ஜிவி பிரகாஷூடன் ஒரே காரில் சைந்தவி கிளம்பிட்டாங்க.. இப்போ திவ்யா பாரதி ஏன் இதை கிண்டறாங்க?: பிரபலம்
சென்னை: சமீபத்தில் ஜி.வி. பிரகாஷ் மற்றும் திவ்யா பாரதி இடையே காதல் இருப்பதாக வதந்தி பரவி வந்த நிலையில், ஜி.வி. பிரகாஷ் அதற்கு உடனே மறுப்பு தெரிவித்திருந்தார். இந்நிலையில், எனக்கு எந்தத் தொடர்பும் இல்லாத தனிப்பட்ட குடும்ப விவகாரத்தில் என் பெயர் இழுக்கப்பட்டுள்ளது, ஜி.வி.யின் குடும்பப் பிரச்சினைகளுக்கும் எனக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்று நடிகை திவ்யா பாரதி திடீரென விளக்கம் தந்துள்ளது பரபரப்பை தந்து வருகிறது. இதுகுறித்து மூத்த பத்திரிகையாளர் செய்யாறு பாலு தன்னுடைய கருத்தை கூறியிருக்கிறார.
Cheyyaru Balu என்ற யூடியூப் சேனலில் பேசியிருக்கும் செய்யாறு பாலு, "ஜிவி பிரகாஷ் - சைந்தவி குறித்து திவ்ய பாரதி இன்ஸ்டாவில் பதிவிட்ட பதிவு, மிகுந்த அதிர்ச்சியை தந்துவிட்டது. இந்த நேரத்தில், இப்படியொரு பதிவு போட வேண்டிய அவசியம் என்ன? என்று தெரியவில்லை.

நடிகை திவ்ய பாரதி தந்த அதிர்ச்சி
நடிகை திவ்ய பாரதியின் இன்ஸ்டா பதிவின் சாராம்சம், "இனியும் என்னால் பொறுத்துக் கொள்ள முடியாது, ஒரு நடிகரோடு என்னை தொடர்புபடுத்தி பேசி கொண்டேயிருக்கிறார்கள். நானும் எத்தனை நாளைக்குதான் பொறுத்து பொறுத்து போவது? இது நல்லதுக்கில்லை. பேச்சிலர் படத்திலிருந்து இப்படித்தான் நிலைமை நீடிக்கிறது.
சோஷியல் மீடியாவை திறந்தாலே, இதுபற்றியே என்னிடம் கேட்கிறார்கள். ஜிவி பிரகாஷ், சைந்தவி பிரிவுக்கு நான்தான் காரணம் என்பது போலவே பேசிட்டு இருக்காங்க.. இது எந்தவிதத்தில் நியாயம்? இதை இனியும் நான் விட மாட்டேன்?" என்று கொந்தளித்து இன்ஸ்டாவில் பதிவு போட்டுள்ளார்.
திடுதிப்பென போஸ்ட் போட்ட நடிகை
யாருமே இதை பற்றி பேசாதபோது, எதற்காக இந்த பதிவை திவ்ய பாரதி பதிவிட்டார்? என்று தெரியவில்லை.. கடந்த சில நாட்களுககு முன்பு, ஜிவி பிரகாஷ் தம்பதியினர், குடும்ப நல நீதிமன்றத்துக்கு ஒன்றாக வந்தார்கள், பரஸ்பரம் பிரிவதாக கூறினார்கள்.. வழக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது. பிறகு ஒரே காரில் இருவரும் ஏறி சென்றுவிட்டார்கள்.
12 வருடம் காதலித்து திருமணம் செய்தவர்கள், இவர்களுக்கு ஒரு குழந்தையும் உள்ளது.. அப்படியிருக்கும்போது, அவர்களுக்குள் என்ன பிரச்சனை என்று நாம் யாருமே உள்ளே நுழைந்து ஆராய முடியாது. அது அவர்களின் குடும்ப பிரச்சனை.. மலேசியாவில் நடந்த கச்சேரியைகூட, இருவருமே சேர்ந்து நடத்திவிட்டு வந்தார்கள்.. ஜிவி பிரகாஷ் படத்தில் சைந்தவி பாடி விட்டு செல்கிறார்..
பரவிய கிசுகிசுக்கள்
பொதுவாக, நடிகைகள் மீது கிசுகிசுக்கள் வரத்தான் செய்யும்.. அப்படித்தான் திவ்ய பாரதி மீதும் கிங்ஸ்டன் படத்தின்போது கிசுகிசு வந்தது.. திவ்ய பாரதி கன்ட்ரோலில்தான் ஜிவி உள்ளதாகவும், திவ்யபாரதிதான், இவர்களின் பிரிவுக்கு காரணம் என்று சொல்லப்பட்டன.. ஆனால், அந்த கிசுகிசுவை சைந்தவி, ஜிவி பிரகாஷ் இருவருமே கண்டுகொள்ளவில்லை. அதற்கு எந்த பதிலும் சொல்லவும் இல்லை.
ஒருமுறை விவாகரத்து சம்பந்தமாக ஜிவியிடம் கேட்டதற்கு, "அதை நாங்களே பார்த்து கொள்கிறோம். எங்களுடைய விவாகரத்துக்கு யாருமே காரணம் இல்லை" என்று செய்தியாளர்களிடமே ஜிவி தெளிவுபடுத்தியிருந்தார்.
பப்ளிசிட்டி காரணமா
அப்படியிருக்கும்போது, திடீர்னு திவ்ய பாரதி, "நான் எந்த நடிகர்களுடனும் டேட்டிங் செய்ததில்லை, திருமணமானவர்களுடன் டேட்டிங் செய்ததே இல்லை என்றெல்லாம் பதிவிட்டுள்ளார். இதற்கு காரணம் என்ன? கிங்ஸ்டன் படம் ஓடும் என்று மிகவும் நம்பியிருந்தார் திவ்ய பாரதி.. ஆனால் அந்த படம் ஓடாத வெறுப்பில் இப்படி பதிவு போட்டுள்ளாரா? அல்லது இப்படியெல்லாம் பேசி தன்பக்கம் அனைவரின் கவனத்தை இழுக்க வேண்டும் என்று நினைக்ககிறாரா? அல்லது ராசியில்லாத நடிகை என்ற முத்திரை தன்மீது குத்திவிடுவார்களோ? என்ற கலக்கத்தில் பப்ளிசிட்டிக்காக இப்படி பேசுகிறாரா தெரியவில்லை.
குட் பேட் அக்லி
அதேபோல, குட் பேட் அக்லி படத்துக்கு இசையமைக்கும் வாய்ப்பு ஜிவிக்கு கிடைத்ததிலிருந்தே இப்படியான விமர்சனங்கள் ஜிவி பிரகாஷ் மீது வீசப்பட்டு வருகின்றன.. ஒருவேளை ரஜினி, கமல் படத்துக்கும் இசையமைத்துவிடுவாரோ? என்ற பொறாமையால், ஜிவிக்கு எதிரான சதி வேலை நடக்கிறதா? என்றும் நினைக்கத் தோன்றுகிறது.
எது எப்படியோ.. எத்தனை திவ்ய பாரதிக்கள் வந்தாலும்சரி, விமர்சனங்கள் பல வந்தாலும் சரி, அவைகளை ஜிவி பிரகாஷ், சைந்தவி இருவருமே அமைதியாக கடந்து செல்வார்கள். அவர்களின் அந்த மன உறுதிக்கு தனி துணிச்சல் வேண்டும்" என்று தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications