அவர்தான் எனக்கு நல்ல வாய்ப்பு தருகிறார்.. ஐஸ்வர்யா ராஜேஷ் புகழாரம்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: நடிகை அர்ச்சனா, சரிதா, சுஜாதா இவர்களுக்கு எப்படி வாய்ப்பு கிடைத்ததோ அப்படித்தான் எனக்கும் வாய்ப்புக்கள் கிடைத்து வருகின்றன என்று கூறுகிறார் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்.

கனா படத்தில் நடித்ததன் மூலம், நடிப்பில் தான் ஓரளவுக்கு உயர்ந்த அந்தஸ்தை எட்டி விட்டோம் என்கிற நினைவு அடிக்கடி வந்து அவரை உற்சாகப்படுத்துகிறதாம்.

அந்த உற்சாகம் தன்னை இன்னும் மேம்படுத்தும் என்றாலும், சில வாய்ப்புக்கள் கால்ஷீட் இல்லாமல் கை நழுவிப் போவதாகவும் வருத்தப் படுகிறார்.

 கேள்வி கேட்கிறார்கள்

கேள்வி கேட்கிறார்கள்

பெரிய ஹீரோ சிவ கார்த்திகேயன். அவர் உங்களுக்கு ஜோடியாக நடிக்க வாய்ப்பு கொடுக்காமல் தங்கையாக நடிக்கத்தானே வாய்ப்பளித்து இருக்கிறார் நம்ம வீட்டுப்பிள்ளை படத்தில் என்று கேட்கிறார்கள். பாசமலர் காலத்திலிருந்தே அண்ணன் தங்கை சென்டிமென்ட் ஜெயிச்சு இருக்கு.

 நடிகையாக பார்க்கிறார்

நடிகையாக பார்க்கிறார்

என்னை சிவ கார்த்திகேயன் சார் என்னை ஒரு நல்ல நடிகையாகத்தான் பார்க்கிறார். அதனாலதான் கனா படத்தில் நடிக்க எனக்கு வாய்ப்பு கொடுத்தார். இப்போதும் நம்ம வீட்டு பிள்ளையில் தங்கை வேஷம் கொடுத்திருக்கார். அவருக்கு ஜோடியாக நடிப்பதை விட, இதில் வெயிட் இருக்கும் என்றுதான் எனக்கு இந்த வேஷத்தை கொடுத்திருப்பார். படம் பாருங்கள் உங்களுக்கு புரியும்.

கார்த்திகேயன்

கார்த்திகேயன்

அருண் காமராஜ் சார், சிவா சார் ரெண்டு பேருமே சொல்லி இருக்கிறார்கள்.எனது இந்த முகத்துக்கு என்று சினிமா வாய்ப்புக்கள் தனிப்பட்ட முறையில் தேடி வரும் என்று.இதுவரைக்கும் கூட அப்படித்தான் எனக்கு வாய்ப்புக்கள் வந்துக்கொண்டு இருக்கிறது. எனக்கும் இப்படி சவாலான கதாபாத்திரங்கள் அமைந்தால் நன்றாக இருக்கும்.

 தனிப்பட்ட ரகம்

தனிப்பட்ட ரகம்

எனது முகம் தமிழ் சினிமா உலகில் தனிப்பட்ட ரகம். சும்மா ஒரு படத்தில் ரெண்டு படத்தில் ஹீரோயினா நடிச்சுட்டு போவதில் எனக்கு விருப்பம் இல்லை.ஆனால், ஒரே எதிர்பார்ப்பு இருக்கிறது. டான்ஸ் என்றாலெனக்கு உயிர்.நல்லா டான்ஸ் ஆடும் ஒரு கதாபாத்திரம் எனக்கு வேண்டும்..அது இன்னும் எனக்கு அமையவில்லை. மத்தபடி என் முகத்துக்கு என்று தனி மவுசு இருக்கு.அது என்னை ஜெயிக்க வைத்து வருகிறது.

நம்ம வீட்டுப்பிள்ளை படம் நல்லா வந்திருக்கு. தியேட்டரில் போய் படம் பாருங்க. அப்போது தெரியும் நான் எப்படிப்பட்ட நடிகை, எனக்கு வரும் வாய்ப்புக்கள் எப்படி, எதனால் எனக்கு இது போல வருகின்றன என்பது உங்களுக்கே புரியும் என்று சொல்கிறார் ஐஸ்வர்யா ராஜேஷ்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+