சிவகார்த்திகேயன் சம்பள விஷயத்தில் இப்படியா? தமிழ் சினிமாவில் நல்ல மாற்றம்: திருப்பூர் சுப்பிரமணியம்
சென்னை: தியேட்டர்களில் வெளியாகும் படங்கள் நன்றாக ஓடுவதை வைத்தும், அங்கு வசூலாவதை வைத்தும்தான் ஓடிடியில் அப்படங்களை வாங்குகிறார்கள்.. இதனால் தயாரிப்பாளர்களுக்கும் ஓடிடி, சாட்டிலைட்களிலிருந்து வருமானம் சரியாக வருவதில்லை.. தியேட்டர்களிலிருந்தும் பணம் வருவதும் குறைந்துவிட்டது" என்று இன்றைய தமிழ் சினிமாவின் நிலைமை, சூழல், சிக்கல்கள் குறித்து திரையரங்கு உரிமையாளர்கள் சங்கத் தலைவர் பேட்டியொன்றில் விவரித்துள்ளார்.
Tourung Talkies யூடியூப் சேனலுக்கு தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர்கள் சங்கத் தலைவர் திருப்பூர் சுப்பிரமணியம் பேட்டி ஒன்றை தந்துள்ளார்.

அதில், "இந்த 2025ம் வருடம் வருடம் இதுவரை 187 படங்கள் வெளிவந்திருக்கிறது.. இதில் 18 சதவீதம் கூட வெற்றி கிடையாது.. இதை எப்படி பார்ப்பீர்கள்? முதல் வரிசை நடிகர்களின் படங்கள் கூடசரியாக ஓடுவதில்லையே? வெளிவராமல் முடங்கி போயிருக்கும் படங்களை வெளிக்கொணர நடவடிக்கை எடுத்துள்ளீர்களா? தற்போது தமிழ் சினிமா எப்படி உள்ளது?" என்றெல்லாம் சினிமா தயாரிப்பாளரும், மூத்த பத்திரிகையாளருமான சித்ரா லட்சுமணன் கேள்வி எழுப்பினார்.
திருப்பூர் சுப்பிரமணியம்
அதற்கு திருப்பூர் சுப்பிரமணியம் மிக விரிவான மற்றும் ஆழமான தகவலை அளித்துள்ளார்.. அதன் சுருக்கம்தான் இது:
"எல்லா காலகட்டத்திலும் தமிழ் சினிமா இப்படி இருந்தது கிடையாது. இந்த வருடம்போல எந்த வருடத்தையும் நான் பார்த்ததும் இல்லை.. இதற்கு காரணம், பெரிய பெரிய நடிகர்களின் படங்கள் எல்லாம் சுமார் படங்களாக போய்விட்டன. சாதாரண படங்கள் நான்கைந்து ஓடியது. ஆனால் இது சினிமாவுக்கு போதாது. கொரோனாவுக்கு பிறகு சினிமா மந்தமாக உள்ளது இந்த வருடம்தான்..
தயாரிப்பு செலவுகள்
தயாரிப்பு செலவுகள், நடிகர், நடிகைகளின் சம்பளம் எல்லாமே விண்ணை முட்டும் அளவுக்கு போய்விட்டது. அதிலும் ஓடிடி பிளாட்பாரத்தில் படங்களை வாங்க ஆரம்பித்துமே, நடிகர்கள் தங்கள் சம்பளங்களை கன்னாபின்னாவென்று உயர்த்தி விட்டார்கள்.
2024 நவம்பர், டிசம்பர் ஓடிடி சேட்டிலைட் என எல்லாருமே கதவை அடைத்துவிட்டார்கள். இதனால் பெரிய சம்பளம் வாங்கிய பெரிய நடிகர்களின் படங்களையே வெளியிட முடியவில்லை.. கிட்டத்தட்ட 10 பெரிய நடிகர்களின் படங்கள் தற்போது வெளியிட முடியாமல் உள்ளது. ஓடிடி பிளாட்பார்ம்கள் வந்ததிலிருந்தே, சேட்டிலைட் சேனல்களுக்கு பாதிப்பாகிவிட்டது.
