சிம்ரன் பட்ட பாடு கொஞ்ச நஞ்சமா? நக்மாவை வச்சி ஈஸியா நடிக்க வந்தவர் ஜோதிகா! அதுக்கு இப்படியா: பிரபலம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: பத்திரிகைகளில் வெளியாகும் அட்டைப்படங்களை வைத்துதான் அப்போதெல்லாம் பெரும்பாலும் நடிகைகளை தேர்வு செய்வார்கள்.. ஆனால், பத்திரிகையில் அட்டைப்பட பட வாய்ப்புகூட ஆரம்பத்தில் சிம்ரனுக்கு கிடைக்கவில்லை. பாலிவுட்டில் அந்த அளவுக்கு சீக்கிரத்தில் வாய்ப்பு கிடைக்காது.. அப்படியே கிடைத்தும், அவரால் அங்கு நிலைக்க முடியவில்லை. இப்படி கஷ்டப்பட்டுதான் சிம்ரன் சினிமாவில் உயர்ந்தார்" என்று மூத்த பத்திரிகையாளர் செய்யாறு பாலு கருத்து தெரிவித்துள்ளார்.

3 நாட்களுக்கு முன்பு விருது வழங்கும் விழா ஒன்றில் பங்கேற்ற சிம்ரன், "என்னுடைய சக நடிகைக்கு ஒருமுறை, உங்களை அந்த கேரக்டரில் பார்த்தது சர்ப்ரைஸாக இருந்தது என்று மெசேஜ் செய்தேன். உடனே அவர் ஆண்ட்டி ரோலில் நடிப்பதைவிட இந்த ரோல் சிறந்தது என்று எனக்கு பதில் அனுப்பினார்.

Television Simran Jyothika

சிம்ரன் சொல்வது யாரை

அவரது பதில் எனக்கு ஷாக்கிங்காக இருந்தது.. 20, 25 வயதுக்காரர்களுக்கு அம்மாவாக நடிப்பதில் தவறில்லை.. என்னைப் பொறுத்தவரை டப்பா ரோல்களில் நடிப்பதைவிடவும் ஆண்ட்டி ரோலில் நடிக்கலாம் என்றெல்லாம் சிம்ரன் பேசியிருந்தார். சக நடிகை என்று சொன்னாரே தவிர, எந்த நடிகையின் பெயரையும் சிம்ரன் குறிப்பிடவில்லை..

எனினும், சிம்ரனின் இந்த பேச்சு சலசலப்பையும், பரபரப்பையும் தந்துவிட்டது. சிம்ரன் சொல்வது எந்த நடிகையை? டப்பா கார்ட்டெல் என்ற வெப்சீரிஸில் நடித்திருப்பது ஜோதிகாதான், அதனால் சிம்ரன் சொல்வது அவரது சகநடிகை ஜோதிகாவைத்தான் என்று சோஷியல் மீடியாவில் கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள்.

சிம்ரனுக்கு வாய்ப்பு

இந்நிலையில், Cheyyaru Balu என்ற யூடியூப் சேனலில் பேசிருக்கும் செய்யாறு பாலு, "சிம்ரன் ஆகச்சிறந்த நடிகை என்பதில் மாற்றுக்கருத்தில்லை.. சினிமா பின்புலமே இல்லாமல் போராடி வந்தவர் சிம்ரன்.. பஞ்சாப்பை சேர்ந்தவர் ரிஷிபாலா என்ற சிம்ரன்..

ஆரம்பத்திலிருந்தே இந்தி சினிமாவில் நடிக்க ஆர்வம் கொண்டிருந்தவர் சிம்ரன். ஆனால், சிம்ரனின் முகம் இந்தியில் நடிக்கக்கூடிய முகம் கிடையாது.. தென்மாநில முகம் போலவே இருப்பது அவருக்கு அங்கு மைனஸாகியிருக்கிறது.. நிறமும் மாநிறம்தான்.. எனினும், சினிமா ஆசையால, பஞ்சாபிலிருந்து மும்பைக்கு வந்து சிம்ரன் குடும்பத்தினர் தங்கினார்கள்.

அட்டைப்பட வாய்ப்பு

அட்டைப்படத்தை வைத்துதான் அப்போதெல்லாம் நடிகைகள் தேர்வு செய்வது பெரும்பாலும் நடைபெறும்.. ஆனால், பத்திரிகையில் அட்டைப்பட பட வாய்ப்புகூட சிம்ரனுக்கு கிடைக்கவில்லை. பாலிவுட்டில் அந்த அளவுக்கு சீக்கிரத்தில் வாய்ப்பு கிடைக்காது..

அதனால் வேறுவழியின்றி, சூப்பர் ஹிட் முக்காப்புலா என்ற டாப் 10 மூவிஸ் என்ற நிகழச்சியை தூர்தர்ஷனில் தொகுத்து வழங்கினார்.. இதன்மூலம் இந்திப்படத்தில் வாய்ப்பு கிடைத்தது.. ஆனால் முதல்படமே வரலாறு காணாத தோல்வி..

அதன்பிறகுதான் தென்மாநிலம் பக்கம் கவனத்தை செலுத்தினார். விஐபி, நேருக்கு நேர் என்ற 2 படமும் ஒன்றாக வெளிவந்தது.. வாலி படமும் ஹிட்டானது. இதே வாலி பட கேரக்டரைதான், குட் அண்ட் பேட் அக்லிபடத்தில் நடித்திருப்பார்.

ஆண்ட்டி ரோல்

எனக்கு தெரிந்து இந்த கேரக்டரைதான், சக நடிகைக்கு சிம்ரன் மெசேஜில் சொல்லி, அந்த கடுப்பில்தான், ஆண்ட்டி ரோல் என்று சகநடிகை பதிலளித்துள்ளார்.. அந்த சக நடிகை யாரென்று தெரியவில்லை..

ஒருவேளை அது ஜோதிகாவாக கூட இருக்கலாம்.. அதுக்காக ஜோதிகா ஒன்றும் சோடைபோகும் நடிகை கிடையாது.. பிரமாதமான நடிகை.. அன்று நக்மாவை வைத்து, கஷ்டப்படாமல் சினிமாவில் மேலே வந்தவர் ஜோதிகா. ஆனால், நடிகையாவதற்கு முட்டிமோதி பாடுபட்டு வந்தவர் சிம்ரன்.. சினிமாவில் நெளிவு சுளிவுகளை கற்றுக் கொண்டவர் சிம்ரன். இதற்கு எத்தனையோ உதாரணங்கள் உள்ளன..

ஆண்ட்டி என்று சிம்ரனை கிண்டல் செய்தது ரம்பாவா? லைலைவா? ஜோதிகாவா தெரியவில்லை.. ஆனால், யாராக இருந்தாலும், அப்படி பேசியது நாகரீகமற்றது. அதேபோல, டப்பா நடிகை என்று மறைமுகமாக சொல்லாமல், சம்பந்தப்பட்ட சகநடிகையின் பெயரை, சிம்ரன் நேரடியாகவே சொல்லியிருக்கலாம்" என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+