ஜெயராம் வீட்ல விசேஷங்க.. இன்னும் 10 நாள்தான்.. நடிகர் காளிதாஸ் ஜெயராம்க்கு செம குஷி.. போஸ்ட் பாருங்க
சென்னை: நடிகர் காளிதாஸ் ஜெயராம் தன்னுடைய திருமணத்திற்கு இன்னும் 10 நாட்களே உள்ளதாக ரசிகர்களுக்கு தெரிவித்துள்ளார்.. இதுகுறித்து உற்சாக ட்வீட் ஒன்றையும் பதிவிட்டுள்ளார். இதை பார்த்த அவரது ரசிகர்கள், அட்வான்ஸ் திருமண வாழ்த்தை பகிர்ந்து வருகிறார்கள்.
நடிகர் ஜெயராம் மகன் காளிதாஸ், குழந்தை நட்சத்திரமாக திரையுலகில் அறிமுகமானவர். முதல் படத்திலேயே தேசிய விருதையும் பெற்று, பலரையும் ஆச்சரியப்படுத்தியவர்.. இதையடுத்து, "மீன் குழம்பும் மண் பானையும்" படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமானார்.

அறிமுகம்: நட்சத்திரம் நகர்கிறது, விக்ரம், இந்தியன் 2, ராயன் உள்ளிட்ட படங்களில் நடித்து, தனக்கென ரசிகர் பட்டாளத்தை பெற்றுள்ளார்.. பிரபல மாடல் தாரிணி காலிங்கராயர் என்பவருடன் சோஷியல் மீடியாவில், காளிதாஸுக்கு அறிமுகம் ஏற்பட்டது.. இதுவே இவர்களுக்குள் நட்பை ஏற்படுத்தி, காதலிக்கவும் துவங்கியிருக்கிறார்கள்.
மணமகள் தாரிணி, நீலகிரியை சேர்ந்தவர். விஷுவல் கம்யூனிகேஷன் படித்துள்ளவர்.. கடந்த 2019ல், மிஸ் தமிழ்நாடு, கடந்த 2021-ல் மிஸ் யுனிவர்ஸ் இந்தியா போட்டிகளில் பங்கேற்றவர்.. பிரபலமான மாடலான இவர், தீபிகா படுகோன் போன்ற பிரபலங்களுடன் சேர்ந்து விளம்பரங்களில் நடித்தவர்.
உறவினர்கள்: தன்னுடைய காதலை 2 வருடத்துக்கு முன்பே காளிதாஸ் அறிவித்திருந்த நிலையில், கடந்த ஆண்டு இவர்களது நிச்சயதார்த்தமும் நடந்தது. இந்த நிகழ்வில், இரு வீட்டினரின் நெருங்கிய உறவினர்கள் மட்டுமே கலந்து கொண்டிருந்தனர். இந்நிலையில், காளிதாஸ் ஜெயராம் - தாரிணியின் திருமணம் 7ம் தேதி நடக்க உள்ளது.. இதையடுத்து, திருமண பத்திரிகைகள் விநியோகிக்கும் பணிகளை, இரு வீட்டினரும் துவங்கியிருக்கிறார்கள்.
அந்தவகையில், தமிழக முதல்வர் ஸ்டாலினை, நடிகர் ஜெயராம் குடும்பத்தினர், கடந்த மாதமே நேரில் சந்தித்து அழைப்பு விடுத்திருந்தனர்.. காளிதாஸ், ஜெயராம், பார்வதி மூன்று பேரும் ஸ்டாலின் மற்றும் துர்கா தம்பதியினருக்கு இந்த பத்திரிகையை தந்து அழைப்பு விடுத்திருந்தனர். இது தொடர்பான போட்டோவையும் காளிதாஸ் தன்னுடைய இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டிருந்தார்.
முதல் பத்திரிகை: ஸ்டாலினுக்கு பத்திரிகை வைத்த நிகழ்வு அனைவராலும் உற்றுநோக்கப்பட்டது.. காரணம், கேரளாவை சேர்ந்த ஜெயராம் அம்மாநில முதல்வர் பினராயி விஜயனை சந்தித்து திருமண பத்திரிக்கையை வழங்காமல், தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு, முதல் பத்திரிக்கையை கொண்டு வந்து தந்திருந்தார்.. இது கேரளாவிலும் சலசலப்பை உண்டுபண்ணியிருந்தது.
எனினும், எந்த விமர்சனத்தையும் பொருட்படுத்தாது, ஜெயராம் குடும்பத்தினர், திருமண அழைப்பிதழை தங்கள் உற்றார், உறவினர், நண்பர்களுக்கு வழங்கி வருகிறார்கள்...
தம்பதி போட்டோ: இந்நிலையில், நடிகர் காளிதாஸ் ஜெயராம் தன்னுடைய திருமணத்திற்கு இன்னும் 10 நாட்களே உள்ளதாக ரசிகர்களுக்கு தெரிவித்துள்ளார். அத்துடன், மணமகள் தாரிணியுடன் சேர்ந்து ஒரு போட்டோவையும் பதிவிட்டுள்ளார். இந்த போட்டோவை பார்த்த ரசிகர்கள், புதுமண தம்பதிகளுக்கு தங்கள் அட்வாட்ன்ஸ் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications