கோட் படத்தில் சினேகாவிடம் இருந்தது கூட நடிகர் விஜய்யிடம் இல்லை! பிரசாந்த் சொன்னது பொய்யா?
சென்னை: நடிகர் விஜய் நடித்து திரையரங்குகளில் ஓடிக் கொண்டிருக்கும் கோட் படத்தில் என்னென்ன காட்சிகள் சொதப்பல் என்பதை தெரிந்து கொள்ளுங்கள். இந்த படம் வெங்கட் பிரபுவுக்கு வெற்றியா தோல்வியா என்பதையும் தெரிந்து கொள்ளுங்கள்.
இதுகுறித்து செல்வன் அன்பு என்பவர் கூறியிருப்பதாவது: GOAT.(Spoilers) வெங்கட் பிரபு திரைக்கதைகள் பொதுவாக ப்ரில்லியன்ஸ் இல்லாததாகவே இருக்கும் எஸ்.பி.முத்துராமன், கங்கை அமரன் படங்கள் மாதிரி. அந்தக்காலம் வேறு. இன்றைய காலகட்டம் வேறு.

யாருய்யா அவன் பத்து துப்பாக்கிக்கு சமம் எனச் சொன்னது. துப்பாக்கி திரைப்படத்தில் ஒரு ப்ரில்லியண்ட்டான ஸ்க்ரீன் ப்ளே இருக்கும். ஏ.ஆர்.முருகதாஸிடம் இருக்கும் அந்த ஸ்ட்ரக்ட்சர் ஆஃப் ஸ்க்ரீன்ப்ளே ப்ரில்லியன்ஸ் வெங்கட் பிரபுவிடம் கிடையாது.
மங்காத்தா அவரது உச்சபட்ச ப்ரில்லியண்ட் திரைக்கதை. மாநாடு கூட நல்ல திரைக்கதை.
GOAT படத்தில் M.S.காந்தி என்கிற விஜய் ஒரு SATS அதிகாரியாம். ஆனால் படம் தொடங்கி க்ளைமேக்ஸில் தன் மகனை சுடும் வரை அந்த special anti terrorism squadக்கான எந்த அறிவும் அவரிடம் இல்லை.
சொந்த மகனை இழக்கிறார். சொந்த மகன் தான் வில்லன் என துப்பறிய முடியவில்லை. கூட இருக்கும் அதிகாரி வில்லனின் கையாள் என்பதை இருபது வருடங்களுக்கு மேலாக கண்டுபிடிக்க முடியவில்லை. துப்பாக்கி படத்தில் விஜய் மிலிட்டரி ஆபீஸராக வருவார். ஆனால் அவர் செயல்கள் ஒரு துப்பறியும் அதிகாரியின் செயல்களாக இருக்கும்.
Field வேறாக இருந்தாலும் கத்தி மாதிரி ஷார்ப்பாக இருப்பார் துப்பாக்கியில் விஜய். ஆனால் இங்கு நிஜத்தில் இவர் ஒரு துப்பறியும் அதிகாரி. டெர்ரரிஸ்ட் நடவடிக்கைகளை துப்பறிந்து கண்டுபிடிப்பவர். ஆனால் இவரால் தன் வாழ்க்கையையே காப்பாற்றிக் கொள்ள முடியவில்லை. ராஜீவ் மேனன் என்கிற மோகன் (ராஜீவ் மேனன் பெயரை ஏன்யா டேமேஜ் பண்றீர்....) ஒரு டெர்ரரிஸ்ட். அவர் இவரது மகனை கடத்திக் கொண்டு போய் வளர்க்கிறார்.