ஓடிடி, சாட்டிலைட்
இரண்டரை மணி நேரம் படங்களை விளம்பரங்களால் 4, 5 மணி கூட பொதுமக்கள் உட்கார்ந்து டிவியில் பார்த்து வந்த சூழலில், ஓடிடியில் விளம்பரமேயில்லாமல், அதுவும் நினைத்த நேரத்தில் பார்ப்பதில் ஆர்வம் காட்டுகிறார்கள்.
விலைக்கு படங்களை வாங்கி கொண்டிருந்த சேட்டிலைட் சேனல்கள் அனைத்துமே தற்போது படங்களை வாங்க தயங்குகிறார்கள்.. முன்பெல்லாம் 20 லட்சத்துக்கு படத்தை வாங்கி கொண்டிருந்தவர்கள், 2 லட்சத்துக்குகூட இப்போது கேட்டு வாங்குவதில்லை. அடுத்ததாக, ஓடிடியிலும் படங்களை வாங்க யோசிக்கிறார்கள்..
தியேட்டர்களில் நன்றாக ஓடுவதை வைத்து, அங்கு வசூலாவதை வைத்துதான் ஓடிடியில் வாங்குகிறார்கள்.. இதனால் தயாரிப்பாளர்களுக்கும் ஓடிடி, சாட்டிலைட்களிலிருந்து வருமானம் வரவில்லை. தியேட்டர்களிலிருந்தும் பணம் வருவதும் குறைந்துவிட்டது.
முடங்கிய 10 படங்கள்
வெளிவராமல் 10 படங்கள் முடங்கியிருப்பதால், அவைகளை வெளிக்கொண்டு வரும் முயற்சியில் இறங்கியிருக்கிறேன்.. அந்த 10 படங்களில் ஐந்தாறு படங்கள் தரமானதானவே உள்ளன,.. இந்த படங்களை வெளியிட நடிகர்கள் பெரிய மனசுடன் முன்வரவேண்டும். மொத்த பணத்தையும் தனக்கு தந்தால்தான் படம் ரிலீஸ் என்று செக் வைப்பதால்தான், படங்கள் முடங்கிவிடுகின்றன..
இப்போது நிலைமை என்னவென்றால், 2025 பிற்பகுதியில், எல்லா நடிகர்களும் பர்சன்டேஜ் கேட்கும் நிலைமைக்கு வந்துவிட்டார்கள்.. டாப் நடிகர்களே இப்படி இறங்கி வந்திருப்பது, நல்ல மாற்றத்திற்கான அடையாளம்.. எனவே இனிமேல் தயாரிப்பாளர்கள் ஹீரோவுக்கான சம்பளத்தை தவிர்த்து, படத்திற்கான மற்ற செலவுகளை முதலீடுகளை செய்தாலே போதும்..
விஷால் சம்பளம்
சிம்பு, தனுஷ், விஷால், சிவகார்த்திகேயன் என எல்லாருமே சம்பள விஷயத்தில் பர்சன்டேஜூக்கு வந்துவிட்டார்.. இதில் கமல் சார், சொந்த படம் எடுப்பதுகூட, பர்சன்டேஜூக்கு வந்துவிட்டதற்கான அடையாளமாக பார்க்கப்படுகிறது..
எனவே தற்சமயம் ஏற்பட்டுள்ள இந்த மாற்றமானது, வரக்கூடிய 2026, 2027ம் ஆண்டுகளில் இனி வரக்கூடிய நாட்களில் தமிழ் சினிமா மிக ஆரோக்கியமானதாக்கும் என்று நம்பப்படுகிறது" என்றெல்லாம் தெரிவித்துள்ளார்.
-
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை!












Click it and Unblock the Notifications