நிக்சனுடன் நெருக்கம்.. கதறிய குடும்பம்.. அது இருக்கட்டும்.. ஐஷு எவ்வளவு சம்பளம் வாங்கினார் தெரியுமா?
சென்னை: பிக் பாஸ் 7 சீசன் நிகழ்ச்சியில் ஐஷு எவ்வளவு சம்பளம் வாங்கினார் என்பது தொடர்பான விவரங்கள் வெளியாகி உள்ளன.
பிக் பாஸ் சீசன் 7 விறுவிறுப்பாக சென்று கொண்டு இருக்கிறது. இந்த சீஸனின் தொடக்கத்தில் கொஞ்சம் மெதுவாக சென்ற சீசன் பிரதீப் வெளியேற்றத்தில் இருந்து சீசன் சூடு பிடித்து உள்ளது. பிக் பாஸ் சீசன் 7ல் அடுத்தடுத்து அதிர்ச்சி சம்பவங்கள் நடந்து வருகின்றன. இந்த சீசனில் நடிகை மாயா மீது பல்வேறு புகார்கள் வைக்கப்பட்டு வருகின்றன. ஆள் சேர்த்துக்கொண்டு உள்ளே இருப்பவர்கள் மீது ஆதிக்கம் செலுத்துகிறார் என்பது முதல் புகார்.

அதாவது உள்ளே இருப்பவர்களை கூட்டு சேர்த்து கொண்டு bully செய்கிறார் என்பது முதல் புகார். அதிலும் அர்ச்சனா உள்ளிட்டவர்களை கடுமையாக பேசுகிறார். விசித்திராவை வீழ்த்த கடுமையாக சதித்திட்டங்களை தீட்டுகிறார் என்றும் கூட புகார்கள் வைக்கப்படுகின்றன. இடையில் பிரதீப் வெளியேறியதற்கு கூட இவர் மீதுதான் விமர்சனங்கள் வைக்கப்பட்டன.
ஐஷு: அதிலும் இவரின் குழுவில் இருந்த முக்கியமான ஆள் ஐஷு. இவரும் சேர்ந்துதான் பிரதீப்பிற்கு எதிராக புகார்களை அடுக்கினார் . பிரதீப் ரெட் கார்டு கொடுத்து வெளியே அனுப்பப்பட்டது சர்ச்சையாகி உள்ளது. அவருக்கு எதிராக நடிகை மாயா உள்ளிட்டோர் உரிமை குரல் எழுப்பினார்கள். பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்று கூறி அவர் வெளியேற்றப்பட்டு உள்ளார்.
முதல்நாள் வரை பிரதீப் உடன் மாயா, பூர்ணிமா உள்ளிட்டோர் சகஜமாக பேசி வந்த நிலையில் வார இறுதியில் திடீரென இப்படி பாதுகாப்பு இல்லை என்று பேசியது சர்ச்சையாகி உள்ளது. இதில் ஐஷுவும் பிரதீப்பிற்கு எதிராக குரல் எழுப்பினார்.
குரல் எழுப்பினார்: அதேபோல் ஐஷு நிகழ்ச்சியில் நிக்சன் உடன் நெருக்கமாக இருந்தது குறிப்பிடத்தக்கது. நிக்சன் உடன் அவர் காதலில் இருந்ததாக புகார் வைக்கப்பட்டது. அதிலும் அவர் நெருக்கமாக பழகிய சில காட்சிகள், கண்ணாடி வழியாக முத்தம் கொடுத்தது போன்ற விஷயங்கள் கடுமையான விவாதங்களுக்கு, சர்ச்சைகளுக்கு உள்ளானது.
அதோடு இல்லாமல்.. ஐஷுவை அவரின் பெற்றோர்களே வெளியே வர சொன்னதாக புகார் வைக்கப்பட்டது. ஐஷு எலிமினேட் ஆகவில்லை. அவருக்கு பதில் பூர்ணிமாதான் எலிமினேட் செய்யப்பட்டு இருக்க வேண்டும். அவருக்கு பதிலாக ஐஷுவை எலிமினேட் செய்ய வேண்டும் என்று அவரின் பெற்றோர்தான் கோரிக்கை வைத்ததாக கூறப்படுகிறது.
ஐஷு எலிமினேட்: இதையடுத்தே ஐஷு எலிமினேட் செய்யப்பட்டதாக செய்திகள் வந்துள்ளன. இந்த நிலையில்தான் பிக் பாஸ் 7 சீசன் நிகழ்ச்சியில் ஐஷு எவ்வளவு சம்பளம் வாங்கினார் என்பது தொடர்பான விவரங்கள் வெளியாகி உள்ளன.

