அரை டவுசர் போட்டு கட்டிங், ஷேவிங்... சன்டிவியின் கிராமத்தில் ஒருநாள் கூத்து

Posted By:
Subscribe to Oneindia Tamil
  கிராமத்தில் ஒரு நாள் புத்தம் புதிய நிகழ்ச்சி-வீடியோ

  சென்னை: கிராமத்தில் ஒரு நாள் என்ற நிகழ்ச்சி ஞாயிறு இரவுகளில் சன்டிவியில் ஒளிபரப்பாகிறது. அரை டவுசர் பெண்களும், குட்டைப்பாவாடை அணிந்த தொகுப்பாளினிகளும் கிராமங்களில் வலம் வருகின்றனர்.

  ஞாயிறு இரவுகளில் திரைப்படங்கள் மக்களை ரசிக்க வைத்தன. இப்போது ரியாலிட்டி நிகழ்ச்சிகள் ஆக்கிரமித்துக்கொண்டுள்ளன.

  ஆடல் பாடல் ஒரு பக்கம் களைகட்ட, சிரிப்பு நிகழ்ச்சிகள் கிச்சு கிச்சு மூட்ட யோசித்து பார்த்த சன்டிவி அழகான நிகழ்ச்சி தொகுப்பாளினிகளுக்கு அரை டவுசர் போட்டு கிராமத்தில் வலம் வர வைத்து விட்டது.

  கிராம வலம்

  கிராம வலம்

  வாரம் ஒரு கிராமத்தில் நவ நாகரீக தொகுப்பாளினிகள், சீரியல் நடிகைகள் குட்டைப்பாவடை, அரை டவுசர் அணிந்து கவர்ச்சி கன்னிகளாக கிராமங்களை வலம் வருகின்றனர். இதுநாள் வரை தொலைக்காட்சிகளில் பார்த்தவர்களை நேரடியாக பார்ப்பது சந்தோசமான சங்கடமாகவே உள்ளது கிராமத்து தாத்தாக்களுக்கு.

  மாடு கழுவணும்

  மாடு கழுவணும்

  சில வாரங்களுக்கு முன்பு மாட்டு தொழுவத்தை அலங்கரிக்க வைத்தனர். அழகான பெண்கள், மாட்டு சாணத்தை அள்ளி, மாடுகளுக்கு குளிப்பாட்டி விட்ட அழகு இருக்கே அட அட அட. நாங்க எல்லாம் பாவம்ஸ் என்றனர் தொகுப்பாளினிகள்.

  நல்லா ஷேவ் பண்ணி விடுறேன்

  இரு வாரங்களுக்கு முன்பு கையில் சவரக்கத்தியுடன் அரைகுறை ஆடையுடன் கிராமங்களை வலம் வந்த பெண்கள், மரத்தடியில் இளசுகள், தாத்தாக்களின் முகத்தை பதம் பார்த்தனர். அதற்கு கூலியும் பெற்றனர். ஒரு பாட்டி தனது கணவர் அழகான பெண்ணிடம் ஷேவ் செய்வதைப் பார்த்து கோவித்துக்கொண்டது கூடுதல் சுவாரஸ்யம்.

  என்ன ஒரு வில்லத்தனம்

  ஒருவர் வயிற்றில் கயிற்றை கட்டி இன்னொருவர் இழுப்பது போட்டி, யார் இழுக்கிறார்களோ அவர்கள் மேஜையில் உள்ள உணவை சாப்பிட வேண்டும். இதில் அடிபட்டால் அதற்கு கம்பெனி பொறுப்பேற்காது.

  கிராமத்தில் திகு திகு

  கிராமத்தில் திகு திகு

  ரியாலிட்டி ஷோ என்றாலும் அதற்காக இப்படி அரைகுறையாக உலா வரலாமா என்று கேட்கின்றனர் ரசிகர்கள். கிராமத்தில் ஒருநாள் நிகழ்ச்சி ஞாயிறு இரவுகளில் குளு குளுதான் என்றாலும் கிராம இளசுகள், தாத்தாக்களுக்கு திகு திகுதான். பாட்டிகளின் அர்ச்சனைகளை வாங்கிக்கொள்கின்றனர் சில தொகுப்பாளினிகள்.

  திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

  English summary
  SunTV telecast gramathil orunaal program on Sunday night.

  நாள் முழுவதும் oneindia
  செய்திகளை உடனுக்குடன் பெற