Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பாடகி சின்மயிக்கு மீண்டும் சிக்கல்! பாடிட்டு எதுக்கு மேடம் வருத்தம்? மோகன் ஜி கேட்ட கேள்வி! ட்விஸ்ட்

Subscribe to Oneindia Tamil

சென்னை: மீண்டும் சர்ச்சைகளில் சிக்கி உள்ளார் பாடகி சின்மயி.. இயக்குநர் மோகன் ஜி இயக்கத்தில் உருவாகும் 'திரௌபதி 2' படத்தின் வெளியீட்டு வேலைகள் வேகமாக நடந்து வரும்நிலையில், இப்படத்தின் பாடலை பாடியதற்காக சர்ச்சையில் சின்மயி சிக்கி உள்ளார்.. இதுகுறித்து சின்மயி தந்த விளக்கமும், அந்த விளக்கத்தை தொடர்ந்து டைரக்டர் மோகன்ஜி பதிவிட்ட விமர்சனமும் பெரும் பரபரப்பை சினிமா வட்டாரத்தில் கிளப்பிவிட்டுள்ளது.. என்ன நடந்தது?

கடந்த 2020ல் மோகன் ஜி டைரக்‌ஷனில் வெளியான படம்தான் திரெளபதி'.. இந்த படம் வெற்றிப்படமாக அமைந்து வசூலை குவித்தது.. ஆனாலும், சாதியவாதம் தொடர்பான சர்ச்சைக்கும் ஆளானது..

Television Chinmayi Mohan G

மோகன் ஜி சக்சஸ்

இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து தற்போது 2ம் பாகத்தையும் மோகன் ஜி தயாரித்து இயக்கி வருகிறார்.. ஜிப்ரான் இசையில் "எம்கோனே" என்ற பாடல் முதலில் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது. முதல் பாடலாக வெளிவந்த இந்த 'எம்கோனே' என்ற பாடலை செல்வமிரா எழுத, பிரபல பின்னணிப் பாடகி சின்மயி பாடியிருந்தார். சில நாட்களுக்கு முன்பு இந்த பாடலின் புரமோவும் வெளியானது..

இனிமையான குரலுக்கு சொந்தக்காரரான சின்மயி பாடியதுமே இந்த பாடல் இன்னும் பிரபலமடைந்துவிட்டது.. எனினும், பெண்ணியம், பெண்களின் உரிமை, பெண்களுக்கு எதிரான வன்முறைகள், மற்றும் முற்போக்கு பேசும் சின்மயி, சாதியவாதம் பேசும் மோகன் ஜி படத்தில் எப்படி பாடினார்? ஆச்சரியமாக உள்ளதே? என்று கேள்விகளை எழுப்பி விமர்சித்திருந்தனர்.

சின்மயி விளக்கம்

இதற்கு சின்மயி விளக்கம் தெரிவித்து, "எம்கோனே" பாடல் பாடியதற்காக மன்னிப்பும் கேட்டிருந்தார்.. அதில், ஜிப்ரானை எனக்கு 18 வருடங்களாக தெரியும்.. அவரது அலுவலகத்தில் இருந்து அழைப்பு வந்ததும் வழக்கம்போல பாடி தந்துவிட்டேன்.

முன்பே சூழல் தெரிந்திருந்தால் இப்பாடலை ஒருபோதும் பாடியிருக்க மாட்டேன். எனக்கும் அந்த கொள்கைக்கும் நிறைய முரண்கள் இருக்கின்றன.. என் சித்தாந்தத்துக்கு பொருந்தாததால் வருந்துகிறேன்" என்று தெளிவுபடுத்தி இருந்தார்,.

திரௌபதி 2 பாடல்

சின்மயி இப்படி சொன்னதுமே, மோகன் ஜி கடுப்பாகிவிட்டார்.. 'திரெளபதி 2 திரைப்படத்தில் பணியாற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள், நடிகர், நடிகைகளை குறிவைத்து தாக்க வேண்டாம் என்று கண்டனம் தெரிவித்துள்ளார்.

தன்னுடைய எக்ஸ் பக்கத்தில், என்னுடைய படங்கள் என்னுடைய சொந்த சிந்தனை.. என்னுடன் நேரடியாகவோ, மறைமுகமாகவோ இணைந்து பணியாற்றும் எந்த நபரையும் குறிவைப்பது கோழைத்தனமானது..

'திரெளபதி 2' படத்தில் பணியாற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள், நடிகர், நடிகைகளை குறிவைத்து தாக்க வேண்டாம் என்று பதிவிட்டுள்ளார்.

