இப்போ இப்படி பேசும் ஜிவி பிரகாஷ், அப்போ விஜய்க்காக தனுஷிடமே சண்டை போட்டாரு! புது குண்டை போட்ட அந்தணன்
சென்னை: தமிழ் திரையுலகில் நடிகர் தனுஷும், இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷும் நெருங்கிய நண்பர்கள் என்பது அனைவருக்கும் தெரியும். இவர்களது கூட்டணியில் உருவாகும் பாடல்கள் அனைத்தும் ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்பை பெறும். ஆரம்பத்தில் இசையமைப்பாளர் அனிருத்துடன் பணியாற்றி வந்த தனுஷ், பின்னர் இருவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் காரணமாக ஜி.வி. பிரகாஷ் பக்கம் திரும்பினார். ஆடுகளம், மயக்கம் என்ன, பொல்லாதவன் என இவர்கள் கூட்டணியில் உருவான பல திரைப்படங்கள் மெகா ஹிட் அடித்தன.

ஜி.வி. பிரகாஷின் உருக்கமான பேச்சு
சமீபத்தில், தனுஷ் இயக்கி, நடித்துள்ள இட்லி கடை திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் பிரமாண்டமாக நடைபெற்றது. இந்த விழாவில் பேசிய ஜி.வி. பிரகாஷ், "தனுஷின் ராயன் படத்தில், அவரின் தம்பிகளில் ஒருவராக என்னை நடிக்கக் கேட்டார். அது அவருக்குத் துரோகம் செய்யும் கதாபாத்திரம். கதையில் கூட நான் தனுஷுக்குத் துரோகம் செய்ய மாட்டேன். அவரது முதுகில் குத்தும் நாலு பேரில் ஒருவனாக நான் இருக்க மாட்டேன்" என்று மிகவும் உணர்வுபூர்வமாகப் பேசினார்.
இந்த விழாவில், தனுஷின் மேனேஜர் ஸ்ரேயாஸ் பேசுகையில், தனுஷால் வாழ்க்கையில் முன்னேறிய சிலரே அவருக்கு எதிராகச் செயல்படுவதாகப் பகிரங்கமாகக் குற்றம் சாட்டினார். ஜி.வி. பிரகாஷின் பேச்சு, ஸ்ரேயாஸின் குற்றச்சாட்டுகளுக்கு ஒரு பதிலடியாக அமைந்ததாகக் கருதப்பட்டது.
திரைமறைவில் நடந்த துரோகம்
இந்நிலையில், இந்த உணர்ச்சிகரமான பேச்சுக்கு முற்றிலும் முரண்பட்ட ஒரு தகவல் வெளியாகி, திரையுலகில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. பிரபல சினிமா செய்தியாளர் வலைப்பேச்சு அந்தணன், ஒரு பேட்டியில், தனுஷ் மற்றும் ஜி.வி. பிரகாஷ் இடையே நடந்த ஒரு சம்பவம் குறித்துப் போட்டு உடைத்தார்.
பல வருடங்களுக்கு முன்பு, டைம்ஸ் ஆஃப் இந்தியா நாளிதழ் சார்பாக விருது வழங்கும் விழா ஒன்று நடந்தது. அதில், அந்த வருடத்திற்கான சிறந்த நடிகராக நடிகர் விஜய்யை அவர்கள் தேர்ந்தெடுத்தனர். ஆனால், அந்த விழாவில் கலந்து கொள்ள விஜய் வர முடியாது என மறுத்துவிட்டார். எனவே, விழாக் குழுவினர் தனுஷை அணுகி, "சிறந்த நடிகர் விருதை உங்களுக்குக் கொடுக்கிறோம்; நீங்கள் விழாவில் கலந்து கொள்ள முடியுமா?" எனக் கேட்டனர். தனுஷும் சம்மதித்தார்.
இந்தத் தகவல் ஜி.வி. பிரகாஷுக்குத் தெரிந்ததும், அவர் விழாக் குழுவினரைத் தொடர்பு கொண்டு, "விஜய்க்கு கொடுக்க வேண்டிய விருதை நீங்கள் எப்படி தனுஷுக்கு கொடுக்கலாம்? விஜய்யும் தனுஷும் ஒண்ணா?" எனச் சண்டை போட்டிருக்கிறார். இந்தச் சம்பவம் திரைமறைவில் நடந்தாலும், பின்னர் இதை அவர் பொதுவெளியிலும் பேசி, தனுஷையும் அசிங்கப்படுத்தினார் ஆனால் இப்போ அவருடன் நெருக்கமாகி அவருடைய மனதை தொடும் வகையில் பேசி வருகிறார் என்று அந்தணன் அந்த பேட்டியில் பேசியிருந்தார்.
