Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

2 எழுத்து நடிகை.. யாரந்த அரசியல்வாதி? உதய சந்திரிகா பிரபலமாக மாறியது இப்படித்தான்.. பிரபலம் பளிச்

Subscribe to Oneindia Tamil

சென்னை: நடிகை ராதா தமிழ் சினிமாவில் நுழைந்து, முன்னணி நடிகையானது எப்படி என்பது குறித்தும், சித்ரா லட்சுமணனை நடிகை ராதாவுக்கு மேனேஜராக பாரதிராஜா நியமித்தது குறித்தும் விலாவரியாக தன்னுடைய பேட்டியில் கூறியிருக்கிறார் மூத்த பத்திரிகையாளர் தமிழா தமிழா பாண்டியன்.

Kingwoods News யூடியூப் சேனலுக்கு மூத்த பத்திரிகையாளர் தமிழா தமிழா பாண்டியன் பேட்டி ஒன்றை தந்துள்ளார்.. அந்த பேட்டியில், நடிகைகள் அம்பிகா, ராதா இருவருமே எப்படி திரைத்துறையில் அசுர வளர்ச்சி பெற்றார்கள்? என்பது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.

television radha bharathiraja

அதற்கு பாண்டியன் பதிலளிக்கும்போது, "அலைகள் ஓய்வதில்லை படத்தில் கார்த்தியை ஹீரோவாக புக் செய்கிறார் பாரதிராஜா.. அதேபோல, தமிழ்நாட்டு முகத்தில் கதாநாயகியை தேடுகிறார்.. அப்போது, தன்னுடைய தங்கை மல்லிகாவை பற்றி பாரதிராஜாவிடம் சொல்கிறார் அம்பிகா.

உடனே, மல்லிகாவை பார்த்து மேக்கப் டெஸ்ட் எடுப்பதற்காக, திருவனந்தபுரத்திற்கு கிளம்பி சென்றார் பாரதிராஜா. ஆனால், பிறகுதான் தெரிந்தது, மல்லிகாவின் முகம், கேரளா முகமாகவே இருப்பதால், அலைகள் ஓய்வதில்லை படத்துக்கு அவர் சரிவர மாட்டார் என்று ஒதுக்கிவிட்டார்.

அம்பிகா: அம்பிகாவுக்கு இன்னொரு தங்கை இருப்பதாக சொல்லவும், மறுபடியும் , திருவனந்தபுரம் செல்கிறார் பாரதிராஜா.. 9வது படிக்கும் 14வயதுடைய உதயசந்திரிகாவை சந்திக்கிறார்.. 8 கோடி பேர் உள்ள தமிழ்நாட்டில் தமிழச்சியே கிடைக்காமல், திருவனந்தபுரம் சென்றார் பாரதிராஜா.. "என் இனிய தமிழ் மக்களே" என்று படத்துக்கு படம் சொல்விட்டு, கேரளாவிலிருந்து ஹீரோயினை அழைத்து வருகிறார். உதயசந்திரிகாவுக்கு ராதா என்று பெயர் வைக்கிறார்.. மலையாள மக்களும் இந்த பெயரை ஏற்றுக் கொண்டார்கள்.

தமிழ் வசனத்தை, மலையாளத்தில் எழுதி படிக்கிறார் ராதா.. பல முன்னணி நடிகைகளே, கமலுடன் நடிக்க போட்டி போட்டபோது, டிக் டிக் டிக் என்ற பாரதிராஜாவின் படத்தில் ராதாவுக்கு எளிதில் வாய்ப்பு கிடைக்கிறது.. பிறகு, பாரதிராஜாவே பெருமைப்படுகிற அளவுக்கு பிறவி நடிகையாக மாறினார்.. 100 படங்களுக்கு மேல முன்னணி நடிகர்களுடன் நடித்தார் ராதா..