சின்மயி வாய்ஸ்

மேலும், இந்த விவகாரம் தொடர்பாக வீடியோ ஒன்றையும் மோகன் ஜி வெளியிட்டுள்ளார்.. அதில், "பாடலின் டியூனை கேட்டதுமே, இதுக்கு சின்மயி வாய்ஸ் இருந்தால் நன்றாக இருக்கும் என்று கேட்டது நான் தான். நான் சின்மயி ரசிகன் என்பதாலும் சின்மயி பாடினால் இந்த பாடலுக்கு உயிர் இருக்கும் என்பதாலும் ஜிப்ரானிடம் நான் தான் கேட்டுக்கொண்டேன். ஜிப்ரானும் ஒப்புக்கொண்டு அவரை பாட வைத்தார்.

ஆனால், பாடலின் புரோமோ வெளியானதும் சின்மயியை சிலர் விமர்சிக்க தொடங்கி விட்டார்கள்.. எனக்கு அப்பவே சின்மயி எதாவது இதற்கு ரியாக்ட் செய்வார் என்று புரிந்துவிட்டது. நான் நினைத்தது போலவே ரியாக்ட் செய்த சின்மயி இந்த பாடலை பாடியதற்காக மன்னிப்பு கேட்டுள்ளார்.

சித்தாந்தம் என்ன

என்னுடைய சிந்தாந்தம் தெரிந்திருந்தால் பாடாமல் இருந்திருப்பேன் என்றும் சின்மயி தெரிவித்துள்ளார்.. இது தொடர்பாக என்னிடமோ, இசையமைப்பாளரிடமோ எந்தவொரு விளக்கமும் கேட்கவில்லை. அது ரொம்ப அதிர்ச்சியாக இருந்தது.

இந்தப் படத்தில் என்ன சொல்ல வருகிறோம் என்பது சின்மயி மேடத்துக்கு தெரியாது. ஒரு முறை எங்களிடம் கேட்டுவிட்டு, அவருடைய நிலைப்பாட்டை எடுத்திருக்கலாம்.

எப்போதுமே கடவுள் இருக்கிறது என்று சொல்லக் கூடிய ஆள் நான். தமிழ் சினிமாவில் கடவுள் இருக்கிறது, இல்லை என்பதுதான் பெரிய பிரச்சினை. அதைச் சுற்றி தான் மொத்த சித்தாந்தமும் இருக்கிறது.

எதுக்காக வருத்தப்பட்டார் சின்மயி

எனக்கு தெரிந்து சின்மயி மேடம் கடவுளுக்கு எதிராக எதுவும் பேசியதில்லை. அவருக்கு எதிராக எந்த சித்தாந்தத்தில் எதில் வேறுபட்டு நிற்கிறேன் என தெரியவில்லை. இந்த சித்தாந்தத்தில் இருப்பவரின் படத்துக்கு பாடமாட்டேன் என்று எங்கேயாவது கூறியிருந்தால் கண்டிப்பாக கூப்பிட்டிருக்க மாட்டேன். ரொம்ப விரும்பித்தான் அவருடைய குரலில் இந்தப் பாடல் பதிவாக வேண்டும் என்று நான் தான் கேட்டேன்.

எனக்கு ஒரு தெளிவு வேண்டும்... சின்மயி மேடம் எதற்காக வருத்தம் தெரிவித்தீர்கள்? உங்களுக்கு இப்படியொரு அழுத்தம் கொடுத்தவர்கள் ஏன் கொடுத்தார்கள் என்பதை விளக்கி ஒரு அறிக்கை வெளியிட வேண்டும். அது எங்களுடைய படத்தை எந்தவொரு விதத்திலும் வியாபாரத்தில் பாதிக்காமல் இருக்கும்.

சின்மயி மேடம் என்ன சொல்ல போகிறார்

அப்படி சின்மயி மேடம் விளக்கம் தர விரும்பவில்லையானால், அவருடைய ட்வீட்டையாவது நீக்க வேண்டும்.. காரணம், இந்த படத்தை உங்களுடைய விஷயம் வியாபாரத்தில் பாதிக்க கூடாது என நினைக்கிறேன். விரைவில் சின்மயி மேடத்திடம் இருந்து நல்ல பதில் எதிர்பார்க்கிறேன்" என்று தெரிவித்துள்ளார் மோகன் ஜி.

நீண்ட நாள் கழித்து சின்மயி பாட வந்த நிலையில், அது சர்ச்சையாகி, அதற்கு வருத்தமும் கூறி, அந்த வருத்தமும் விமர்சனத்துக்குள்ளாகி இருப்பது, பரபரப்பை தந்து வருகிறது. இதற்கு சின்மயி எப்படி ரியாக்ட் செய்வார் என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+