42 நாட்கள் பிக்பாஸ் வீட்டில் இருந்த ஐஷு இருந்துள்ளார். கடைசியாக எலிமினேட் செய்யப்பட்ட நாளையும் சேர்த்து 42 நாட்கள் அவர் உள்ளே இருந்தார். மொத்தமாக ரூ. 6 லட்சத்து 30 ஆயிரம் வரை சம்பளம் பெற்றுள்ளதாக கூறப்படுகிறது. அதாவது ஒரு நாளுக்கு 15 ஆயிரம் ரூபாய் அவர் சம்பளம் வாங்கி உள்ளார்.
இந்த சம்பளம் என்பது அடிப்படை பிக் பாஸ் 7 சம்பளம் ஆகும். பலருக்கும் இதே சம்பளம் கொடுக்கப்பட்டு உள்ளது. அதே சம்பளத்தை வாங்கிக்கொண்டு ஐஷு எலிமினேட் ஆகி உள்ளார் . ஆனால் இதில் 10 சதவிகிதம் டிடிஎஸ் கழிக்கப்பட்டு 5.66 லட்சம் மட்டுமே கொடுக்கப்படும் என்று தகவல் வெளியாகி உள்ளது.
-
கார் ஓட்டுநரின் மகனுக்கு சீட்! எங்கயோ இடிக்குதே! விஜய்யின் ரியல் எஸ்டேட் தொழில் குறித்து ஷாக் தகவல் -
மகளிர் உரிமை தொகை கிடைக்காது.. ஆனாலும் நாளை முதல் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கு வரும்? -
காற்றழுத்த தாழ்வு பாதை.. பிச்சு உதறப் போகும் மழை.. இடி, மின்னலுடன் கொட்டப் போகுது! -
திமுக-அதிமுக இடையே கடும் போட்டி.. ஆட்சியை பிடிப்பது யார்? ஆட்டத்திலேயே இல்லாத தவெக! புதிய சர்வே -
யார் அந்த அதிர்ஷ்டசாலி? நகைக்கடை, விவசாயக்கடன் தள்ளுபடி, மாதம் 10000 சலுகை? விவசாயிகளின் செம திட்டம் -
சொதப்பிட்டீங்களே.. இப்போ பாருங்க போக முடியல.. கடுப்பான விஜய்.. காரணம் புஸ்ஸி, ஆதவ்? என்னாச்சு? -
திடீரென வீடியோ வெளியிட்டு மதுரை மத்திய தொகுதி வேட்பாளர் சுந்தர் சி உருக்கம்! பிடிஆர் இருக்காரே! -
சிலிண்டர் ஏஜென்சி வைத்திருக்கும் நண்பனின் தந்தைக்கு மாதம் 1.90 லட்சம் வருமானம்.. நெட்டிசன் தகவல் -
Free Fridge: அதிமுகவின் இலவச பிரிட்ஜ்! யாருக்கெல்லாம் கிடைக்கும்? எவ்வளவு ரூபாய்க்கு இருக்கும்? -
எவ்வளவு வேகம்! சிட்டிக்கு நடுவே வளர்ந்து நிற்கும் ஸ்டீல் ராட்சசன்.. சென்னையின் காஸ்ட்லி ப்ராஜெக்ட் -
ஸ்டாலின் தான் சிறந்த CM வேட்பாளர்.. பின்னாலேயே துரத்தும் எடப்பாடி.. விஜய்க்கு அதிர்ச்சி! புதிய சர்வே -
தவெகவில் விஜய்க்கு அடுத்ததாக அதிக சொத்து உள்ள நபர் இவரா? அதுவும் இத்தனை கோடி! ஆச்சரியத்தில் நெட்டிசன்கள்












Click it and Unblock the Notifications