சாமியே சரணம் ஐயப்பா..! சபரிமலையில் நெகிழ வைத்த ஹரிஷ் கல்யாண்.. குவியும் வாழ்த்து
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பெரிய அளவில் பிரபலம் அடைந்த ஹரிஷ் கல்யாண் இன்று தன்னுடைய twitter பக்கத்தில் சபரிமலையில் சாமி தரிசனம் செய்த புகைப்படங்களை வெளியிட்டு இருக்கிறார். இந்த புகைப்படங்கள் இணையத்தில் பலருடைய பாராட்டை பெற்று வருகிறது.
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சி ஒரு சிலருடைய வாழ்க்கையில் பெரிய அளவில் திருப்புமுனையை ஏற்படுத்தி இருக்கிறது. அதில் ஹரிஷ் கல்யாணும் ஒருவர். பிக் பாஸ் நிகழ்ச்சியின் முதல் சீசனில் 59 வது நாளில் என்ட்ரி ஆனார். பிறகு கடைசி நாள் வரைக்கும் அந்த நிகழ்ச்சியில் இருந்து ரன்னர் அப் ஆக தேர்வு செய்யப்பட்டார். அந்த நிகழ்ச்சியில் கிடைத்த வரவேற்பு காரணமாக ஹரிஷ் கல்யாண்க்கு தொடர்ச்சியாக திரைப்பட வாய்ப்புகள் கிடைக்க தொடங்கியது.

ஆனால் ஹரிஷ் கல்யாண் முதல் முதலில் சினிமாவில் அறிமுகமானது சிந்து சமவெளி என்ற திரைப்படத்தின் மூலமாகத்தான். அந்த திரைப்படத்தில் நடிகை அமலா பால் தான் இவரின் காதல் மனைவியாக நடித்திருப்பார். ஆனால் அமலாபால் இவருக்கு துரோகம் செய்துவிட்டு ஹரிஷ் கல்யாணின் அப்பாவோடு திருமணத்தை தாண்டிய உறவில் ஈடுபட கதை பெரிய அளவில் விமர்சனத்தை பெற்றது.
அந்த திரைப்படத்தில் ஜாலியான துருதுரு கேரக்டரில் நடித்திருந்தாலும் இறுதியில் ஐயோ பாவம் என்று எல்லோரும் இவரை பார்த்து உச்சி கொட்டும் அளவிற்கு நடித்து விட்டார். ஆனால் அந்த திரைப்படத்தில் நான்தான் நடித்தேன் என்று வெளியே சொல்வதற்கே ஹரிஷ் கல்யாண் யோசிக்கவும் செய்யலாம், அந்த அளவில்தான் அந்த திரைப்படம் இருந்தது. ஆனால் முதல் திரைப்படம் தான் அப்படி இருந்ததே தவிர அதை தொடர்ந்து அவருக்கு அறிந்து அறிந்து, சட்டப்படி குற்றம், வில்லம்பு, தாராளபிரபு போன்ற படங்கள் நல்ல பெயர் வாங்கி கொடுத்தது.
அதிலும் கடந்த வருடத்தில் வெளியான பார்க்கிங் திரைப்படம் இவர்களின் நடிப்பின் உச்சம் என்று சொல்லலாம். எதார்த்தமான கோபம் மற்றும் காதலை காட்டி பலருடைய பாராட்டை பெற்று இருந்தார். பிக் பாஸ் நிகழ்ச்சியின் முதல் சீசனில் போட்டியாளராக கலந்து கொண்ட ஹரிஷ் கல்யாண் கடந்த ஏழாவது சீசனில் கெஸ்ட் ஆக கலந்து கொண்டு இருந்தார்.
தன்னுடைய பார்க்கிங் திரைப்படத்திற்காக பிரமோஷனுக்கு அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருந்தார். அப்போது ஹரிஷ் கல்யாணை பார்த்து விஷ்ணு, ஹரிஷ் கல்யாண் தன்னுடைய நண்பன்தான் அதனால்தான் எனக்கு ஸ்டார் கொடுத்தார் என்று பேசியது பெரிய அளவில் பேசப்பட்டது. அது குறித்து கூட தன்னுடைய இன்ஸ்டா மற்றும் ட்விட்டர் பக்கத்தில் ஹரிஷ் கல்யாண் "எப்பா முடியல டா சாமி" என்று ஒரு பதிவு வெளியிட்டிருந்தார்.

இந்த நிலையில் ஹரிஷ் கல்யாண் நடித்த லப்பர் பந்து என்ற திரைப்படம் வரும் செப்டம்பர் 20 வெளியாக இருக்கிறது. இந்த திரைப்படம் வெற்றி பெற வேண்டும் என்பதற்காக ஹரிஷ் கல்யாண் சபரிமலையில் சாமி தரிசனம் செய்திருக்கிறார். இருமுடி கட்டி ஐயப்பன் முன்பு பக்தியோடு அவர் நின்று கொண்டிருக்கும் புகைப்படத்தை தன்னுடைய twitter பக்கத்தில் பகிர்ந்து இருக்கிறார். அந்த பதிவிற்கு சாமியே சரணம் ஐயப்பா என்று ஹரிஷ் கல்யாண் பகிர்ந்து இருக்கிறார்.
இதற்கு பலரும் அவரை பாராட்டி வாழ்த்துக்கள் தெரிவித்து வருகிறார்கள். ஹரிஷ் கல்யாண் நடித்த லப்பர் பந்து திரைப்படம் எதார்த்தமான கிராமத்து கதையை மையப்படுத்தி இருக்கும் என்று கூறப்படுகிறது. கிராமத்தில் கிரிக்கெட் விளையாடும் இளைஞர்களுக்கு ஏற்படும் பிரச்சனைகள் போன்றவற்றை தான் இந்த திரைப்படம் சொல்ல இருக்கும் நிலையில் இந்த திரைப்படம் அதிகமான இளைஞர்களை கவரும் வகையில் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே வெளியான பார்க்கிங் திரைப்படம் குடும்ப ரசிகர்களை கவர்ந்து இருந்த நிலையில் அதே வரிசையில் இந்த திரைப்படமும் வெற்றி பெற வேண்டும் என்று அவருடைய ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications