பெட்ரோல் பங்க் திறக்குறதுக்குகூட என்னை கூப்பிடறீங்களே? ஹனி ரோஸ் நறுக்.. ஹனிரோஸ்க்கு இப்படியொரு ஆசையா
சென்னை: போலீஸ் ஆபீசஸராக நடிக்க வேண்டும் என்பது தன்னுடைய ஆசை என்றும், ஆக்ஷன் படங்களிலும் நடிக்க விருப்பமாக இருப்பதாகவும் பிரபல நடிகை ஹனிரோஸ் கூறியிருக்கிறார்.. கடைத்திறப்பு விழாக்களுக்கு தன்னை அழைக்கப்படுவது குறித்தும், பேட்டி ஒன்றில் மனம் திறந்து தெரிவித்துள்ளார் ஹனிரோஸ்.
கேரளா மாநிலத்தை சேர்ந்தவர் நடிகை ஹனி ரோஸ். தன்னுடைய 14வது வயதிலேயே திரை துறையில் அறிமுகமானவர். "பாய் பிரெண்ட்" என்கிற மலையாள படத்தில் அறிமுகமாகி கேரள மக்களின் கவனத்தை திருப்பியவர் ஹனி ரோஸ்.. தன்னுடைய 16 வயதில், முதல் கனவே என்கிற தமிழ் படம் மூலம் விக்ராந்துக்கு ஜோடியாக ஹீரோயினாக அறிமுகமானார். "சிங்கம்புலி", "கந்தர்வன்"உட்பட சில படங்களில் நடித்துள்ளார்.

மலையாளம், தமிழ், தெலுங்கு, கன்னடம் போன்ற பிறமொழி படங்களிலும் ஹனி ரோஸ் நடித்து வருகிறார்... தற்போது "ரேச்சல்" என்ற மலையாளப் படத்தில் நடித்துள்ளார். பல படங்களில் இவர் நடித்து வந்தாலும், போதிய வரவேற்பு இவரது படங்களுக்கு கிடைக்கவில்லை.
புதிய கடைகள்: இதனால், புதிதாக திறக்கப்படும் பெரிய கடைகளின் திறப்பு விழாவுக்கு, கெஸ்டாக சென்று கோடிக்கணக்கான பணத்தை சம்பாதித்து வருகிறார். கடை திறப்பு விழாக்களுக்கு, ஹனி ரோஸ் அணிந்து வரும் டிரஸ்களை பார்ப்பதற்கென்றே சோஷியல் மீடியாவில் மிகப்பெரிய ரசிகர் கூட்டம் உள்ளது.
இந்நிலையில், மலையாள நடிகர் சங்கத்தின் அதிகாரப்பூர்வ யூடியூப் சேனலுக்கு ஹனி ரோஸ் பேட்டி ஒன்றை தந்துள்ளார்.. அந்த பேட்டியில் அவர் சொல்லிஉள்ளதாவது:
கல்யாணம்: "எல்லாருமே என்னுடைய அழகு பற்றியும், கல்யாணம் பற்றியும் கேட்கிறார்கள்... நான் நல்ல எண்ணத்துடன் இருக்கிறேன். அழகு என்பது நல்ல மனதின் வெளிப்பாடு... எனக்கு காதலர் ஒருவர் இருந்தார். ஆனால் இப்போது இல்லை.
சரியான நபர் கிடைக்கும்போது என்னுடைய திருமணம் நடக்கும். சரியான நபர் என்றால் எனக்கு பொருத்தமானவராக அமைய வேண்டும்.. ஒருவரைத் தெரிந்து கொண்டு அவரிடம் சிறிது நேரம் பேசினால் உள்ளுக்குள் ஒரு நடுக்கத்தை உணர வேண்டும். அப்படி இதுவரை யாரிடமும் எனக்கு ஏற்படவில்லை. அந்த சரியான நபரை இன்னும் நான் காணவில்லை. அவரை என்னுடைய குடும்பத்தினர் பார்த்தாலும் நல்லதுதான்.
