மஞ்ச தாலியை தொட்டதுமே.. நொறுங்கிய கவுண்டமணி.. விஜய் இதுக்கா வந்தார்? முதலாளி பொண்ணு சுகன்யா: பிரபலம்
சென்னை: கவுண்டமணி மீது ஆயிரம் விமர்சனம் வைத்தாலும், அவர் ஒரு வெள்ளந்தியான மனிதர்.. உலக சம்பவங்களை விரல் நுனியில் வைத்திருப்பார் கவுண்டமணி.. எந்த விஷயமாக இருந்தாலும் நேருக்கு நேர் துணிச்சலாக பேசக்கூடியவர். வெளியே பார்ப்பதற்குதான் முரட்டுத்தனமாக தெரிவார், நக்கலாக பேசுவார் கவுண்டமணி.. ஆனால், உள்ளுக்குள் அவர் ஒரு குழந்தை என்றுதான், சினிமாவில் பலரும் சொல்வார்கள்" என்று புகழாரம் சூட்டியிருக்கிறார் மூத்த பத்திரிகையாளர் செய்யாறு பாலு.
Cheyyaru Balu யூடியூப் சேனலில் பேட்டி தந்திருக்கும் செய்யாறு பாலு, "தாலி கட்டும்போது , 85 வயதில் நொறுங்கி போய் கவுண்டமணி அழுத காட்சி, மனசையே உருக்கிவிட்டது. எத்தனை உறவுகள் இருந்தாலும், பக்கபலமாக இருக்கக்கூடிய ஒரே உறவு மனைவிதான்.

கடந்த 2 நாட்களாக உடைந்துபோய் காணப்பட்ட கவுண்டமணி, மின்மயானத்தில் தன்னை மீறி கலங்கி அழுதது, இத்தனை வருடம் மனைவியுடன் வாழ்ந்த அந்த வாழ்க்கையின் பாதிப்புதான்.. கடந்த 3 வருட காலமாகவே படுக்கையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார் சாந்தி..
தாம்பத்யம் - அன்பு
கடைசி காலகட்டத்தில்தான், வயதான காலத்தில்தான் தாம்பத்யம், அன்பு அனைவருக்கும் தேவைப்படும்.. தான் உள்ளுக்குள் உடைந்து போனாலும் இந்த 85 வயதிலும் அதை வெளியே கவுண்டமணி காட்டிக் கொள்ளவில்லை..
சினிமா பிரபலங்கள் பெரும்பாலும், 99 சதவீதம் அக்கம் பக்கத்தில் உள்ளவர்களிடம், அதிலும் மிடில் கிளாஸ், அதுக்கும் கீழே உள்ளவர்களிடம் எளிதாக பழக மாட்டார்கள். தனக்கு நிகரானவர்களிடம் மட்டுமே பழகுவார்கள். அதுவும் அக்கம் பக்கத்தில் உறவு வைத்து கொள்ள மாட்டார்கள்.
சாந்தி தங்கமான பெண்
கவுண்டமணி மனைவி இறந்தபோது, அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள்தான் பதறியடித்துக் கொண்டு ஓடிவந்தார்கள்.. அதில் ஒரு பெண்மணி தன்னுடைய பேட்டியில், "சாந்தி தங்கமான பெண்.. நான் ஏதாவது ரேஷன் வாங்கிட்டு நடந்து வந்து கொண்டிருந்தால், அந்த வழியாக காரில் சாந்தி செல்லும்போது, என்னை பார்த்துவிட்டு, காரை நிறுத்தி, என்னையும் அவருடைய காரில் ஏற்றிக் கொண்டு வந்துவிடுவார். எங்க வீட்டில் எந்த விசேஷம் என்றாலும் வந்து கலந்து கொள்வார்" என்று தெரிவித்துள்ளார்..
கவுண்டமணி - சாந்தி இருவருமே தங்களது ஆரம்ப காலத்தில் கடினமான வாழ்க்கையை வாழ்ந்துள்ளனர்.. அதை இறுதிவரை மறக்காமலும் இருந்துள்ளனர் என்பதற்கு இதெல்லாம் ஒரு உதாரணம்.
வெள்ளந்தி மனிதர்
கவுண்டமணி மீது ஆயிரம் விமர்சனம் வைத்தாலும், அவர் ஒரு வெள்ளந்தியான மனிதர்.. உலக சம்பவங்களை விரல் நுனியில் வைத்திருப்பார் கவுண்டமணி.. எந்த விஷயமாக இருந்தாலும் நேருக்கு நேர் துணிச்சலாக பேசக்கூடியவர். வெளியே பார்ப்பதற்குதான் முரட்டுத்தனமாக தெரிவார், நக்கலாக பேசுவார் கவுண்டமணி.. ஆனால், உள்ளுக்குள் அவர் ஒரு குழந்தை என்றுதான், சினிமாவில் பலரும் சொல்வார்கள்.
சின்ன கவுண்டர் படத்தின்போது, சுகன்யாவை "முதலாளி பொண்ணு" என்றுதான் கவுண்டமணி கூப்பிடுவார். காரணம், சுகன்யாவின் அப்பா, கவுண்டமணியை ஹீரோவாக வைத்து ராஜா எங்கள் ராஜா என்ற படம் எடுத்தார்.. அந்த நன்றியுணர்ச்சி காரணமாகவே சுகன்யாவை முதலாளி பொண்ணு என்றுதான் எப்போதும் கூப்பிடுவாராம்.
பாக்யராஜ் சான்ஸ்
தேனாம்பேட்டை சிக்னல் எதிரே பாக்யராஜ், கல்லாப்பட்டி சிங்காரம், கவுண்டமணி, சங்கிலி முருகன் எல்லாரும் ஒன்றாகத்தான் ரூமில் தங்கியிருந்தனர்.. அப்போதுதான், பாக்யராஜ், பாரதிராஜாவிடம் சொல்லி, 16 வயதினிலே படத்தில் கவுண்டமணிக்கு வாய்ப்பு வாங்கி தந்திருக்கிறார்.. பிறகு கிழக்கே போகும் ரயில் படத்திலும், டெல்லி கணேஷூக்காக ஒதுக்கப்பட்டிருந்த கேரக்டரை கவுண்டமணிக்காக பேசி வாங்கி தந்துள்ளார் பாக்யராஜ்..
விஜய் - நன்றியுணர்ச்சி
கவுண்டமணி மனைவியின் உடலுக்கு நடிகர் விஜய் ஓடோடி வந்து அஞ்சலி செலுத்தியிருந்தார். இதற்கு காரணம், கவுண்டமணியின் மிக தீவிரமான ரசிகர் விஜய்.. அதுமட்டுமல்லாமல், கோயம்புத்தூர் மாப்ளை படத்தில் நடிக்கும்போது விஜய்க்கு நிறைய டிப்ஸ்களை தந்திருக்கிறார் கவுண்டமணி.
நடிகன் படத்தை ரீமேக் செய்து, அதில் கவுண்டமணி கேரக்டரில், தான் நடிக்க வேண்டும் என்பது விஜய்யின் ஆசையாக இருந்துள்ளது.. இந்த தகவலை பி.வாசு சாரே பல முறை சொல்லியிருக்கிறார்.
இன்று தன்னுடைய மனைவியை இழந்து, இறுகிய முகத்துடன் காணப்படுகிறார் கவுண்டமணி.. ஆனாலும், அவரிடம் இன்று காணப்படும் மனோதிடத்தை, கடவுள் எப்போதும் அவருக்கு தரவேண்டும்" என்று தெரிவித்துள்ளார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications