Vishal: விஷாலுக்கு டபுள் டமாகா! ஆகஸ்ட் 29ஆம் தேதி தன்ஷிகா செலக்ட் செய்தது ஏன்? சூப்பர் முகூர்த்தம்!
சென்னை: சாய் தன்ஷிகா, நடிகர் விஷாலின் திருமண தேதி ஆகஸ்ட் 29ஆம் தேதி என தேர்வு செய்யப்பட்டது எப்படி என்பதை தெரிந்து கொள்ளலாம். மேலும் விஷாலுக்கு எப்படி அன்றைய தினம் இரட்டிப்பு மகிழ்ச்சியை கொடுக்கும் என்பதையும் பார்க்கலாம்.

வீட்டை கட்டி பார், கல்யாணத்தை செய்து பார் என்பார்கள். இந்த விஷயம் விஷாலுக்கு எப்படி நடக்கிறது என்றால் நடிகர் சங்க கட்டடத்தை கட்டி பார், கல்யாணத்தை செய்து பார் என்று சொல்லும் வகையில் உள்ளது.
விஷால், நடிகர் சங்க பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்பட்டதுமே நடிகர் சங்கத்திற்கு கட்டடம் கட்ட விஜயகாந்த் அரும்பாடுபட்டார். தற்போது அந்த கட்டட பணிகள் முடிந்து திறப்பு விழா நடந்ததும்தான் எனக்கு திருமணம் நடக்கும் என சொன்னார்.
3 ஆண்டுகள்
இந்த கட்டட பணிகள் 3 ஆண்டுகளில் முடியும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 9 ஆண்டுகள் ஆகிவிட்டது. தற்போது அந்த கட்டடம் இறுதி கட்ட பணிகளில் உள்ளன. இந்த கட்டட பணிகளை நடிகர் சங்கத்தின் பொருளாளர் என்ற முறையில் நடிகர் கார்த்திதான் பார்த்துக் கொண்டிருந்தார்.
விஷாலுக்கு பெண்
தற்போது விஷாலுக்கு பெண்ணும் கிடைத்து திருமணமும் ஃபிக்ஸ் ஆனதால் இனி கட்டடம் கட்டி அங்கேயே உட்கார போவதாகவும் விஷால் நேற்று நடந்த யோகிடா விழாவில் தெரிவித்திருந்தார்.
யோகிடா பட விழா
இந்த யோகிடா விழாவில் வைத்துதான் விஷாலுக்கும் தன்ஷிகாவுக்கும் எப்போது திருமணம் என்ற தகவல் வெளியானது. தன்ஷிகா பேசுகையில் எனக்கும் விஷாலுக்கும் ஆகஸ்ட் 29 ஆம் தேதி திருமணம் நடைபெறும் என தெரிவித்திருந்தார்.
விஷால் திருமணம்
விஷாலும் கடந்த இரு தினங்களுக்கு முன்பு திருமணம் குறித்து அறிவித்த போது, எனக்கு பெண் பார்த்தாச்சு, காதல் திருமணம்தான். 4 மாதத்தில் திருமணம். நடிகர் சங்க கட்டடம் ஆகஸ்ட் 15 ஆம் தேதி திறக்கப்படுகிறது. அதன் பிறகு அடுத்த முகூர்த்தத்தில் ஆகஸ்ட் அல்லது செப்டம்பர் மாதத்தில் திருமணம் நடைபெறலாம். இல்லாவிட்டால் ஆகஸ்ட் 29ஆம் தேதி கூட எனக்கு திருமணம் நடக்கலாம் என ட்விஸ்ட் வைத்திருந்தார்.
தன்ஷிகா விஷால்
இதனால் தன்ஷிகாவும் விஷாலும் ஏன் ஆகஸ்ட் 29 என அறிவித்தார்கள் என்ற கேள்வி எழுந்தது. அன்றைய தினம் விஷாலுக்கு பிறந்தநாள் வருகிறது. இத்தனை நாளாக பிறந்தநாளை நண்பர்கள், குடும்பத்தினர், ரசிகர்களுடன் கொண்டாடிய நிலையில் இனி அவருக்கு திருமண நாளும் பிறந்தநாளும் ஒரே நாள் என்பதால் டபுள் கொண்டாட்டத்தில் இருப்பார்.
பிறந்தநாள்
ஆகஸ்ட் 29 விஷாலின் பிறந்தநாளாக இருந்தாலும் போகிற போக்கில் அதை அவர் அறிவிக்கவில்லை. அன்று நல்ல நாள் பார்த்துள்ளனர். இவர்களது அதிர்ஷ்டம் பிறந்தநாள் அன்று சுப முகூர்த்த தினமாக உள்ளது.
சஷ்டி விரதம்
ஆம்! ஆகஸ்ட் 29 ஆம் தேதி சஷ்டி விரதம், சுப முகூர்த்தம். மேலும் வளர்பிறையும் கூட சுவாசி நட்சத்திரத்தில், ஷஷ்டி திதியில் இவர்களுக்கு திருமணம் நடைபெறுகிறது. வெள்ளிக்கிழமை, நல்ல நேரம் காலை 9. 15 மணி முதல் 10.15 மணி வரையாகும்.
நட்சத்திரம் என்ன?
விஷால் சதய நட்சத்திரம், கும்ப ராசி, துலாம் லக்னத்தில் பிறந்ததாக சொல்லப்படுகிறது. இவருடைய நட்சத்திரம் சதயம் என்பதால் ஆகஸ்ட் 29-இல் சந்திராஷ்டமும் இல்லை. அவர் ஆகஸ் 29, 1977 இல் பிறந்தார். வரும் ஆகஸ்ட் 29ஆம் தேதி கும்ப ராசிக்கு நிம்மதி என குறிப்பிடப்பட்டுள்ளது. பல்வேறு ஏமாற்றங்களுக்கு மத்தியில் தனது பிறந்தநாளன்று திருமணம் செய்து கொள்வதால் விஷாலுக்கு மண வாழ்க்கை நல்லபடியாக அமைய வாழ்த்துகிறோம். விஷால்- தன்ஷிகா ஜோடி பொருத்தம் எப்படி இருக்கிறது என சொல்லுங்கள்.
-
முதல்வர் விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் இயக்கிய சிக்மா படம் எப்போது ரிலீஸ்? ஜெயிப்பாரா இந்த ஜூனியர்? -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்?












Click it and Unblock the Notifications