அச்சு அசலாக வடிவேல் பாலாஜி போல் இருக்கும் மகள்!.. பேமிலி போட்டோவை பார்த்து உருகும் ரசிகர்கள்
சென்னை: விஜய் டிவியில் கலக்க போவது யாரு நிகழ்ச்சியில் கலக்கிய மறைந்த வடிவேல் பாலாஜியின் மகள் அச்சு அசலாக அவரை போலவே இருப்பதால் ரசிகர்கள் அந்த புகைப்படத்தை கண்டு உருகுகிறார்கள்.
விஜய் டிவியில் அது இது எது, கலக்க போவது யாரு ஆகிய காமெடி நிகழ்ச்சிகள் ஒளிபரப்பப்பட்டன. இந்த நிகழ்ச்சிகளில் வடிவேல் வேடத்தில் வந்து நம்மை வயிறு குலுங்க சிரிக்க வைத்தவர் வடிவேல் பாலாஜி.
இவர் பெண் வேடமிட்டு வந்தும் நம்மை மகிழ்வித்தார். வடிவேல் வேடம் அணிந்தால் அவரது பாடி லேங்குவேஜ், குரல் என அனைத்தையும் கொண்டு வந்துவிடுவார் பாலாஜி. இவரது காமெடியை கண்களை மூடிக் கொண்டு கேட்டால் வடிவேல் என்றே நினைக்க தோன்றும்.

வடிவேல் பாலாஜி
இதனால்தான் இவரை அனைவரும் வடிவேல் பாலாஜி என அழைத்தனர். இந்த நிலையில் வடிவேல் பாலாஜி கடந்த 2020 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் உடல்நிலை பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அப்போது அவர் யாரையும் சந்தித்து உதவி என கேட்கவில்லை. இந்த நிலையில் அவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

விஜய் டிவி
இவரது மரணம் திரைத்துறையினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. நடிகர் வடிவேல் பாலாஜியின் உடலுக்கு விஜய் டிவி நட்சத்திரங்கள் நேரில் போய் கண்ணீர் அஞ்சலி செலுத்தினர். விஜய் டிவியில் ஆங்கராக அது இது எது என்ற நிகழ்ச்சியை சிவகார்த்திகேயன் நடத்திய போது வடிவேல் பாலாஜியுடன் அவருக்கு பழக்கம் ஏற்பட்டது.

வடிவேல் பாலாஜியின் குழந்தைகள்
இந்த பழக்கத்தை முன்னிட்டு வடிவேல் பாலாஜியின் குழந்தைகளின் படிப்பு செலவை தான் ஏற்றுக் கொள்வதாக சிவகார்த்திகேயன் அறிவித்தார். பாலாஜிக்கு ஒரு மகனும் மகளும் உள்ளனர். அவர்கள் இருவரும் என்ன படிக்க வேண்டும் என நினைக்கிறார்களோ அதை படிக்க வைப்பதாக உத்தரவாதம் கொடுத்துள்ளார் சிவகார்த்திகேயன்.

பேட்டி கொடுக்க மறுப்பு
வடிவேல் பாலாஜிக்கு ஜோதிலட்சுமி என்ற மனைவி உள்ளார். அண்மையில் இவரை சந்தித்து ஒரு யூடியூப் சேனல் பேட்டி எடுக்க சென்றது. அப்போது தனது குடும்பச் சூழல் குறித்து பேட்டி அளிக்க மறுத்துவிட்டார். இதையடுத்து அக்கம்பக்கத்தினரிடம் அந்த சேனல் நிர்வாகம் பேட்டி கண்டது. அதில் வடிவேல் பாலாஜி இறந்த போது உதவி செய்வதாக வாக்குறுதி கொடுத்த யாரும் இதுவரை உதவவில்லை.

புகைப்படம்
குழந்தைகளுக்கு ஒரு வேளைதான் சாப்பாடு போட முடிகிறது. மற்ற இரு வேளை பட்டினியாக இருப்பதாக ஜோதி லட்சுமி எங்களிடம் கண்ணீருடன் கூறுவார் என அக்கம்பக்கத்தார் தெரிவித்தனர். இந்த நிலையில் வடிவேல் பாலாஜி தனது மனைவி, மகன், மகளுடன் எடுத்துக் கொண்ட குடும்ப புகைப்படம் தற்போது வெளியாகியுள்ளது. இந்த புகைப்படத்தில் அவரது மகள் அச்சு அசலாக வடிவேல் பாலாஜியை போல் இருக்கிறார். இதை கண்டு ரசிகர்கள் உருகுகிறார்கள்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications