Havoc Review: ஹாவோக் 2025 விமர்சனம்! செட் எது, கிராபிக்ஸ் எதுனு தெரியாத அளவுக்கு சினிமாட்டோகிராபி
மதிப்பீடு: 2.5/5
டாம் ஹார்டி நடிப்பில், ஃகேரத் எவன்ஸ் இயக்கத்தில் வெளியான 'ஹாவோக்' (Havoc) திரைப்படம், 2025 ஏப்ரல் 25 அன்று நெட்ஃப்ளிக்ஸில் வெளியானது. இந்த திரைப்படம் ஒரு அதிரடி, ஆக்ஷன் திரில்லராக அமைந்துள்ளது.
டெடிக்டிவ் வாக்கர் (டாம் ஹார்டி) ஒரு அரசியல்வாதியின் (ஃபாரஸ்ட் வித்தேக்கர்) கடத்தப்பட்ட மகனை மீட்க, ஊழல், கும்பல் வன்முறை மற்றும் போலீஸ் தரப்பின் அதிரடி என்று பல விதத்தில் வேறு வேறு திசைகளை நோக்கி கதை சென்றாலும் பழிக்கு பழி வாங்கும் சாதாரண கதை தான். அதை சொன்ன களம், விறுவிறுப்பு, திரைக்கதை மூலம் காட்டிய பிரமாண்டம் என்று நம்மை கண் இமைக்காமல் காண செய்கிறது. ரெண்டாம் பாதியில் கதை இவ்வாறு தான் நகரும் என்று பார்வையாளர்கள் எளிதாக கணித்து விடுகிறார்கள். இதனால் முதல் பகுதியில் இருந்தா கிரிப் ரெண்டாம் பகுதியில் இல்லை என்று சொல்லலாம்.

படத்தின் முக்கிய பலம் ஆக்ஷன் காட்சிகளாகும். கம்பி, கத்தி, துப்பாக்கி என பல்வேறு ஆயுதங்களை பயன்படுத்தி, முதல் பகுதி சண்டை காட்சிகள் மிரள விடுகின்றன. கேரத் எவன்ஸின் இயக்கத்தில், இந்த காட்சிகள் ரசிகர்களை ஈர்க்கும் வகையில் உள்ளன.
வாக்கர் கதாபாத்திரத்தில் டாம் ஹார்டி தனது இயல்பான நடிப்பை வெளிப்படுத்துகிறார். அவரது உடல் மொழி மற்றும் கண்களின் வெளிப்பாடு, கதைக்கு பலம் சேர்க்கின்றன.

சினிமாட்டோகிராபி மற்றும் பின்னணி இசை, முழு படத்தையும் தாங்கி பிடிக்கிறது. ஒரு பிரேமுக்கும் வித்தியாசமான லொகேஷன் கண்களை கவருகின்றன. அதற்கேற்ப இசை இப்படத்திற்கு மிக பெரிய பலம், மொத்த படத்தை தூக்கி செல்கிறது. காட்சிகள் ஆக்கப்பட்ட இடங்கள் எல்லாம் புதியதாக கண்களுக்கு தோன்றியது. எது செட் எது உண்மையான இடம் எது கிராபிக்ஸ் என்று யூகிக்க முடியாத அளவுக்கு நேர்த்தியான ஒளிப்பதிவை அருமையாக செய்து இருந்தனர்.
குறைகள்
படத்தின் கதை எளிமையாகவும், எதிர்பார்க்கக்கூடியதாகவும் உள்ளது. கதாபாத்திரங்கள் மேம்படுத்தப்படவில்லை, மற்றும் அவர்களின் பின்னணி பற்றிய விளக்கங்கள் குறைவாக உள்ளன.
ஹாவோக்' ஒரு ஆக்ஷன் படத்தை விரும்பி பார்ப்பவர்களுக்கு நிச்சயமாக பிடிக்கும் . படம் ஆரம்பித்த 40 நிமிடங்கள் வரை ஜெட் வேகத்தில் செல்கிறது. பின்னர் ஒரு கட்டத்தில் சலிப்பை தருகிறது. எதார்த்தத்தை மிஞ்சிய வன்முறை காட்சிகள் துப்பாக்கி சுடுகள் போன்றவை பார்க்க திகட்டுகிறது.

படம் முடியும் தருவாயில் எல்லா கதாபாத்திரமும் ஒரே இடத்திற்கு வந்து விடுகின்றனர். எல்லாரும் சண்டை செய்கிறார்கள் மடிந்து விடுகிறார்கள் இதை பார்க்கும் போது அப்பட்டமான செயற்கை தன்மை தெரிந்தது.
மொத்தத்தில் படம் வேகமாக நகருகிறது கதை என்று சொல்வதற்கு ஒன்றுமே இல்லை. ஒரு முறை பார்க்கலாம்.
- குரு கிருஷ்ணன்
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications