சுப்ரீம் பவர்.. ரம்யா பாண்டியன் திருவண்ணாமலை கோயில் கிரிவலத்தில் கால் வைத்ததுமே.. ஆச்சரியம் பாருங்க
சென்னை: நடிகை ரம்யா பாண்டியன், பஞ்சாப்பை சேர்ந்த தன்னுடைய காதலனையே திருமணம் செய்துள்ளார்.. இந்நிலையில், திருவண்ணாமலைக்கு சென்ற ரம்யா பாண்டியனுக்கு சிலிர்ப்பூட்டும் சம்பவம் ஒன்று நடந்துள்ளதாம்.. அதுமட்டுமல்ல, ரம்யா பாண்டியன் திருமணம் குறித்து ஆச்சரிய தகவல் ஒன்று வெளியாகி இணையத்தில் வைரலாகி கொண்டிருக்கிறது.
ஜோக்கர் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் காலடி எடுத்து வைத்தவர் ரம்யா பாண்டியன்... இவர் பிரபல நடிகரும், தயாரிப்பாளரும், அரசியல் பிரமுகருமான அருண் பாண்டியனின் அண்ணன் மகள் ஆவார்.
ரம்யா பாண்டியனின் சொந்த ஊர் திருநெல்வேலி.. அப்பா துரை பாண்டியன் இயக்குனர் ஆவார்.. ஊழியன், மாஸ்டர் பிளான் போன்ற படங்களை எடுத்து, அவை வெற்றி பெறவில்லை.. எனவே, சினிமாவை கைவிட்டு, மறுபடியும் நெல்லைக்கே சென்று ஓட்டல் பிசினஸ் செய்துள்ளார்.

வாய்ப்புகள் வரவில்லை
பலமான பின்னணியிலிருந்து வந்தாலும், பெரிதாக சொல்லிக் கொள்ளும்படியான வாய்ப்புகள் எதுவும் ரம்யா பாண்டியனுக்கு வரவில்லை. இதனால் விதவிதமான போட்டோ ஷூட்களை செய்தாலாவது, வாய்ப்புகள் வரும் என்று எதிர்பார்த்தார்.. அப்போதும் பெரிதாக வரவில்லை. ஆனால், ரம்யா பாண்டியனின் கவர்ச்சி போட்டோ ஷூட்கள் ரசிகர்களிடம் பிரபலமாக தொடங்கியது.
இந்த ரசிகர்களை நம்பியே பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் பங்கேற்றார்.. சில சர்ச்சை கருத்துக்களை பேசினாலும், அதுவும் இணையத்தில் வைரலானது.. நெகட்டிவ் கமெண்ட்களை பெற்றாலும், தொடர்ந்து தன்னை லைம்லைட்டிலேயே வைத்து கொண்டார் ரம்யா பாண்டியன். பிறகு, குக் வித் கோமாளி, கலக்கப்போவது யாரு என அடுத்தடுத்த நிகழ்ச்சிகளிலும் பங்கேற்றார். இதன்மூலம் இன்ஸ்டாகிராமில் 2.7 மில்லியன் பாலோவர்ஸ்களையும் தக்க வைத்துள்ளார் ரம்யா பாண்டியன்.
டிவி சான்ஸ்கள்
ஒருகட்டத்தில், டிவி வாய்ய்பும் இழந்த நிலையில், லவ்வெல் தவான் என்பவரை திருமணம் செய்துகொண்டார். இவர் பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த யோகா மாஸ்டர் ஆவார்.. யோகா பயில சென்றபோது, ரம்யா பாண்டியனுக்கும் மாஸ்டருக்கும் காதல் அரும்பியிருக்கிறது. இறுதியில், திருமணம் செய்து கொண்டனர். பிறகு தம்பதி இருவரும் ஹனிமூன் சென்று வந்தனர்..
தொடர்ந்து கோயில்களுக்கும் சென்று வந்து கொண்டிருக்கிறார்கள். அப்படித்தான் திருவண்ணாமலை கோயிலுக்கும் கிரிவலம் சென்றிருந்தார் ரம்யா பாண்டியன்.. கிரிவலம் செல்லும்போது தன்னை மீறிய ஒரு சக்தி இருந்ததை உணர்ந்ததாக ஆச்சரியத்துடன் கூறுகிறார்.
அற்புதம் - தேவதை
திருவண்ணாமலையில் தான் கிரிவலம் சென்ற அனுபவத்தை பகிர்ந்துள்ள ரம்யா பாண்டியன், "திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியும் தனக்கு நிரந்தரமான அமைதியை தருகிறது. திருவண்ணாமலை சிவன் கோயிலில் இப்படி ஒரு பவர் இருப்பதை பலரும் கூறியிருக்கிறார்கள். ஆனால், இதை இப்போது தான் தெரிந்துகொண்டேன். இந்த ஒரு இடத்தில் மட்டும்தான் இப்படி ஒரு அற்புதம் கிடைக்கிறது. எந்த கோயிலுக்கும் கிடைக்காத சிறப்பாக இதை பார்க்கிறேன்..
இந்த கிரிவல பாதையின்போது என்னுடன் வந்த ஒருவர், நீங்கள் ஒரு தேவதை, உங்களுடன் கிரிவலப் பாதையில் நடப்பதை அதிர்ஷ்டமாக கருதுகிறேன் என்று குறிப்பிட்டார். இதை கேட்டு மெய்சிலிர்த்து போனேன்" என்று ரம்யா பாண்டியன் பதிவிட்டிருக்கிறார்.
வரதட்சணை - சபாஷ்
அதுமட்டுமல்ல, ரம்யா பாண்டியன் திருமணம் குறித்து, அவரது தாய் சாந்தி பேட்டி ஒன்றை தந்துள்ளார்.. அதிலிருந்து சில தகவல்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. அதாவது, வழக்கமாக பெண் வீட்டில் வரதட்சணையாக தங்க நகைகள், பணம் என வாங்குவார்கள்.
ஆனால், ரம்யா பாண்டியன் கல்யாணத்தின் போது பஞ்சாபி முறைப்படி ஆண்கள் தான் பெண்ணுக்கு வரதட்சணை கொடுத்து திருமணம் செய்ய வேண்டுமாம். அதன்படி ரம்யா பாண்டியனின் காதலன் லட்சக்கணக்கில் வரதட்சணை கொடுத்து திருமணம் செய்ததாக, ரம்யாவின் தாய் கூறியிருக்கிறார். அதாவது, மணமகன் வீட்டில் , 10 பைசாகூட வரதட்சனை பெறவில்லையாம். இந்த தகவலை கேட்டு இணையவாசிகள் ரம்யா பாண்டியனுக்கு சபாஷ் சொல்லி வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications