சமந்தாவுக்கு எகிறிய கிரேஸ்.. இரவில் பிரபல நடிகையை நீச்சல்குளத்தில் காண சென்னைக்கு வந்த ஜனம்: பிரபலம்
சென்னை: ஆந்திர மாநிலம் தெனாலி பகுதியை சேர்ந்த ரசிகர் ஒருவர், தன்னுடைய சொந்த ஊரில் தன்னுடைய வீட்டுக்கு பக்கத்திலேயே நடிகை சமந்தாவின் சிலை அடங்கிய கோவிலை கட்டியுள்ளார். இந்த கோவிலை நடிகை சமந்தாவின் பிறந்தநாளை ஒட்டி திறந்து வைத்துள்ளார்.. இந்த செயல் அனைவரையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. இதுகுறித்து மூத்த பத்திரிகையாளர் செய்யாறு பாலு தன்னுடைய கருத்துக்களை பகிர்ந்து கொண்டுள்ளார்.
Cheyyaru Balu யூடியூப் சேனலில் பேசியிருக்கும் மூத்த பத்திரிகையாளர் செய்யாறு பாலு, "ஆந்திர மாநிலம் தெனாலியை சேர்ந்த நபர் சமந்தாவுக்கு ஒரு கோயில் கட்டியிருக்கிறார்.. அதில், சமந்தாவின் மார்பளவு சிலையை வைத்துள்ளார்.. அந்த கோயிலுக்கு கும்பாபிஷேகமும் நடத்தியிருக்கிறார்.. அந்த ஒட்டுமொத்த குடும்பத்தினரும், சமந்தாவின் சிலையை கும்பிட்டு வழிபடுகிறார்கள்.

சமந்தாவுக்கு கோயில் - கும்பாபிஷேகம்
எதை நோக்கி நாம் சென்று கொண்டிருக்கிறோம்? ஒருபக்கம் நாடுகளுக்குள் போர் வெடித்து வருகிறது, மற்றொரு பக்கம் தகவல் நுட்பம், விஞ்ஞானம் பெருகி வருகிறது.. இந்த காலத்தில் இன்னமும் இவர்கள் இப்படி இருக்கிறார்களே என்று அதிர்ச்சியாக இருக்கிறது.
கோயில் கட்டியவர், சமந்தாவுக்கு தெரிந்தவரா? உறவினரா? என்றால் இல்லை.. இவருக்கும் சமந்தாவுக்கும் சம்பந்தம் இல்லையாம். சமந்தா நிறைய நல்லது செய்துள்ளதால்தான், சிலை வைத்து கடவுளாக கும்பிடுவதாக அந்த நபர் கூறியிருக்கிறார்.
சமந்தாவுக்கு எகிறும் கிரேஸ்
நம்ம பல்லாவரம் பொண்ணுக்கு, ஆந்திராவில் சிலையா? என்று வியப்பாக உள்ளது.. அப்படியென்ன நல்லது செய்தார்? என்று தெரியவில்லை.. ஆனால், தெலுங்கு ரசிகர்களிடம் சமந்தாவுக்கு ஆரம்பத்திலிருந்தே வரவேற்பு கிடைத்து விட்டது.. பிறகு நாகார்ஜூனா குடும்பத்தில் மருமகளாக சென்றது மேலும் சமந்தாவுக்கு புகழ் கிடைத்தது..
பிறகு கோடிக்கணக்கான பணத்தை ஜீவனாம்சமாக வாங்குவதற்காகத்தான், நாக சைதன்யாவை சமந்தா டைவர்ஸ் செய்வதாக செய்திகள் பரவின. ஆனால், 10 பைசாகூட தனக்கு பணம் வேண்டாம் என்று சமந்தா நிராகரித்துவிடவும், ஆந்திராவில் சமந்தாவின் ரேஞ்சு வேறு விதமாக உயர்ந்துவிடடது. எனினும், அந்த ரசிகர் சொன்னபடி, சமந்தா என்ன நல்லது செய்தார் என்று தெரியவில்லை.
நீச்சல் குளத்தில் நடிகை
அந்த காலத்தில் பிரபலமான தமிழ் நடிகை ஒருவர் தி.நகரின் மையப்பகுதியில் வசித்து வந்தார்.. சினிமாவில் அந்த நடிகைக்கு அன்று மிகப்பெரிய கிரேஸ் உண்டு.. அவரது வீட்டின் முன்னால் ஒரு நீச்சல் குளம் இருந்தது.. இரவு 8.30 மணிக்கு அந்த நடிகை நீச்சல் குளத்தில் குளிப்பாராம்..
இந்த விஷயம் அந்த பகுதி முழுவதும் பரவி, நடிகையை பார்க்க அவரது வீட்டு முன்பு திரண்டுவிடுவார்களாம்.. வீட்டை சுற்றியிருந்த மரங்களில் ஏறி நடிகையை பார்க்க ரசிகர்கள் முயன்றுள்ளனர்.. இதில் பல பேர் மரத்திலிருந்து கீழே விழுந்து, கை, கால்களை உடைத்து கொண்டிருக்கிறார்கள்.. பிறகு வெளியூர்களிலிருந்தெல்லாம் பஸ்ஸை பிடித்து வந்துவிடுவார்களாம்.. இதற்கு பிறகுதான், போலீசாரின் அறிவுரைப்படி நீச்சல் குளத்துக்கு காம்பவுண்ட் சுவர் மிக பெரிதாக எழுப்பப்பட்டதாம்.