நடிகை ராதா: என்.டி.ராமராவ், கிருஷ்ணா, சோபன்பாபு, நாகேஸ்வரராவ், சிரஞ்சீவி, பாலையா என தெலுங்கு முன்னணி ஹீரோக்கள் அத்தனை பேரும் ராதாவின் கால்ஷீட்டுக்காக காத்திருக்க வேண்டிய நிலைமை தெலுங்கில் உருவானது. இதுபோலவே, தமிழ் முன்னணி ஹீரோக்களும் ராதாவின் கால்ஷீட்டுக்காக காத்திருக்க வேண்டிய நிலைமை ஏற்பட்டது. அப்போதுதான், தமிழ், தெலுங்கு என 2 திரையுலகிலும், ராதாவின் கால்ஷீட்டை பார்ப்பதற்காக, சித்ரா லட்சுமணனை சரஸம்மாவே நேரடியாக நியமிக்கிறார்.

சித்ரா லட்சுமணனை பொறுத்தவரை, சொதப்பலே இல்லாமல் கால்ஷீட்களை கவனித்து வந்தார்.. இது அப்போது மிகப்பெரிய விஷயம்.. இறுதியில் ராதாவுக்கு, சித்ரா லட்சுமணனை மேனேஜராகவே நியமித்தார் பாரதிராஜா. இதையடுத்து, ராதாவின் கால்ஷீட், பண விவகாரம், பாதுகாப்பு என அனைத்தையும் கவனிக்கக்கூடியவரானார் சித்ரா லட்சுமணன்.

சித்ரா லட்சுமணன்: ஒருகட்டத்தில் சித்ரா லட்சுமணனை, ராதா திருமணம் செய்ய போவதாகவும், சித்ரா லட்சுமணன், ராதா இருவரும் திருமணம் செய்து கொண்டு, ஓடிப்போக போகிறார்கள் என்றும் பத்திரிகைகளில் அப்போது கிசுகிசுக்கள் வெளியாகின.. இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த சரசம்மாவும், அம்பிகாவும், பாரதிராஜாவை சந்தித்து, சித்ரா லட்சுமணனை மேனேஜர் பொறுப்பிலிருந்து நீக்குமாறு சொன்னார்கள்.

ஆனால் ராதாவோ, சித்ரா லட்சுமணனை வேலையை விட்டு நிறுத்தக்கூடாது என்றும், அவரை வேலையை விட்டு நிறுத்தினால், தான் சினிமாவை விட்டே போய்விடுவேன், அவரை தவிர, வேறு யாராலும் தனக்கு சொதப்பல் இல்லாமல் கால்ஷீட் பார்க்க வராது என்றும் ராதா கறாராக சொன்னார்.

பாதுகாப்பு: உண்மையிலேயே, அந்த அளவுக்கு தமிழ், தெலுங்கு படங்களின் கால்ஷீட்டை மிகச்சரியாக கவனித்து வந்தார் சித்ரா லாட்சுமணன். பிறகு, சரசம்மாவிடம் பாரதிராஜா, "ராதாவுக்கு சித்ரா லட்சுமணன் பாதுகாப்பாக இருப்பார், எந்த சிக்கலும் வராது, என்னை நம்புங்கள்" என்று உறுதி தந்துள்ளார்..

அந்தவகையில், ராதாவின் அத்தனை நடவடிக்கைகளையும், சித்ரா லட்சுமுணன் மூலம் கண்காணித்தார் பாரதிராஜா.. ராதா விஷயத்தில் மட்டுமே இப்படி சிரமம் எடுத்துக்கொண்டார். இதற்கு பிறகு, ஒரு பெரிய அரசியல் தலைவருக்கு ராதாவை அறிமுகப்படுத்தியது பாரதிராஜாதான்.. அதற்கு விலையாகவே ஏஆர்எஸ் கார்டன் தரப்பட்டது" என்றெல்லாம் அந்த பேட்டியில் சொல்லியிருக்கிறார் தமிழா தமிழா பாண்டியன்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+