வளர்த்து இவருக்கு எதிராக அதிகாரிகளை இவர் மகனை வைத்தே கொலையும் செய்கிறார். மகனை நேக்காக இவர் வீட்டுக்குள்ளேயே நுழைக்கிறார். தான் நினைத்த காரியங்கள் எல்லாவற்றையும் சாதிக்கும் மேனன் என்கிற மோகனை அதுவும் தொற்றுப்போன SATS அதிகாரி விஜய் "மயிரே'" என அழைக்கிறார். சிரிப்பாக வருகிறது. யார் மயிரு ஏன்பது திரைக் கதையில் தெள்ளத் தெளிவாக தெரிகிறது.
SATS அதிகாரி காந்தி பாத்திரம் என்பதை விட சாமான்ய குடும்பஸ்தன் என்றால் கூட அந்த பாத்திரம் தொபுக்கடீர் என விழுந்து விடுகிறது. தன் மனைவியிடமே தன் அலுவலக செயல்பாடுகளை மறைக்க இந்த அதிகாரியால் முடியவில்லை. மனைவி ஸ்னேகாவிடம் இருக்கும் புலனாய்வுத் திறமை கூட இல்லாதவராய் காண்பிக்கப்படுகிறது. மகன் ஜீவன் தான் குற்றவாளி என்பது கூட காந்தி துப்பறிந்து கண்டு பிடிக்கவில்லை. ஜீவன் தானாக அங்கே வந்து தான் மாட்டிக் கொள்கிறார். அதைப்போல் ஒரு கருகிய பாடியை பார்த்ததும் தன் மகன் தான் என முடிவெடுத்து மகன் இறந்து விட்டதை நம்பி விடுகிறார்.
அத்திப்பட்டி போன்ற ஏழை விவசாயியின் அறிவுக்கு ஓ.கே. டெர்ரரிஸம் ஸ்குவாட் அதிகாரி அறிவும் இவ்வளவு தானா?. ட்விஸ்ட் என நல்ல கதாபாத்திரங்களை வில்லன்களாய் காட்டும் யுக்தி குருதிப்புனல் காலத்திலேயே வந்து விட்டது. சொந்த மகனையே வில்லனாக காட்டும் போது கூட இருக்கும் அதிகாரி வில்லனின் கையாள் என்பது ஆதிகால திரைக்கதை யுக்தி.
SATSன் மற்ற அதிகாரிகளை எடுத்தால் பிரபுதேவா என்கிற அதிகாரி. பிரசாந்த் என்கிற அதிகாரி இறப்பதாக காட்டுகிறார்கள் என்பதைக் கூட துப்பறிய முடியாத அளவுக்கே அறிவு உள்ள பிரபுதேவா SATS அதிகாரியாம். விஜய்யை விடுங்கள்... பிரசாந்த், அஜ்மல், ஜெயராமுக்குக்கூட தன்னோடு உள்ள ஒற்றனை கண்டு பிடிக்க முடியவில்லை.
சொத்தை ஐடியா என்பது ஸ்டேடியத்தில் பாம் வைப்பது. எத்தனையோ படங்களில் பார்த்து புளித்துப் போன ஐடியா. முதலில் மேனன் விஜய்யை பழி வாங்க வந்தாரா?. மக்களை கொல்ல வந்தாரா?. டெர்ரரிஸ்ட்டை மதச்சாயம் பூசாமல் காட்ட முடிவெடுத்து மேனன் என பெயர் வைக்கிறார். 'திவான் ராஜகோபாலாச்சாரி டெர்ரரிஸ்ட்' என்று சொன்னால் எப்படி சிரிப்பு வருமோ அப்படி வருகிறது.
மேனன் என்பவர்களைப் பற்றி ஹோம்வர்க் பண்ணுங்க வெங்கட் பிரபு. பாம் இருக்கும். பாமை வெடிக்க வைக்க ஒரு ரிமோட் இருக்கும். அந்த ரிமோட்டை தூக்கிக் கொண்டு காமெடி ஆக்டர் ஓடுவார். இதெல்லாம் ராமநாராயணன் நாய், குரங்கை வைத்து செய்துவிட்ட க்ளைமேக்ஸ் காட்சிகள்.
