விடுதலை 2 நடிகர் சூரியின் சீக்ரெட்! இது சிவகுமார் மகன் சூர்யாவுக்கு தெரியுமா? நெகிழும் ரஜினி ஃபேன்ஸ்

Subscribe to Oneindia Tamil

சென்னை: காமெடி நடிகர் பரோட்டா சூரி குறித்து ஒரு ரகசியம் நடிகர் சூர்யாவுக்கு தெரியுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. மேலும் அந்த சீக்ரெட்டால் ரஜினி ரசிகர்கள் ஆச்சரியத்தில் மூழ்கியுள்ளனராம்.

இதுகுறித்து செல்வன் அன்பு என்பவர் தனது பேஸ்புக் பதிவில் கூறியிருப்பதாவது: பொதுவா ஒரு ஹீரோவோட பெயரையோ, அடைமொழியையோ தன் பேரோடு சேர்த்துக் கொண்டு அதிக ரசிகர்களின் பார்வையை தன் பக்கம் திருப்ப முயற்சி செய்வதுண்டு.

television rajinikanth soori

ரஜினியோட விஷயத்தில் நிறைய உண்டு. இப்போ ரஜினி 'தளபதி' படத்தில் நடித்ததும் விஜய் 'இளைய தளபதி'ன்னு தன் பெயருக்கு முன்னால் போட்டுக்கொண்டதெல்லாம் வரலாறு. 'சின்ன தளபதி', 'புரட்சி தளபதி'யெல்லாம் கூட வந்தாச்சு.

ரஜினிகாந்த் என்கிற பெயர் கூட ஒரு ஹீரோவுக்கான ஸிம்பலா மாறிடிச்சி. 'காந்த்' என்கிற பெயர் சேர்த்தால் ரசிகர்கள் நம்மையும் ஏற்றுக் கொள்வார்கள்னு நம்பியதெல்லாம் உண்டு. விஜயகாந்த், நளினிகாந்த், சூர்யகாந்த், ராஜ்காந்த் அப்படி காந்த்கள் ஏராளமாக 80களின் தொடக்கத்தில் வந்தனர்.

ரஜினியின் படத் தலைப்புகள் திரும்ப வந்தது நமக்குத் தெரியும். ஆனா ஒரு கேரக்டர் பெயர் சக்ஸஸ் ஆனது தான் ஆச்சர்யம். மூன்று முகம் 'அலெக்ஸ் பாண்டியன்' பெயர் ஹிட்டானதும் திருமுருகன் என்கிற நடிகர் 'அலெக்ஸ் பாண்டியன்' என தன் பெயரையே மாற்றிக் கொண்டார். ஆண்களை நம்பாதே படத்தையும் இயக்கினார்.

அலெக்ஸ் பாண்டியன்னு சினிமா..டெலக்ஸ் பாண்டியன்னு வடிவேலோட ரோல் எல்லாம் திரும்பிப் பார்க்க வைத்தது. ராமன் அப்படின்னு ஒரு மதுரைக்கார ரஜினி ரசிகர் இருந்தார். ரசிகர் கூட கிடையாது. ரஜினி பைத்தியம்னே சொல்லலாம். முதல் ஷோ ரஜினி படமெல்லாம் போய் பார்த்து விசிலடிச்சி, டான்ஸ் ஆடி என்ஜாய் செய்வது அவருக்கு ஒரு போதை. ஒவ்வொரு ரஜினி பட ரிலீசும் அவருக்கு ஒரு பண்டிகை.

தளபதி படம் ரிலீசாகிறது. மம்முட்டி, மணிரத்னம் கூட ரஜினி படம். ராமனுக்கு கேட்க வேண்டுமா. முட்டி மோதி தியேட்டருக்குள்ளே போய் படம் போட்டதும் சும்மா குதி குதின்னு ஆடி தீர்த்திருக்கிறார். கையில் கொண்டு போன பேப்பரெல்லாம் வீசி தூக்கிப் போட்டு தீர்ந்ததும் சட்டையை கழட்டி சுழட்டி வீசி விட்டார். சட்டையை கந்தலாக்கிட்டாங்க மற்ற ரசிகர்கள்.

அப்படி தளபதி பார்த்த ராமனுக்கு அதில் ரஜினி நடித்த 'சூர்யா' கேரக்டர் ரொம்பப் பிடிச்சிடுச்சி. தன் பெயரையும் 'சூர்யா'ன்னு வச்சிக்கிட்டார். அவர் அம்மாவிடம் போய் "அம்மா.. இன்னையிலயிருந்து என் பெயர் சூர்யா. சூர்யான்னு தான் கூப்பிடணும்"னு சொல்லி இருக்கிறார். அந்த அம்மாவுக்கு ஒண்ணும் புரியல.

அட பைத்தியக்காரப்பயலேன்னு கட்டையை எடுத்துக் கொண்டு அடிக்க வந்திருக்காங்க. ஏன்னா ட்வின்சுக்கு ராமன், லக்ஷ்மணன்னு பெயர் வைப்பது ஒரு மரபு. அப்படி சினிமா ஆசையில் சென்னை வந்த ராமன் படங்களில் நடிக்க முயற்சிக்கிறார். சின்னதா ரோல் கிடைக்குது. இப்போ பெயர் போட வேண்டும். சூர்யான்னு பெயர் சொன்னதால அதை டைட்டிலில் போடலாம்னு பார்த்தா சிவக்குமார் மகன் சரவணன் 'சூர்யா'ன்னு வந்துட்டாரு. ராமன் சூர்யாவை சுருக்கி 'சூரி'ன்னு வச்சிக்கிட்டார்.

இன்னைக்கு ரொம்ப ஆவலா ரசிகர் எதிர்பார்க்கும் 'விடுதலை-2' அந்த ரஜினி ரசிகனின் படம். நடிகர் சூரி தான் அந்த ராமன். ஒரு ரஜினி பட கேரக்டர் நேம் அவர் வாழ்க்கையையே மாத்திடுச்சி இல்ல... மேஜர் சந்திரகாந்த் என்கிற நாடகத்தின், சினிமாவின் கேரக்டர் பெயர் 'ரஜினிகாந்த்' சிவாஜிராவோட வாழ்க்கையை மாற்றியது மாதிரி. அற்புதம்.... இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+