சைந்தவியை பிரிவதற்கு என் மகன் சொன்ன காரணம்.. நடந்தது இதுதான்! ஜி.வி பிரகாஷ் அம்மா பேட்டி
சென்னை: சைந்தவியும் அவருடைய கணவர் ஜிவி பிரகாஷ் இருவரும் விவாகரத்து செய்ய போவதாக அறிவித்திருந்தனர். இந்த நிலையில் சில மாதங்கள் கழித்து இது குறித்து ஜீவி பிரகாஷின் அம்மாவும், ஏ ஆர் ரகுமானின் சகோதரியும் ஆன ஏ ஆர் ரைஹானா சமீபத்தில் youtube சேனலுக்கு பேட்டி அளிக்கையில் தன்னுடைய மகன் சைந்தவியை பிரிவதற்கு சொன்ன காரணம் எனக்கு ஏற்புடையதாக இல்லை ஆனால் வேறு வழி இல்லை என்றும் அந்த பேட்டியில் பேசியிருக்கிறார்.
சில மாதங்களாகவே மக்கள் பார்த்து ரசித்த பல பிரபலங்கள் அடுத்தடுத்து திருமண விவாகரத்து அறிவித்து வருகிறார்கள். இது ரசிகர்களை பெரிய அளவில் அதிர்ச்சியில் ஆழ்த்தி இருக்கிறது. அதிலும் பாடகி சைந்தவி மற்றும் அவருடைய கணவர் இசையமைப்பாளர் ஜி.வி பிரகாஷ் இருவரும் தாங்கள் கலந்து ஆலோசித்து திருமண வாழ்க்கையில் இருந்து பிரிவதாக அறிவித்தது பெரிய அளவில் பேசப்பட்டது.

இந்த நிலையில் சில மாதங்கள் கழித்து ஜிவி பிரகாஷின் அம்மா பேட்டி ஒன்றில் கலந்து கொண்ட போது அவரிடம் சைந்தவி மற்றும் ஜிவி பிரகாஷ் விவாகரத்து குறித்து கேட்கப்பட்டிருக்கிறது. அப்போது அதில் அவர் பேசுகையில் என்னுடைய மகன் ஜிவி பிரகாசும், சைந்தவியும் இருவரும் வாழ்க்கையில் இணைய வேண்டும் என்பது அவர்கள் தான் முடிவு செய்தனர். இப்போது அவர்கள் தான் பிரிய வேண்டும் என்றும் முடிவு எடுத்திருக்கிறார்கள்.
அவர்கள் சேர்ந்திருக்கும் போது என்னால் பிரிக்க முடியுமா? அதுபோல இப்போது அவர்கள் பிரிந்திருக்கும் போதும் என்னால் எதுவும் செய்ய முடியாது. விதி என்று ஒன்று இருக்கிறது. சைந்தவி ஒரு அற்புதமான பெண் என் மகனும் நிறைய விஷயங்களில் அட்ஜஸ்ட் செய்தார். ஆனால் இந்த விஷயங்கள் எல்லாம் ஏன் நடந்தது என்று எனக்கு தெரியவில்லை. என்னுடைய மகன் சைந்தவியை பிரிவதற்கு என்னிடம் சொன்ன காரணம் என்னால் ஏற்றுக் கொள்ளும் வகையில் இல்லை ஆனால் அதை தவிர்க்கவும் முடியவில்லை.

உண்மையை சொல்ல வேண்டும் என்றால் சைந்தவி வீட்டிற்கு திரும்பி வர வண்டும் என்று நான் விரும்புகிறேன். என்னுடைய மகளை விட சைந்தவியிடம் தான் எனக்கு வசதியாக இருந்தது. அவரிடம் தான் நான் அதிகமாக பேசுவேன். என்னுடைய மகனோ அல்லது சைந்தவியோ அவர்களுடைய வாழ்க்கையை என்னால் வாழ முடியாது. என்ன செய்வதென்று தெரியவில்லை கடவுளிடம் விட்டுவிடுகிறேன். அவர்கள் மீண்டும் ஒன்று சேர வேண்டும் என்று பிராத்திக்கிறேன்.

அவர்கள் ஒன்றாக இருப்பார்கள் என்பதே என்னுடைய நம்பிக்கை. அவர்கள் இருவரும் விவாகரத்து அறிவித்து இருந்தாலும் இப்போதும் நன்றாகத் தான் பேசிக் கொண்டு இருக்கிறார்கள். சைந்தவியும் ஜிவி பிரகாஷும் விவாகரத்தை அறிவித்ததும் அதற்கு காரணம் நான் என்கிற மாதிரி ஒரு செய்தி பரவியது. அதற்கு நான் விளக்கம் கொடுக்க வேண்டும் என்று நினைக்கிறேன். அதாவது ஒரு முறை ஒரு யூடியூபர் எங்கள் வீட்டிற்கு அன்னையர் தினத்திற்கு வந்திருந்தார்.
அப்போது எங்கள் வீட்டில் எல்லோரிடமும் பேட்டி எடுத்தார். அப்போது சைந்தவி பற்றி துருவி துருவி கேட்டுக் கொண்டிருந்தார். அவருடைய விவாகரத்து செய்தி பற்றியும் கேட்டுக் கொண்டிருந்தார். அந்த நேரத்தில் எனக்கு டென்ஷன் ஆகிவிட்டது. அதனால் தான் கத்தி விட்டேன். அந்த வீடியோக்கள் இணையத்தில் பெரிய அளவில் வைரல் ஆனது. ஆனால் நான் சைந்தவியிடம் அப்படி நடந்து கொண்டதும் கிடையாது என்று அந்த பேட்டியில் ஜிவி பிரகாஷின் அம்மா ஏ.ஆர் ரைஹானா பேசியிருக்கிறார்.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications