நிகிதாவின் 4 கணவன்களும் தெரிந்தே எப்படி? காரில் தங்க நகைகள் இருந்ததா? உண்மை வெளிவரும்: பிரபலம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: நிகிதா காரில் உண்மையிலேயே தங்க நகைகள் இருந்ததா? இல்லையா? என்பதை விசாரிக்க வேண்டும்.. ஒரு புகார் சொன்னதாலேயே, ஒரு உயிர் போயிருக்கிறது என்றால், அதற்கான உத்தரவை பிறப்பித்தது யார்? நிகிதாவின் பின்னணியில் உள்ள சக்தி எது? என்றெல்லாம் கேள்விகள் சோஷியல் மீடியாவில் எழுந்தவண்ணம் உள்ளன.. இதே கேள்வியைதான், முன்னாள் எம்எல்ஏ பாலபாரதியும் கேட்டிருந்தார். தற்போது மூத்த அரசியல் விமர்சகரும், டாக்டருமான காந்தராஜூம் பேட்டி ஒன்றில் கேட்டுள்ளார்.

கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் எம்எல்ஏவுமான பாலபாரதி, நிகிதா குறித்து ஒரு கேள்வி எழுப்பியிருந்தார்.. அதில், "சிவகங்கையை சேர்ந்த அஜித்குமார், தனிப்படை போலீஸார் விசாரணைக்கு அழைத்துச் சென்றபோது மரணமடைந்தார். இவர் மீது புகார் தந்த நிகிதா, திண்டுக்கல்லில் உள்ள MVM அரசு மகளிர் கலைக் கல்லூரியில் தாவரவியல் துறைத் தலைவராக பணிபுரிந்து வருபவர்.

பல்வேறு பரபரப்புகளுக்கு இடையே கடந்த வாரம் கல்லூரிக்கு சென்று மாணவிகளுக்கு வகுப்புகள் எடுத்துள்ளார் நிகிதா.. எந்த குற்ற உணர்வும் இன்றி திண்டுக்கல் அரசு கல்லூரிக்கு நிகிதா வந்து செல்வதை தமிழக அரசு எப்படி அனுமதிக்கிறது?

அரசு எப்படி அனுமதிக்கிறது?

நிகிதா மீது ஏகப்பட்ட புகார்கள் உள்ளன. தமிழக அரசு எந்தவித நடவடிக்கையும் அவர் மீது எடுக்கவில்லை. அவர் ஒன்றுமே செய்யாதது போல் இயல்பாக வந்து செல்கிறார். இவர் கொண்டு சென்ற நகை உண்மையிலேயே காணாமல் போனதா என்பது குறித்து விசாரணை நடத்த வேண்டும்.

அவரது செயல்பாட்டை எப்படி அரசு வேடிக்கை பார்த்துக் கொண்டுள்ளது? மாநில அரசு ஏன் இவர் மீது குறைந்தபட்ச விசாரணை கூட நடத்தவில்லை என்பது கேள்விக்குறியாக உள்ளது. வலுவான பின்புலத்தில் அவர் உள்ளதாகவே தெரிகிறது” என்றெல்லாம் காட்டமாக கூறியிருந்தார். பாலபாரதி கூறிய அதே கருத்தைதான், டாக்டர் காந்தராஜூம் பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்..

சக்தி வாய்ந்தவர்

Retro Voice என்ற யூடியூப் சேனலுக்கு பேட்டி தந்துள்ள டாக்டர் காந்தராஜ், "நிகிதாவுக்கு பெரிய பின்னணி உள்ளது.. நாம் நினைத்ததைவிடவும் சக்திவாய்ந்தவராக இருக்கிறார். இல்லாட்டி போனால்,புகார் தந்ததுமே, ஒரு உயிர் போயிருக்குமா? சாதாரண நகை திருட்டு சம்பவம் இது.. கொலை வரை சென்றிருக்கிறது என்றால் என்ன அர்த்தம்? முதல்ல, காரில் நிகிதாவின் நகை இருந்ததா? இல்லையா? என்பதற்குகூட ஆதாரம் இல்லை.