அதேபோல 90களின் காலகட்டத்தில், நடிகைகளுக்கு ரத்தத்திலேயே ரசிகர்கள் கடிதம் எழுதுவார்கள்.. 108 முறை, 1008 முறை நடிகைகளின் பெயர்களை ஸ்லோகங்களாக கடிதத்தில் எழுதி அனுப்புவோரும் உண்டு.. இதற்கு பிறகுதான் நடிகைகளுக்கு கோயில் கட்டும் ரசிகர்கள் கிளம்பினார்கள்.. முதன்முதலில் குஷ்புவுக்கு கோயில் கட்டியதாக சொன்னார்கள். இதுவரை அந்த கோயிலை யாருமே கண்ணால் பார்த்ததில்லை.
நிதி அகர்வாலுக்கு கோயில்
அதேபோல, ஈஸ்வரன், பூமி படங்களில் நடித்த நிதி அகர்வால், ஒருமுறை செய்தியாளர்களை அழைத்து, சென்னை முகலிவாக்கம் அருகே, என்னுடைய ரசிகர்கள் சேர்ந்து கோயில் கட்டியிருப்பதாக கூறி, அந்த போட்டோவையும் காட்டினார்கள்..
அதில் நிதி அகர்வாலுக்கு மார்பளவு சிலை வைக்கப்பட்டு, பாலாபிஷேகமும் செய்யப்பட்டிருந்தது.. வெறும் 2 படத்தில் நடித்த நடிகைக்கு, சென்னையில் அதற்குள் கோயிலா? என்று பத்திரிகையாளர்கள் ஆச்சரியப்பட்டோம்.. ஆனால் அது பப்ளிசிட்டிக்காக சொல்லப்பட்டது என்று அப்போதே எங்களுக்கு தெரிந்துவிட்டது.
வேதனையான விஷயம்
இப்படியெல்லாம் கடந்து வந்த நிலையில், இன்று நிஜமாகவே, ஒருத்தர் சமந்தாவுக்கு கோவில் கட்டியிருக்கிறார். அதிலும் சாதாரண எளிய மனிதராக இருப்பவர் இப்படி கோயில் கட்டியிருக்கிறார்..
"தமிழ்நாடு, ஆந்திராவில்தான் நடிகர்களை முதல்வராக்குவீர்கள், எங்கள் ஊரில் அப்படியெல்லாம் செய்ய மாட்டோம்" என்று மம்முட்டி ஒருமுறை பகிரங்கமாகவே சொன்னார்.. ரசிகர்களுக்கு மத்தியில் கோயில் கட்டும் வெறிபிடித்த, மூடத்தனம் நிறைந்த ரசிகர்கள் இருப்பது வேதனையாக உள்ளது" என்று தெரிவித்துள்ளார்.
-
நகைக்கடன் வாங்கினீங்களா? ஏப்ரல் 1க்கு பின் தங்கம் வைத்து loan எடுக்க முடியாதா? புது ரூல்ஸ் அதிர்ச்சி -
திமுகவின் இளம் வேட்பாளர்.. அவினாசி தொகுதியில் 26 வயது மருத்துவருக்கு வாய்ப்பு கொடுத்த ஸ்டாலின்! -
காங்கிரஸில் இணைந்தார் ஜி.கே.எம். தமிழ்க்குமரன்! பென்னாகரம் தொகுதியை குறி வைக்கும் ஜி.கே.மணி மகன்! -
வைத்திலிங்கம் வயிற்றில் பாலை வார்த்த ஸ்டாலின்! திமுகவுக்கு ஜம்ப்பான 5 பேருக்கு சீட்! யார் அவர்கள்? -
பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் தொகுதி! திமுகவின் கோட்டை மதுரை மத்தியில் சுந்தர்.சி போட்டி! யார் இவர்? -
தமிழ் புத்தாண்டு பலன்: எச்சரிக்கையாக இருக்க வேண்டிய 3 ராசிகள்.. உங்க ராசி இருக்கா பாருங்க -
விஜய் வேட்பாளர்களை அறிமுகம் செய்யும் நேரம், திரிஷா வெளியிட்ட பதிவு.. இப்படி பண்றீங்களேம்மா? -
போடியில் ஓபிஎஸ்! ஆலங்குளத்தில் மனோஜ் பாண்டியன்! திமுக வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு -
164.. முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்.. திமுக பட்டியலில் கடைசி பெயராக வந்த முதல்வர் பெயர் -
சட்டமன்ற தேர்தலில் நடிகர் சுந்தர் சி போட்டி.. மதுரை மத்திய தொகுதியில் களம் இறங்குகிறார்.. ஏசி சண்முகம் அறிவிப்பு -
எழும்பூர் டூ பத்மநாபபுரம் வரை.. திமுகவில் சீட் மறுக்கப்பட்ட சிட்டிங் எம்எல்ஏக்கள்! முழு விவரம் -
அண்ணாமலையை தொட்ட விஜய்! கொங்குவில் ரகசிய வார் ரூம் டீல்? எடப்பாடி பழனிசாமிக்கு காத்திருக்கும் ஷாக்












Click it and Unblock the Notifications