பிக்பாஸ் தமிழ் சீசன் 6: என்னாது இவங்கெல்லாம் கலந்துக்கிறாங்களா?.. இனி கமகமக்கும் பிக்பாஸ் வீடு?
சென்னை: பிக்பாஸ் தமிழ் சீசன் 6 -இல் பங்கேற்க போகும் சில போட்டியாளர்களின் உத்தேச பட்டியல் வெளியாகியுள்ளது.
பிக்பாஸ் நிகழ்ச்சி கடந்த 5 ஆண்டுகளாக 5 சீசன்கள் நடந்து முடிந்துள்ளது. விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் இந்த நிகழ்ச்சியை கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வருகிறார்.
5 சீசன்களை கடந்த இந்த நிகழ்ச்சியில் கடைசி சீசனின் போது கமல்ஹாசனுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. இதையடுத்து ஒரு வாரம் மட்டும் கமல்ஹாசனுக்கு பதிலாக நடிகை ரம்யா கிருஷ்ணன் இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.

கமல்ஹாசன்
இதையடுத்து கமல்ஹாசன் மருத்துவமனையிலிருந்து வீட்டுக்கு வந்ததும் மீதி நிகழ்ச்சியை கமல் தொகுத்து வழங்கினார். இந்த நிலையில் பிக்பாஸ் அல்டிமேட் எனும் நிகழ்ச்சி தொடங்கப்பட்டது. இது ஹாடஸ்டாரில் 24 மணி நேரமும் வெளியானது. விக்ரம் படத்தின் படப்பிடிப்பு இருந்ததால் இந்த நிகழ்ச்சியில் இருந்து கமல்ஹாசன் வெளியேறினார்.

ரம்யா கிருஷ்ணன்
இதையடுத்து அவருக்கு பதிலாக ரம்யா கிருஷ்ணன் இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் நடிகர் சிம்பு இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். இந்த நிலையில் இந்த நிகழ்ச்சியின் சீசன் 6 வரும் அக்டோபர் முதல் வாரத்தில் தொடங்கும் என தெரிகிறது.

பிரபலங்கள்
இதற்கான நடிகர், நடிகைகள், பிரபலங்களின் ஆடிஷன் நடந்து வருவதாக தெரிகிறது. இந்த சீசனில் 6 போட்டியாளர்கள் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன. அதில் குக் வித் கோமாளி புகழ் கனி கலந்து கொள்வதாக கூறப்படுகிறது. இவர் குக் வித் கோமாளி சீசன் 2 வின் வின்னர். இவர் இயக்குநர் அகத்தியனின் மகளாவார். குக் வித் கோமாளியில் காரக்குழம்பு கனி என அழைக்கப்பட்டார்.

சீரியல் நடிகர்
அது போல் சீரியல் நடிகரும் தொகுப்பாளருமான அசீம் கான் கலந்து கொள்வதாகவும் ஒரு தகவல் வெளியானது. மேலும் இவர் சீசன் 4 -இல் வைல்கார்டில் என்ட்ரி கொடுப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. அது போல குக் வித் கோமாளி புகழ் பவித்ரா லட்சுமி கலந்து கொள்கிறாராம். பிபி ஜோடிகள் உள்ளிட்ட டான்ஸ் நிகழ்ச்சிகளின் நடுவராக இருந்த நடிகர் நகுல் கலந்து கொள்வார் என தெரிகிறது.

அஷ்வினுமா
அது போல் குக் வித் கோமாளி புகழ் அஷ்வின், ஷகிலா மகள் மிலா உள்ளிட்டோரும் கலந்து கொள்ள வாய்ப்பிருப்பதாக தெரிகிறது. மேலும் கடந்த சீசன்களில் போட்டியாளராக இருந்த ஆண் மாடலின் நண்பர் ஒருவரும் கலந்து கொள்வார் என தெரிகிறது. இவர் பாலாஜி முருகதாஸின் நண்பர் முகேஷ் ரவியாக இருக்கலாம் என சொல்லப்படுகிறது. அது போல் குக் வித் கோமாளி புகழ், சார்பட்டா பரம்பரையில நடித்த சந்தோஷ் பிரதாப் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வார் என தெரிகிறது. குக் வித் கோமாளி நிகழ்ச்சியிலிருந்து 3 பேர் கலந்து கொள்வதாக உள்ளதால் பிக்பாஸ் வீட்டில் மணக்க மணக்க சமையல் இருக்கும் என எதிர்பார்ககப்படுகிறது.












Click it and Unblock the Notifications