அதிலாவது ஒரு புதிய முயற்சியை செய்திருக்கலாம். பிரசாந்த், பிரபுதேவா, மோகன் போன்ற நடிகர்களை திரும்பக் கொண்டு வந்து நடிக்க வைக்கும் போது அந்த பாத்திரங்களுக்கு ஒரு தனித்தன்மையோ மற்றும் காட்சிகளோ இருக்க வேண்டுமல்லவா அது இல்லை. இந்தப் பாத்திரங்களை வெங்கட் பிரபுவின் டீமான அர்விந்த், வைபவ், யுகேந்திரன் போன்றோர் செய்யும் அளவுக்கான பாத்திர வெயிட்டே இருக்கிறது.
இதில் பிரசாந்த் ஒரு பேட்டியில் நானும் 'ஒரு நாயகனாக வருகிறேன்' என புளுகுமூட்டையை ஏன் அவிழ்த்து விட்டார் எனத் தெரியவில்லை. இவ்வளவு தான் அவருடைய கதை கேட்கும் அறிவு போல. மகன் ஜீவனாக வருபவர் க்ளோன் என வேறொரு முடிச்சை படம் ரிலீசுக்குப் பிறகு அவிழ்த்து விடுகிறார் வெங்கட்பிரபு.
அது க்ளோன் என்றால் 'சொந்தமகனை கொன்ற நேர்மையான அதிகாரி காந்தி' என்கிற அந்த கதாபாத்திரத்திதின் தன்மை அழிந்து விடும். ஜீவன் பாத்திரம் விஜய் மேல் நமக்கு எந்த உணர்வுமே வரவில்லை. வில்லன் என வெறுப்பதா? விஜய் என கொண்டாடுவதா? என்கிற இதே குழப்பத்தால் தான் விஜய்காந்தின் 'ராஜ துரை' தோற்றுப் போனது.
பெரிய தயாரிப்பாளர், பெரிய நடிகர்கள், பெரிய பட்ஜெட் கிடைத்தும் வெங்கட் பிரபு மிஸ் செய்துவிட்டார் என்றே தோன்றுகிறது. இதேக்கதையை இன்னும் வேறு மாதிரி இன்னும் நன்றாக பயன்படுத்தி இருந்திருக்கலாம். ஓப்பனிங் காட்சியை ஜேம்ஸ்பாண்ட் படக் காட்சி அளவுக்கு எடுக்க முடிவெடுத்துவிட்டு அதே ஹெலிகாப்டர், பைனாக்குலர் துப்பாக்கி என லோக்கலாக எடுத்துவிட்டு 'கென்யா' டைட்டில் போட்டு விட்டால் ரிச்சாகி விடுமா?.
சொந்த வாழ்வில் என்ன நடக்கிறது அல்லது என்ன நடக்கப் போகிறது எனத் தெரியாத ஒரு அதிகாரி தான் Lion Is Always Lion ஆம். ஒய்.ஜி அண்ணா... இன்னும் அந்த சகலகலா வல்லவன் 'துபாய் ஷேக்கு... எண்ணெய் கிணறு..'' நேச்சரை விடவே இல்லையா?
படத்தில் கொண்டாடும் படி ஒன்றுமேயில்லையா? இருக்கிறது. விஜய் என்கிற நடிகரின் டெடிகேஷன். தன் வயதுக்கேற்ற பாத்திரத்தில் துணிந்து நடித்தது.
முகத்தில் நாற்பது வயதுக்கு மேல் வரும் வாயின் இருபுறமும் வரும் கோடுகள் விழாமல் முகத்தை வைத்திருப்பது, உடல் எடையை மெயிண்ட்டை செய்வது என பல விஜய் ஸ்பெஷல். சொந்த வாழ்வில் தோற்றுப்போன Greatest of All time.. நடிகை சாவித்ரிக்கு Life time achievement award கொடுத்த மாதிரி.... இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications