ஹையா...நம்மவர் ஷூட்டிங் வந்துட்டார்...!
சென்னை: விஜய் டிவியின் பிக்பாஸ் சீசன் 3 க்கான ப்ரோமோ ஷூட் துவங்கி இருக்கு. இதுல நம்மவர் ரொம்ப மாதங்களுக்கு பின் ஸ்டார்ட்.. கேமிரா.. ஆக்ஷன் மோடில் இருக்கார்.
விஜய் டிவியில் பிக்பாஸ் சீசன்களை நடிகர் கமல்ஹாசன் மட்டுமே ஹோர்ஸ் செய்து வர்றார்.வேறு யாரை அணுகினாலும் இந்த நிகழ்ச்சிக்கு சரி வராது என்பதால் மீண்டும் கமலே ஹோர்ஸ் செய்ய உள்ளாராம்.

அப்படி இப்படி கணக்கு போட்டு கமலின் சம்பளம் ஒரு கோடி ரூபாய்னு சொல்றாங்க. நிகழ்ச்சிக்கான ப்ரோமோ மட்டும் கோகுலம் கார்டனில் நடக்குதாம். பிக்பாஸுக்கான செட் சூட் எல்லாம் ஈவிபி கார்ட்டனில்தான் நடக்குமாம்.
கோகுலம் கார்டன் உரிமையாளர் கமலின் நண்பர், தூங்காவனம் படத்தின் தயாரிப்பாளர் ஸோ, ப்ரோமோ மட்டும் சூட் செய்து வர்றாங்களாம்.
கன்டெஸ்டென்ட் தேர்வு...நடந்துகிட்டு இருப்பதாகவும் சொல்லறாங்க. பிக்பாஸ் நிகழ்ச்சி நடத்தினால் கமல்ஹாசனுக்கு ஒற்றை கல்லில் ரெட்டை மாங்காய்.. அதாவது மக்களை நடு ஹாலில் சந்தித்து தன் கருத்துக்களை முன் வைக்க இதைவிட ஒரு களம் இல்லை என்பதால் உடனே ஓகே சொல்லிடறாராம் நம்மவர்.
அதே சமயத்தில் சம்பள பணமும் கேட்டது கிடைக்குது.. கமல் சொல்லும் எல்லா கண்டிஷன்களுக்கும் பிக்பாஸ் ஓகே சொல்லிடறதும் இதுக்கு காரணம்...
எப்படியோ கமல் ரசிகர்களுக்கு வரும் 3 மாதம் நல்ல விருந்துதான்..












Click it and Unblock the Notifications