முதல் முறையாக கமலுடன் இணைந்து தக் லைஃப்! சிம்புவுக்கு எத்தனை கோடி சம்பளம் தெரியுமா?
சென்னை: தக் லைஃப் படத்திற்கு நடிகர் சிம்பு எவ்வளவு ஊதியம் வாங்கினார் என்பதை பார்க்கலாம். இந்த படம் தற்போது கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. ஆனால் தக் லைஃ படத்தில் நடிகர் சிம்பு நன்றாக நடித்துள்ளார்.
மணிரத்னம் இயக்கத்தில் சிம்பு முதல் முறையாக நடித்த படம் செக்க சிவந்த வானம். இந்த படத்தை தொடர்ந்து மணிரத்னமும் சிம்புவும் இணைந்துள்ள படம் தக் லைஃப் ஆகும்.

சிம்பு, தக் லைஃப் மூலம் கமல்ஹாசனுடன் முதல் முறையாக இணைந்து நடித்துள்ளார். இந்த படத்தில் த்ரிஷா, அபிராமி, அசோக் செல்வன், ஜோஜு ஜார்ஜ், ஐஸ்வர்யா லட்சுமி உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இந்த படம் கடந்த 5ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.
ஒன் லைன்
இந்த படத்தில் ஒன் லைனில் சொல்லும் அளவுக்கு கதை இல்லை என சொல்லப்படுகிறது. பொதுவாக மணிரத்னம் படங்களில் எந்த சப்தமும் இல்லாமல் மென்மையாக எடுத்திருப்பார். ஆனால் இந்த படத்தில் கத்தி, அரிவாளால் வெட்டுவது, துப்பாக்கிச் சூடு நடத்துவது என ஒரே சப்தமாக இருப்பதாக ரசிகர்கள் தெரிவித்துள்ளனர்.
அபிராமி
இந்த படத்தில் மனைவி அபிராமி இருக்கும் போது காதலி த்ரிஷாவுடனும் ரொமான்ஸ் செய்து கமல், கலக்குகிறார். மேலும் பிபி, சுகர் இருப்பது போல் பெண்கள் மீதான மோகமும் ஒரு வியாதிதான் என தனது மனைவிக்கு சொல்கிறார்.
சிம்பு நல்ல நடிப்பு
இந்த படத்தில் சிம்பு நல்ல நடிப்பு திறமையை வெளிப்படுத்தியுள்ளார். கமலுடன் அவர் வரும் காட்சிகள் அத்தனையும் ரசிக்கும்படியாக உள்ளன. கமலை தீர்த்து கட்ட திட்டம் தீட்டும் போது வில்லத்தனத்தால் சிம்பு பயமுறுத்துகிறார்.
ரொமான்ஸ்
த்ரிஷாவின் ரொமான்ஸ் காட்சிகள் நன்றாக உள்ளது. அபிராமி குடும்ப பாங்கான முகமாக உள்ளார். இரண்டாம் பாதியில் நல்ல நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். அது போல் போலீஸ் அதிகாரியாக வரும் அசோக் செல்வன், ஐஸ்வர்யா லட்சுமி, சின்னி ஜெயந்த், வையாபுரி, வடிவுக்கரசி உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
கமலுக்கு நிகரான கேரக்டர்
இந்த படத்தில் கமலுக்கு நிகரான கேரக்டரில் நடித்துள்ளவர் சிம்பு. இவர் வாங்கிய சம்பளம் குறித்து தகவல்கள் வெளியாகியுள்ளன. அதாவது தக் லைஃப் படத்தில் நடிக்க சிம்புவுக்கு ரூ 40 கோடி சம்பளமாக வழங்கப்பட்டதாம். இவர் இதுவரை நடித்த படங்களில் தக் லைஃப்பிற்கு வாங்கியதுதான் அதிகம் என்கிறார்கள்.
ரூ 12 கோடி ஊதியம்
கமலுக்கு நிகரான கேரக்டர் என்பதால் இத்தனை ஊதியம் வாங்கியுள்ளார். அது போல் இந்த படத்தில் நடித்த த்ரிஷாவுக்கு ரூ 12 கோடி ஊதியம் கொடுக்கப்பட்டதாக சொல்கிறார்கள். இதில் இந்திராணி எனும் பாடகி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
பாக்ஸ் ஆபீஸ் வசூல்
தக் லைப் படத்தின் பாக்ஸ் ஆபீஸ் வசூல் என்ன என்பதை தெரிந்து கொள்ளலாம். இந்த படத்தில் கதை எதுவுமே புதிதாக இல்லை என ரசிகர்கள் சொல்கிறார்கள். நாயகன் படத்தில் வேலு நாயக்கர் போல் இந்த தக் லைஃப்பில் ரங்கராய சக்திவேல் நாயக்கர் கதாபாத்திரம் நிற்கவில்லை என்கிறார்கள்.
3 நாளில் எத்தனை கோடி வசூல்
முதல் நாளில் தமிழில் 13 கோடி வசூலையும் தெலுங்கில் 1.5 கோடி ரூபாய் வசூலையும் பெற்றது. அது போல் இரண்டாவது நாளில் இந்தியாவில் மொத்தம் 7.15 கோடி பெற்றது. அடுத்த நாளான நேற்று ரூ 7.50 கோடி என இதுவரை இந்த படம் ரூ 30 கோடி வசூலை பெற்றுத் தந்துள்ளது. நாளுக்கு நாள் ரசிகர்கள் கூட்டம் குறைவதால் இந்த படம் ரூ 50 கோடியை வசூலிக்குமா என சந்தேகம் எழுகிறது.
-
எங்களை எப்படியாவது காப்பாத்துங்க.. அமெரிக்கா - இந்தியாவிடம் கெஞ்சும் வங்கதேசம்.. ரஷ்யா உதவுமா? -
பாஜகவுடன் கூட்டணி அமைக்கலாமா? 98 தவெக மாவட்டச் செயலாளர்கள் ஆதரவு.. விஜய் எடுக்கப்போகும் முடிவு! -
சீனா அரண்டு நிற்குது.. மொத்த டிராகனுக்கும் சவால் விடும் தமிழ்நாட்டின் குட்டி சிட்டி.. ரியல் இன்ஜின்! -
வந்தாச்சு நீண்ட காலம் காத்திருந்த நல்ல செய்தி.. H-1b விசா கட்டுப்பாடுகள் நீக்கம்? புதிய மசோதா தாக்கல் -
இந்திய கப்பலுக்கு மட்டும் வழிவிட்ட ஈரான்.. ஹார்முஸ் ஜலசந்தியை கடந்து மும்பை வந்தடைந்த கப்பல் -
இந்திய வரலாற்றில் முதல்முறை.. தலைமைத் தேர்தல் ஆணையரை நீக்கக் கோரி நாடாளுமன்றத்தில் நோட்டீஸ்! -
கையில் இவ்வளவு பெரிய.. ஆயுதத்தை வைத்துக்கொண்டுதான்.. ஈரான் இவ்வளவு நாள் சைலண்ட்டா இருந்ததா.. மாஸ் -
இந்திய கப்பல்கள் ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க அனுமதியா? ஈரான் மறுப்பு.. ஆனாலும் நடந்த ட்விஸ்ட் -
அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்.. வெயிட்டான பதவியை கொடுக்கும் எடப்பாடி -
ஏப்ரல் 20க்கு பின் தமிழக சட்டசபைத் தேர்தல்.. மே மாதத்தில் வாக்கு எண்ணிக்கை? டெல்லியில் இன்று ஆலோசனை -
ஜனநாயகன் ஓடிடி உரிமை ரத்து? விஜய்யால் மேலும் 120 கோடி ரூபாய் நஷ்டம்? கலக்கத்தில் கேவிஎன் நிறுவனம்! -
அம்பானி கொடுத்த பெரிய ஆஃபர்! சிஎஸ்கே கடைசியாக தான் சீனில் வந்தது.. சஞ்சு சாம்சன் தந்தை சொன்ன மேட்டர்












Click it and Unblock the Notifications