முத்துராமனின் சொத்துக்கள்.. நடிகர் கார்த்திக் தடுமாறிய இடம் இதுதான்.. விருதுநகரில் அசத்தல்: பிரபலம்
சென்னை: எம்ஜிஆரால் பாராட்டு பெற்றவர் நடிகர் கார்த்திக்.. 4 பிலிம்பேர் விருது, 4 மாநில விருது பெற்றவர்.. திரைப்பட துறையில் சரியான வழிகாட்டுதல் மட்டும் அவருக்கு இருந்திருந்தால், கார்த்திக்கும் ஒரு சூப்பர் ஸ்டார்தான்" என்று பாராட்டியிருக்கிறார் மூத்த பத்திரிகையாளர் தமிழா தமிழா பாண்டியன். அத்துடன், நடிகர் கார்த்திக்கின் அரசியல் பிரவேசம் பற்றியும் பேட்டி ஒன்றில் விரிவாக பேசியிருக்கிறார்.
Behind cinema என்ற யூடியூப் சேனலுக்கு சமீபத்தில் பேட்டி தந்திருந்த மூத்த பத்திரிகையாளர் தமிழா தமிழா பாண்டியன், " கார்த்திக்கிற்கு 2006-ல் அரசியல் ஆசை வந்தது.. அதற்கு பிறகுதான் அகில இந்திய பார்வர்டு பிளாக்கில் இணைந்தார்.. தென் மாநிலங்களில் ஆதரவை திரட்டினார்..

ஆனால், அரசியல் நிகழ்வுகளுக்காக மதுரை சென்றால், ஓட்டல் அறையை விட்டு வெளியே வருவதில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்தது. சாப்பிடவும் மாட்டார்.. ரூமிலேயே தூங்கி கொண்டேயிருப்பார். கதவை தட்டினாலும், கோபப்படுவார்.. 24 மணி நேரமும் பூட்டியே கிடப்பதால், இவருக்கு யாரும் மதுரையில் ஓட்டல்களில் ரூம் தருவதில்லையாம்.
அகில இந்திய அகில இந்திய நாடாளும் மக்கள் கட்சி
பிறகு, அகில இந்திய நாடாளும் மக்கள் கட்சி என்ற கட்சியை சொந்தமாக ஆரம்பித்தார்.. பிறகு பாஜகவில் இணைந்தார்.. பிறகு, விருதுநகர் வேட்பாளராக நின்றார்.. கிட்டத்தட்ட 15 ஆயிரம் வாக்குகளை வாங்கியிருந்தார். இது கார்த்திக்கின் அரசியல் வாழ்வில் மிகப்பெரிய டர்னிங் பாயிண்ட்.
2011-ல் ஜெயலலிதாவுடன் கூட்டணி வைக்க கார்த்திக்கை அழைத்து சென்றார்கள். 5 சீட் வேண்டும் என்று கார்த்திக் கேட்டார்.. அதற்கு ஜெயலலிதா, "அந்த அளவுக்கு மக்களிடம் உங்கள் கட்சியின் செல்வாக்கு இல்லையே?" என்று கூறி 1 சீட் மட்டுமே வழங்குவதாக சொன்னார். இறுதியில், கூட்டணி வைக்காமலேயே, அதிமுகவுடன் கூட்டணி முறிந்ததாக கார்த்திக் அறிவித்துவிட்டார்.
முக்குலத்தோர் வாக்குகள்
பிறகு 2016-ல் திமுகவுக்கு ஆதரவு தருவதாக அறிவித்தார்.. திமுகவும், ஒரு தொகை தந்து, தேர்தல் சமயத்தில் கார்த்திக்கை பயன்படுத்தி கொண்டது.. பிறகு "மனித உரிமை காக்கும் கட்சி" என்று இன்னொரு கட்சியை துவங்கினார்.. 2021-ல் அதிமுகவுடன் கூட்டணி வைத்தார்.. ஆனால் சீட் தர முடியாது என்று கூறி பிரச்சாரத்துக்கு மட்டும் பயன்படுத்திக் கொண்டது.
முக்குலத்தோர் வாக்குகள் கார்த்திக்கிற்கு கிடைக்கும் என்று திமுக, அதிமுக தேர்தல் நேரத்தில் நம்புகின்றன. ஆனாலும், கார்த்திக்கிற்கு தோல் அலர்ஜி பிரச்சனை உள்ளதால், 10 நிமிடம் தொடர்ந்து நின்று பிரச்சாரம் செய்ய முடியாது. எனினும், கார்த்திக் பிரச்சாரத்துக்கு வருகிறார் என்றாலே, தமிழகத்தின் தென்பகுதியில் கூட்டம் கூட்டமாக திரண்டு வருவார்கள்.
முத்துராமன் சொத்துக்கள்
கார்த்திக்கிற்கும், கவுதம் கார்த்திக்கிற்கும் இடையே சரியான உறவு இல்லை.. கார்த்திக்கின் உடன்பிறந்தவர்கள், முத்துராமனின் சொத்துக்களை எல்லாம் எடுத்துக் கொண்டார்கள். முத்துராமனின் சொத்துக்கள் பேரனுக்கு அதாவது கவுதமுக்கு இன்றுவரை வந்து சேரவில்லை. அந்த சொத்தை, இவர்களும் கேட்கவில்லை, அவர்களும் முன்வந்து கவுதமுக்கு தரவில்லை.
எம்ஜிஆரிடம் பாராட்டு
நடிகர் கார்த்திக் ஒரு காதல் மன்னன்.. அழகானவர்.. அந்த காலத்தில் இவருக்கென ஆண்கள், பெண்கள் என ரசிகர் கூட்டங்கள் இருந்தன.. கார்த்திக்கிற்கென ஒரு மாஸ் இருந்தது.. ஆனால், சினிமாவில் நேரம் காலம் என்பது மிகவும் முக்கியம். 6 மணிக்கு ஷூட்டிங் என்றால், 5.55-க்கே சிவாஜி, எம்ஜிஆர் ஸ்பாட்டில் இருப்பார்கள். காரணம், இருவருமே சினிமாவை நேசித்தவர்கள்.
இந்த நேரம்தான் கார்த்திக்கிற்கு கைகூடி வரவில்லை.. ஆனால், நல்ல கலைஞர்.. கார்த்திக்கின் அப்பா முத்துராமனை எம்ஜிஆருக்கு மிகவும் பிடிக்கும்.. எம்ஜிஆர் விரும்பி பழகும் நடிகர் முத்துராமன்.. என் நண்பனின் மகன் தன்னுடைய முதல் படத்திலேயே வெற்றி பெற்றுவிட்டார் என்று எம்ஜிஆரே கார்த்திக்கை அன்று புகழ்ந்திருந்தார்.
அந்தவகையில், எம்ஜிஆரால் பாராட்டு பெற்றவர் நடிகர் கார்த்திக்.. 4 பிலிம்பேர் விருது, 4 மாநில விருது பெற்றவர்.. திரைப்பட துறையில் சரியான வழிகாட்டுதல் மட்டும் அவருக்கு இருந்திருந்தால், கார்த்திக்கும் ஒரு சூப்பர் ஸ்டார்தான்" என்று பாராட்டியிருக்கிறார்.
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம்












Click it and Unblock the Notifications