Thenmozhi BA Serial: வழுக்கிகிட்டே போயி ஹீரோ மேல விழுறது இங்கனக்குள்ளதான்!
சென்னை: விஜய் டிவியின் தேன்மொழி பிஏ சீரியலில் தேன்மொழி கீழே வழுக்கி விழணும் என்று, அவள் ஓர்படி தரையில் எண்ணெயை கொட்டி வச்சுட்டு தேனுண்ணு கூப்பிட தேன்மொழி, சிஸ்டர் கூப்பிட்டாங்கன்னு ஓடி வர்றா.
தரையில் இருக்கும் எண்ணெய் வழுக்கிவிட, வழுக்கிகிட்டே போயி அங்கே யதேச்சையாக வரும் ஹீரோவின் மேலே விழுகிறாள். ஹீரோ நினைச்ச மாதிரி தேன்மொழியை கட்டிக்கறான். இவளும் கட்டிக்கறா.ரெண்டு பேரும் மெய் மறந்து நிக்கறாங்க.
குடும்பமே அதை வேடிக்கைப் பார்த்து நிற்க, மாமியாருக்குத்தான் பிடிக்கலை. அருள் கையை எடுத்துவிட்டாலும் தேன்மொழி எடுப்பதாகத் தெரியவில்லை. மாமியார் அதட்டல் போட அப்போதுதான் கையை விலக்குகிறாள்.

வழுக்கிருச்சு மதர் இன் லா
என்னடி எப்போ பார்த்தாலும் என் மகனை வம்புக்கு இழுப்பதுதான் உன் வேலையா.. எதுக்குடி இங்கே வந்தேன்னு மாமியார் அதட்ட, சிஸ்டர் கூப்பிட்டாங்கன்னு வந்தேன்... வழுக்கிருச்சு மதர் இன் லா என்று சொல்கிறாள் தேன்மொழி. ஆமாண்டி தரை உனக்கு மட்டும் வழுக்கி விட்டதா.. யாருகிட்ட கதை விடறே.. என் மகனை சீண்டி விட்டு வேடிக்கை பார்க்கறதே உனக்கு வேலைன்னு சொல்லித் திட்டறாங்க.

என்ன வேடிக்கை
என்ன வேடிக்கை பார்த்துகிட்டு எல்லாரும் நிக்கறீங்க.. அருளு.. உன் ரூமுக்கு போடான்னு சொல்றாங்க. அவன் போக, தேன்மொழியும் பின்னோடு போகிறாள். எங்கே அங்கே போறே.. இங்க வான்னு கூப்பிடறாங்க மாமியார். அருள் தன்னைத்தான் கூப்பிடறாங்கன்னு வர தேனுவும் வர.. நீ எங்கேடா இங்கே வரேன்னு வடிவேலு பாணியில் கேட்க நீதானேம்மா கூப்பிட்டேன்னு கேட்கிறான். உன்னை கூப்பிடலை.. நீ உன் ரூமுக்கு போ.. ஏய் நீ உன் இடத்துக்கு போடின்னு ஆணியே புடுங்க வேணாம்னு சொல்ற மாதிரி சொல்லி அனுப்பி வைக்கறாங்க.

இவளுக்குத்தான் வழுக்குதாம்
யாருக்கும் வழுக்காத தரை, இவளுக்கு மட்டும் புதுசா வழுக்குதாம்னு திட்டிகிட்டே அதே பாதையில் நடந்து போக அவங்க வழுக்கிகிட்டே வர்றாங்க. அவங்க வீட்டுக்காரர் எதிரில் வந்து தாங்கிப் பிடிக்க இவங்களும் மெய் மறந்து நிற்க.. இருவரையும் பார்த்து மறுபடியும் குடும்பம் வேடிக்கை பார்த்து நிற்கிறது.இவங்க மாமியார் அப்பத்தத்தான் ஏய்.. வடிவு என்னடி இப்படி நிக்கறேன்னு ஒரு அதட்டல் போடறாங்க.

ரத்தமா, தக்காளி சட்னியா?
தேமொழி சொன்ன அதே டயலாக்கை இப்போ மதர் இன் லா சொல்றாங்க. இல்லை.. தரையில எண்ணெய் கொட்டி வழுக்கி விட்ருச்சுன்னு. அப்போ தேன்மொழி வந்து கேட்கறா.. என்ன மதர் இன் லா இப்போ நீங்க எப்படி வழுக்கி விழுந்தீங்க? உங்களுக்கு வந்தா ரத்தம், எனக்கு வந்தா தக்காளி சட்னியான்னு.
அதெல்லாம் இருக்கட்டும்...சினிமாவில் சீரியல்களில் மட்டும்தான் எண்ணெய் கொட்டி வழுக்கினா அந்த இடத்தில் விழாமல் வழுக்கிட்டே ரொம்பா தூரம்போயி கரெக்ட்டா ஹீரோ மார்பில் சாய்ஞ்சுடறாங்க!
-
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
அந்த பேச்சு பேசின ஆதவ் அர்ஜுனா.. வில்லிவாக்கம் சம்பவத்தில் வாய் திறக்கலயே! கப்சிப் தவெக! -
ஏப்ரல் 1ம் தேதியான இன்று சம்பளம், கடன் எதுவுமே சாத்தியமில்லை... மக்கள் அறிய வேண்டிய உண்மை -
தங்கத்தை இப்போது வாங்கலாமா? இல்லை கொஞ்சம் காத்திருக்கலாமா? ஒரே வரியில் ஆனந்த் சீனிவாசன் விளக்கம் -
அண்ணாமலை போட்ட கண்டிஷன்.. அதிர்ந்துபோன டெல்லி.. கோவை வடக்குத் தொகுதியில் எகிறும் எதிர்பார்ப்பு -
Gold Loan: தங்க நகைக் கடன் இனி இவ்வளவுதான்! ரிசர்வ் வங்கியின் புதிய விதிகள் இன்று முதல் அமல்! -
தவெக கூட்டத்தில் மதுபாட்டில் வீச்சு.. சிக்கிய 2 பேர்.. யார் இவர்கள்? போலீஸ் சொன்ன ஷாக் தகவல் -
கண் முன்னே வெடிக்கும் உலக போர்! வளைகுடா மோதலில் உள்ளே வரும் உலக நாடுகள்.. உச்சக்கட்ட பதற்றம் -
ஈரானின் புதிய சுப்ரீம் லீடரும் மரணம்? குழப்பத்தில் பொதுமக்கள்.. ரஷ்யா தரப்பு சொன்ன முக்கியமான தகவல் -
அதிமுக பாஜகவை தோற்கடிப்போம்.. அண்ணாமலையின் அன்பு கூட்டம் தடாலடி முடிவு.. அதிர்ச்சியில் டெல்லி -
வருமான வரி படிவம் வெளியீடு.. மாத சம்பளம் வாங்குவோர், சிறு வணிகர்கள்.. அறிய வேண்டியவை -
கவனம் ஈர்த்த விஜயின் TVS XL.. ஓ இதுக்குத்தானா.. இதுலையும் ரஜினியை பார்த்து காப்பியா?












Click it and Unblock the Notifications