Rasaathi Serial: இந்த ராசாத்தி பொண்ணை நம்பி எப்படி நிச்சயதார்த்தம் எல்லாம்...?

Subscribe to Oneindia Tamil

சென்னை: சன் டிவியின் ராசாத்தி சீரியலில் முணுக்கென்றால் அண்ணன், அண்ணி என்று ஓடும் ராசாத்தியை நம்பி சவுந்திரவல்லி தன் தம்பி பாண்டியனுக்கு ராசாத்தியை நிச்சயம் பண்ணி வைக்கறாங்க. அதுவும் வீடியோ கால் மூலமாக.

வெளிநாட்டில் மாப்பிள்ளை இருந்தால், அல்லது பெண் இருந்தால், வீடியோகால் மூலமாக நிச்சயதார்த்தம் செய்துக்கொள்வார்களாம். அப்படி இதையும் நினைச்சுக்கோ என்று ராசாத்தியிடம் சொல்லி, தேவயானி இங்கே பாண்டியனுடன் நிச்சயதார்த்தம் செய்யறாங்க.

சிந்தாமணி தனது வீட்டில் நேரில் ராசாத்தியை வச்சுக்கிட்டு, வல்லரசுவுடன் நிச்சயதார்த்தம் செய்யறாங்க.அது சரி ஹீரோ பாண்டியன், ஹீரோயின் ராசாத்தி... கல்யாணம் எப்படியாவது நடக்கத்தானே செய்யும்!

ஒரு கல்யாணம்

ஒரு கல்யாணம்

சிந்தாமணியின் பெண்ணுக்கு கல்யாணம் நடக்கவே இழு இழுன்னு இழுத்துகிட்டு இருந்த நிலையில், ஞாயிறு அன்று சன் டிவி ஒதுக்கித் தந்த சிறப்பு ஒரு மணி நேரத்தில்தான் இந்த கல்யாணத்தை ராசாத்தி சீரியலில் நடித்து முடித்தார்கள். இப்போது இந்த இரண்டாவது கல்யாணத்துக்கும் இழுவை தாங்க முடியலை. ஆனால், இது ஹீரோ ஹீரோயின் கல்யாணம் என்பதால், இந்த இழுவையை முடிக்க எல்லாம் சிறப்பு நேரத்தை ஒதுக்கித்த தர மாட்டார்கள்.

போஸ்டரில் கூட

போஸ்டரில் கூட

ராசாத்தி சீரியல் ஆரம்பித்த முதல் எபிசோடில் நடிகர் விஜயகுமார் நடித்து இருந்தார். இரண்டு மூன்று எபிசோட் இப்படி நல்லாவே இருந்தது. அதற்குப் பிறகு இவரை கொலை செய்துவிட்டார்கள். சீரியல் பிளஸ் என்று இருந்த விஜயகுமார் போஸ்டரில் மட்டுமே இருந்தார். இப்போது ஹீரோயின் பெங்காலி பெண்ணை புதுசாக கொண்டு வந்து நடிக்க வைத்து இருக்கும் நிலையில், இவர் தேவயானி, விசித்திரா,ஹீரோ மட்டும் போஸ்டரில் இருக்கிறார்கள். போஸ்டரிலும் விஜயகுமார் இல்லை என்பதால், விஜயகுமார் இனி ஃபிளாஷ் பேக்கில் கூட வரமாட்டார் என்கிற நிலை.

நடிகை விசித்திரா நடிகை தேவயானி

நடிகை விசித்திரா நடிகை தேவயானி

நடிகை விசித்திரா நடிகை தேவயானி இருவருக்கும்தான் இப்போது கதையில் முக்கிய வேடம். ராசாத்தியின் வாழ்க்கைத் துணை விசித்திரா தேர்ந்தெடுக்கும் மாப்பிள்ளையா, இல்லை தேவயானியின் தம்பி, ராசாத்தி காதலிக்கும் பாண்டியனா என்று ஒரு எதிர்பார்ப்பில் இப்போதைக்கு சீரியல் கதை நன்றாகத்தான் சென்றுக்கொண்டு இருக்கிறது. ஆனால், இந்த கல்யாணத்தை வைத்து ஜவ்வு மாதிரி இழுப்பது என்னவோ பார்க்க போரடிக்குது.

லைட் மேக்கப் ஹெவி மேக்கப்

லைட் மேக்கப் ஹெவி மேக்கப்

தேவயானியும், சீரியலின் நாயகி ராசாத்தியம் கூட லைட் மேக்கப்பில்தான் இருக்கிறார்கள், கிராமத்தில் ஜமீன்தாரிணியாக நடிக்கும் விசித்திராவுக்கு ஹெவி மேக்கப், அதே ஜமீன்தாரிணி கதாபாத்திரத்தில்தான் தேவயானியும் நடிக்கிறார். இடத்துக்குத் தகுந்தபடி கதாபாத்திரங்களின் மேக்கப் இருக்க வேணாமா? விசித்திராவுக்கு மட்டும்தான் சீரியலில் அதிக மேக்கப். இதை கவனித்து சரி செய்தால் தேவலை.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+