அதுமட்டுமல்லாமல் ஜிவி பிரகாஷ் நான்கு பேர் என்று சொன்னது விக்னேஷ் சிவன், நயன்தாரா, சிம்பு, சிவகார்த்திகேயன் என நான்கு பேராக கூட இருக்கலாம். ஆனால் அவர் யாரை குறிப்பிட்டார் என்று உறுதியாக சொல்ல முடியாது. இவர்களை ஆகத்தான் இருக்கும் என்று நான் நினைக்கிறேன் என்று அந்தணன் தனது கருத்தையும் கூறியிருக்கிறார்.
ஜி.வி. பிரகாஷின் சாதனை
இந்தச் சர்ச்சைகள் ஒருபுறம் இருந்தாலும், இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ், தனது திறமையால் பல விருதுகளையும், வெற்றிகளையும் பெற்றுள்ளார். ஆடுகளம் திரைப்படத்திற்காகச் சிறந்த இசையமைப்பாளருக்கான தேசிய விருதை வென்றார். மயக்கம் என்ன படத்திற்காக சிறந்த இசைக்கான விருதையும் வென்றார். அதுபோல சில படங்களில் நடிகராகவும் நடித்து, தனது பன்முகத் திறமையை நிரூபித்துள்ளார்.
இட்லி கடை விழா, வெளிப்படையான நட்பையும், மறைமுகமான துரோகங்களையும் ஒருசேர வெளிப்படுத்தியது. ஜி.வி. பிரகாஷின் உருக்கமான பேச்சு, கடந்த கால நிகழ்வுகளின் பின்னணியில், வேறு ஒரு கோணத்தில் பார்க்க வைக்கிறது. திரையுலகில் நட்பும், போட்டியும் இரண்டறக் கலந்திருக்கும் என்பதை இது மீண்டும் ஒருமுறை உணர்த்துகிறது.
-
ரூ.2500 உரிமைத்தொகை எப்போது கிடைக்கும்? நிதியமைச்சர் மரியவில்சன் கொடுத்த அப்டேட்! -
4 குற்ற சம்பவங்களிலும் ஈடுபட்டவர்கள் தவெக நிர்வாகிகள்.. விஜய்யிடம் விளக்கம் கேட்கும் டிடிவி தினகரன் -
பரந்தூர்-க்கு சொன்ன நோ.. சென்னை மக்களுக்கு அடுத்த அதிர்ச்சி! சீட்டுக்கட்டுப்போல் சரியும் மெகா திட்டங்கள்! -
கோட் சூட்டிற்கு பதிலாக பட்டு வேஷ்டி சட்டை.. திடீரென டிரஸ் கோடு மாற்றிய முதல்வர் விஜய்! ஏன் தெரியுமா? -
விஜய்யை வளைக்கிறதா தாமரை? காங்கிரஸை ஓரங்கட்ட தவெக மெகா பிளான்! அம்பலப்படுத்திய பாஜக -
குழந்தைகளை பயன்படுத்தி வாக்கு கேட்டதாக வழக்கு.. விஜய்யின் தவெகவுக்கு ஐகோர்ட் அதிரடி உத்தரவு -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி -
பரிசு வேண்டாம்.. நோட்டு கொடுங்க.. அரசுப் பள்ளி மாணவர்களுக்காக இறங்கிய தவெக அமைச்சர் -
சிங்கப்பெண் நிகழ்ச்சியும் தள்ளி வச்சுட்டீங்க.. சட்டம் ஒழுங்குக்கும் அவகாசம் வேணுமா? விஜய்யை விமர்சித்த உதயநிதி -
விஜய் டெல்லி பயணம் 2.0.. அமித் ஷாவை எப்படியாவது சந்திக்க காய் நகர்த்தும் முதல்வர்.. மீண்டும் ட்ரிப்? -
தொங்கலில் விடப்பட்ட சிங்கப்பெண் அதிரடிப்படை! தவெக அரசு தீவிரத்தை உணரவில்லை என கனிமொழி சாடல் -
விஜய்-க்கு புது சவால்.. 13 மாசமாச்சு.. சென்னை ஏர்போர்ட் - கிளாம்பாக்கம் மெட்ரோ திட்டத்தை மறந்த மத்திய அரசு!












Click it and Unblock the Notifications