்கே-மதுரம், நாகேஷ் - மனோரமா ஜோடி சினிமாவில் ஹிட்டாகிவிடும்.. அதுபோல, ஆண்களுக்குள் ஜோடி சேர்ந்து காமெடி சேர்ந்ததுதான் கவுண்டமணி-செந்தில் ஜோடி, கரகாரட்டக்காரன் படத்தில் ஹிட்டாக காரணம்.

என்னை தூக்கி விட்டதில் மிகப்பெரிய இவர்கள் 2 பேருக்கும் உண்டு.. நாடகத்திலிருந்து வந்தவர்கள் என்பதால், அவர்களது நடிப்பு எனக்கு பேருதவி செய்தது.. நான் நன்றாக வருவேன் என்று ஆரம்பத்திலேயே என்னை பார்த்து கணித்து சொன்னவர்கள்.. என் மீதுள்ள நம்பிக்கையால்தான், அதிக உதவிகளை எனக்கு செய்தார்கள்.

கவுண்டமணி - செந்தில்

கவுண்டமணி செந்தில் இருவருமே நல்ல புரிதலில் இருப்பார்கள்.. அரசியல் மேடைகள், பிரச்சாரங்களில் செந்தில் ஆவேசமாக பேசிவிட்டு வந்தாலும், ஷூட்டிங்கில் கவுடண்மணியிடம் நடிக்கும்போது, அப்பாவி முகத்தை வைத்து கொண்டு நடிப்பார் செந்தில்.. ஒவ்வொரு சீனிலும் எப்படி நடிப்பது, டாமினேட் செய்வது என்பது இருவரும் முன்கூட்டியே பேசி வைத்து கொள்வார்கள். ஈகோ மட்டும் இவர்களிடம் இருந்தால், ஆரம்பத்தில் 2 படத்திலேயே காலியாகியிருப்பார்கள்.

வடிவேலுவை உள்ளே கொண்டுவந்ததில் ஒரு சிக்கல் வந்தது.. தேவர் மகன் படம் வந்த புதிதில், என்னுடைய படங்களில் வாய்ப்பு கேட்டு வடிவேலு தொடர்ந்து வந்து கொண்டிருந்தார்.. எற்கனவே என்னிடம் கவுண்டமணி, செந்தில், எஸ்எஸ் சந்திரன், குமரிமுத்து, சார்லி, சின்னி ஜெயந்த், என ஏகப்பட்ட காமெடியர்கர்கள் இருந்தனர்..

முதல்முறையாக ஜோடி

இருந்தாலும் வரவு எட்டனா செலவு பத்தனா படத்தில் வாய்ப்பு தர நினைத்தேன்.. ஆனால் வடிவேலு அப்போது ஒல்லியாக இருந்தார்.. வெயிட்டான ரோல் தரவும் முடியாது.. அதனால் கோவை சரளாவை ஜோடி போட்டு நடிக்க வைத்தேன்.. ஜூனியர் வடிவேலுவுக்கு கோவை சரளா ஜோடியா? என்று கவுண்டமணி, செந்திலுக்கு கோபம் வந்துவிட்டது.. அதிலும் செந்தில் சாருக்குதான் அதிக கோபம் வந்தது.. பிறகு அவர்களை சமாளித்து சமாதானம் செய்தேன்..

பிறகு கோவை சரளா, ஜூனியரான வடிவேலுவுடன் நடிக்க முடியாது என்று சொல்லிவிட்டார்.. நான்தான் சமாதானம் செய்து, வடிவேலு நன்றாக நடிக்கக்கூடியவர் என்று சொல்லி, கோவை சரளாவுடன் நடிக்க வைத்தேன்.. வடிவேலுவுடன் ஜோடியாக நடித்ததால், மற்றவர்கள் வாய்ப்பு தராமல் போனால், நான் உனக்கு வாய்ப்பு தருகிறேன் என்று கியாரண்டி தந்தேன்.

கியாரண்டி - கண்டிஷன்

இவ்வளவும் சொன்ன பிறகு சம்மதித்த கோவை சரளா, வடிவேலு தன்னை தொட்டு நடிக்கக்கூடாது, தொட்டு நடித்தால் தன்னுடைய இமேஜ் போய்விடும் என்று கண்டிஷன் போட்டார். கடைசியில் அந்த படத்தில் இந்த ஜோடி ஹிட்டாகி, வரிசையாக ஜோடி சேர்ந்து நடிக்க ஆரம்பித்துவிட்டார்கள்.. 2 பேரும் ஒரே காரில் சுற்ற ஆரம்பித்துவிட்டார்கள்.

வடிவேலு-கோவை சரளா ஜோடி, வெற்றி பெற்ற ஆறேழு படங்கள் வடிவேலு என்னிடம் பணியாற்றினார்.. அதில் ஒரு சீனில் ஆட்டோவை நிறுத்திவிட்டு வரும்போது, கவுண்டமணி வடிவேலுவை அறைவது ஒரு சீன் இருந்தது..

நெஞ்சில் மிதித்த கவுண்டமணி

கோவை சரளாவை ஜோடியாக போட்ட கடுப்பில் இருந்த கவுண்டமணி, பளார்னு வடிவேலுவை நிஜமாகவே அறைந்துவிட்டார். இதை வடிவேலு கொஞ்சமும் எதிர்பாராமல் என்னிடம் ஓடிவந்து, சார் அவர் என்னை அடித்து காலி செய்றார் சார் என்றார்...

அவர் நடிப்புக்காகத்தான் உன்னை அடித்தார் என்றேன்.. அதற்கு வடிவேலு, இல்லை, சார் நிஜமாகவே என்னை அடித்துவிட்டார் பாருங்க" என்றார்..

மறுநாள் வடிவேலு, கையில் கிடைத்த பணத்தை வைத்து ஒரு கார் வாங்கி வந்து, அதை கவுண்டமணி மீது இடிப்பதுபோல ஓட்டி வந்தார்.. உடனே கவுண்டமணி, "இவங்கெல்லாம் சில்லறை பசங்க... ஒன்னுமில்லாத ஆட்களை எல்லாம் நீ வளர்த்துவிடறே, உனக்கே ஒரு நாள் ஆட்டம் காட்டுவாங்க பாருங்க" என்றார்..

கவுண்டமணி சொன்னதுபோல உண்மையிலேயே, சில படங்களுக்கு பிறகு எனக்கு வடிவேலு அப்படி செய்தார்.. திறமைசாலிதான், ஆனால் பக்குவம் குறைவு" என்று கூறியிருக்கிறார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+