கருப்பு கண்ணம்மாவைப் பார்த்து நிச்சயதார்த்தம் கேன்சல்னு சொல்றதா.. அக்கிரமமா இருக்கே!

Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜய் டிவியின் பாரதி கண்ணம்மா சீரியலில் கண்ணம்மா கருப்பா இருக்கறதுனால யாருக்குமே புடிக்கலை. தவிர சித்தி கொடுமை வேற..சித்திக்கு பிறந்த அஞ்சலி ரொம்ப அழகு

அழகா இருக்க அஞ்சலிக்கு பணக்கார இடத்துல மாப்பிள்ளை தேடி வர்றான். அவன்தான் அகிலன். அகிலனின் அம்மாவுக்கு கறுப்புன்னா புடிக்காது. தன் மகள் வயித்து பேத்தி கருப்புன்னு அவளை கூட கண்ணால பார்க்கறதில்லைன்னா பாருங்களேன்.

how can say engagement is cancelled

இந்த சமயத்துலதான் அஞ்சலி நிச்சயதார்த்தம் நடக்கறப்போ கண்ணம்மா உங்க வீட்டு வேலைக்காரிதானே.. அவளை விட்டுட்டு வாங்கன்னு சொல்லிடறாங்க பணக்கார சம்பந்தி. கண்ணம்மாகிட்ட சொல்லாம அவளை வந்து அழைச்சுட்டு போறோம்னு சொல்லிட்டு போயிடறாங்க.

கண்ணம்மா வருவாங்க வருவாங்கன்னு பார்த்து, கடைசியில தானே கல்யாண மண்டபத்துக்கு கிளம்பிடறா. சம்பந்தி அம்மாவுக்கு கோவம் வந்து வேலைக்காரி இங்க எதுக்கு வந்தா, இந்த சம்பந்தமே வேணாம்னு கத்தறாங்க.

how can say engagement is cancelled

அப்போதான் கண்ணம்மா வேலைக்காரி இல்லை, முதல் தாரத்து பொண்ணுன்னு தெரிய வருது. இருந்தாலும், இவளை வெளியில அனுப்புங்கன்னு சொல்றாங்க. கண்ணம்மா அழுதுகிட்டே வெளியில போறா. ஒரு வழியா நிச்சயதார்த்தம் நல்லபடியா நடக்குது.

வீட்டுல அஞ்சலி அகிலனின் அண்ணன் பாரதியின் போட்டோவை போனில் வச்சுக்கிட்டு பார்த்து ரசிக்கறா. அதை ஊரில் இருந்து வந்த அஞ்சலியின் பாட்டி பார்த்துட்டு, என்னடி, கட்டிக்க போறது ஒருத்தனை, போனில் அவன் அண்ணன் போட்டோவை வச்சு பார்த்துகிட்டு இருக்கேன்னு சொல்ல எல்லாரும் அதிர்ச்சியாகிடறாங்க.

how can say engagement is cancelled

ஒரு நிமிஷம் அதிர்ந்து போன அஞ்சலி, இல்லை பாட்டி பாரு நிச்சயதார்த்த படங்களை பார்த்துகிட்டு இருந்தேன். அதுல இந்த போட்டோவும் இருந்துச்சு.. பாரு உன் போட்டோ கூட இருக்குன்னு சமாளிக்கறா.

அப்புறம் சொல்றா...தம்பி பொண்டாட்டியை அண்ணன் வண்டியில அழைச்சுட்டு போயி டிராப் பண்றதில்லையா... இதுல ஒண்ணும் தப்பு இல்லை பாட்டின்னு அஞ்சலி சொல்ல, அப்படி எல்லாம் இருக்க கூடாது அஞ்சலி.. இதெல்லாம் தப்பு..ஆமாம்.. சொல்லிப்புட்டேன்னு பாட்டி சொல்றாங்க.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+