அஜித்குமாரை யாரோ தீர்த்துக்கட்ட சொல்லியிருக்கிறார்கள்.. இதுபோன்ற எண்ணமெல்லாம் டிவி சீரியல்களிலிருந்து வருவதுதான்.. இவர்களை பார்த்து சீரியலில் சீன்களை வைக்கிறார்களா? அல்லது சீரியலை பார்த்து இவர்கள் செய்கிறார்களா? தெரியவில்லை..

சாத்தான் குளம் சம்பவம்

நிகிதா என்ற பெண் பயங்கரவாதி.. இவருக்கு பின்னால் உள்ள நபர்களை கைது செய்துதான் ஆக வேண்டும்.. அதற்காக காவல்துறையை மட்டுமே குறை சொல்லவும் கூடாது.. மேலும், சாத்தான் குளம் சம்பவத்தையும், அஜித்குமார் சம்பவத்தையும் ஒப்பிடக்கூடாது. சாத்தான் குளம் சம்பவத்தில் இறந்தவர்களுக்கும், போலீசுக்கும் நேரடியான சம்பந்தம் இருந்ததே, அதற்குள் அரசியல் எதுவுமே இல்லை .

செல்போன் கேட்டும் தரவில்லை என்பதற்காக, போலீஸே இழுத்து சென்று அடித்து தாக்கியதே தவிர, புகார் யாரும் தரவில்லை. எனவே அது முழுக்க முழுக்க போலீஸ் அராஜகம்தான். ஆனால், அஜித்குமார் சம்பவத்தில் போலீஸ் பின்னாடி, சக்திவாய்ந்த பெண் இருக்கிறார்.. அந்த பெண்ணுக்கு, அந்த சக்தியை யார் தந்தது? என்பதுதான் கவனிக்க வேண்டும்..

நிகிதா திருமணங்கள்

ஒரு அப்பாவியையே அடித்து கொன்றிருக்கும்போது, நிகிதாவை திருமணம் செய்த கணவன்மார்களும் புகார்களை சொல்வது ஆச்சரியமில்லை.. எனவே, இந்த விஷயத்தில் தோண்ட தோண்ட பல பயங்கரங்கள் வரலாம்.. 4 பேரை திருமணம் செய்துள்ளார்.. அந்த 4 பேருமே நிகிதாவிடம் ஏமாந்துள்ளார்கள்.. நிகிதா பிடிபட்டால், அவருக்கு தண்டனை கிடைக்க வேண்டிய அவசியம் இல்லை..

நிகிதாவை 4 பேர் திருமணம் செய்துள்ளார்கள்.. ஒரு திருமணம் விவாகரத்து முடிந்தபோதே, அடுத்ததாக திருமணம் செய்ய போகிறவர், எதற்காக விவாகரத்து என்று விசாரித்திருக்க மாட்டாரா? இத்தனை பேர் அடுத்தடுத்து திருமணம் செய்திருக்கிறார்கள் என்றால், தன்னை சக்தி வாய்ந்தவராக நிகிதா திகழ்ந்திருக்கிறார்' என்று தெரிவித்துள்ளார்.

வேலை வெட்டி கிடையாது

சமுதாயத்தில் இப்படி முறைகேடுகள், அநியாயங்கள் நடைபெற காரணம், இதற்கெல்லாம் காரணம், இன்று பலருக்கும் வேலையில்லை. இலவசங்கள்தான் தரப்பட்டு வருகிறதே தவிர, வேலைவாய்ப்புக்கான எந்த விஷயமும் மத்தியிலும், மாநிலத்திலும் நடக்கவில்லை..

மாறிவரும் அறிவியல் உலகில், எந்த வேலையுமே நிரந்தரம் என்று தெரியாமல் பலரும் சும்மா உட்கார்ந்துள்ளனர். உழைக்கும் சக்தியிருந்தும், இளைஞர்களுக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை.இதில் வெட்டியாக பொழுது போக்குபவர்கள் மட்டும்தான், தவறான செயல்களில் இறங்கி, வதந்திகளை பரப்பிக் கொண்டு நேரத்தை வீணடித்து கொண்டிருக்கிறார்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+