அதிகமான கடை திறப்பு விழாக்களில் என்னை பார்ப்பதாகச் சொல்கிறார்கள்.. அதிகமாக நான் கலந்து கொள்வதில்லை.. குறைவாகவே கடைத்திறப்பு விழாக்களில் கலந்து கொள்கிறேன்.
கடைத்திறப்புகள்: "முதல் படமான "பாய் ஃபிரண்ட்" படத்தில் நடித்த காலத்திலிருந்து, திறப்பு விழா நிகழ்ச்சிகளுக்கு நான் சென்று வருகிறேன். ஆனால், கொரோனா காலத்தில்தான் நான் திறப்பு விழாக்களுக்குச் செல்வதை மக்கள் கவனித்தார்கள்.. இதற்கெல்லாம் காரணம், ஆன்லைன் மீடியாக்களின் வரவுதான்.. கொரோனாவுக்கு பிறகு யூ-டியூப் சேனல்கள் மூலம் என்னுடைய திறப்பு விழா நிகழ்ச்சிகள் வைரலாகி வருகின்றன. அதனால்தான் நான் செல்லும் நிகழ்ச்சிகளில் மக்கள் அதிகமாக கூடுகிறார்கள்.
கேரளாவில், எந்த கடைகள் என்றாலும், சினிமா பிரபலங்களை அழைத்துதான் திறக்கப்படுகின்றன. தெலுங்கு பேசும் மாநிலங்களில் நகை மற்றும் ஜவுளி கடைகள் மட்டுமே அப்படித்தான் திறக்கப்படுகின்றன. ஹோட்டல்கள் உள்ளிட்ட மற்ற கடை திறப்புக்கு அரிதாகவே அழைக்கப்படுகிறார்கள்.
திறப்பு விழா: கேரள மாநிலத்தில் மெடிக்கல் ஸ்டோர் திறப்புவிழாவுக்கு வரை நான் சென்றுள்ளேன். பெட்ரோல் பங்க் திறப்பதற்கு கூட எனக்கு அழைப்பு வந்தது. பெட்ரோல் பங்க் திறப்பதற்கெல்லாம் நடிகைகளை ஏன் அழைக்கிறார்கள் என்று எனக்கு புரியவில்லை. ஆனால், அந்த திறப்புவிழா பிறகு நடைபெறவில்லை.
சோஷியல் மீடியாவில் வரும் எதிர்மறையான கருத்துகள் என்னை எப்போதுமே காயப்படுத்துவதில்லை. அதுபற்றி நினைத்துக்கொண்டே இருந்தால், நமக்குத்தான் நிம்மதி போய்விடும். அதனால் அதைக்கண்டுகொள்வதில்லை.
நைட் ஷோ: நைட் ஷோ பார்க்கும் பழக்கம் இருப்பதால், காலையில் தூங்கி எழுவதற்கு 10.30 மணி ஆயிடும்.. அதற்கு பிறகு ஜிம்மில் உடற்பயிற்சியில் ஈடுபடுவேன். பள்ளி படிக்கும் காலத்தில் நாடகத்தில் நடித்திருக்கிறேன்.. பிறகுதான் எனக்கு நடிப்பின்மீது ஆர்வம் ஏற்பட்டது.
நான் 7-ம் வகுப்பு படித்தபோது, எங்கள் ஊரான தொடுபுழாவில் "மூலமற்றம்" என்ற படத்தின் சினிமா ஷூட்டிங் நடந்தது.. அந்த ஷூட்டிங் பார்ப்பதற்காக நான் சென்றேன்.. அப்போது அந்த படத்தின் கன்ட்ரோலர் பொறுப்பில் இருந்த ஒருவர் என்னிடம், "நீ பார்க்க ரொம்ப அழகாக இருக்கே.. சினிமாவில் நடிக்க வர்றியா?" என்று கேட்டார்.
இதுதான் ஆசை: அதன்பிறகு 10-ம் வகுப்பு படித்தபோது முதல் சினிமாவில் நடித்தேன். ஆனால், போலீஸ் ஆபீசராக நடிக்க வேண்டும் என்பது என்னுடைய ஆசை.. ஆக்ஷன் படங்களிலும் நடிக்க விருப்பமாக இருக்கிறேன்" என்று ஹனிரோஸ் அந்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications